சற்று முன்தான்
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி
அடிக்கடி பார்க்கும் சாவுதான்
இரண்டு நாளுக்குப் பிறகு
மீண்டும் ஒரு பெரிய காக்கை
இறந்துக் கொண்டிருக்கிறது
அலகு திறப்பதும் மூடுவதுமாக
இறுதி கணங்களின் துடிப்பு
குச்சி கால்களிலும் இறக்கைகளும்
குறுக்கும் நெடுக்குமாய்
படபடத்துப் பறந்தபடி
அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல்
சக காக்கைகள் ஓலமிட்டு
பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு காக்கை காக்கையாக சாவதை
இவர்களுடன்
ஏழு மாடி ஜன்னல்களிலும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
பித்ருக்களின் உறவினர்களும்
காக்கை காக்கையாக
சாவதை