துளி : 48 – இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் – 1

அழகியசிங்கர்



நான் இருக்குமிடத்தில் குளிர் போய்விட்டது.  எப்போதும் காலை 10 மணிக்குமேல் சென்றாலும் குளிர் அடிக்கும்.  நகர முடியாது.  ஆனால் இப்போதோ காலை 8 மணிக்கே தாங்க முடியாத வெயில்.
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில்தான் வெளியில்  செல்வோம்.  போன சனி ஞாயிறுகளில் 2 முக்கியமான இடங்களுக்குச் சென்றோம்.  
காலையில் 8 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  கார்.  அரவிந்த் (என் பையன் பெயர்) காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.  மலைகள் சூழும் இடத்தில் வண்டி சென்றுகொண்டிருந்தது.  நடுவில் சாலை.  இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மலைகள்.  பூமியிலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சிக்குச் சென்றோம்.  நாங்கள் சென்றது சனிக்கிழமை மதியம் மேல்.  ஒரே கூட்டம்.  கிரான்ட் கென்யான் என்று அந்த இடத்திற்குப் பெயர்.  பெரிய பள்ளத்தாக்கு என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  அதைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டேன்.   பெரிய பள்ளம்.  பள்ளத்தில் பாறைகள். அந்தப் பள்ளமும் நீண்ட பள்ளமுமாக இருக்கிறது.  பெரிய விஸ்தாரமான பள்ளம்.  
மாலை நேரத்திற்கு மேல் அங்கிருப்பது தவறு என்று எங்களுக்குத் தோன்றியது.  குளிர் தாங்க முடியவில்லை.  
நாங்கள் பயணம் செய்ததை ஒளி வடிவத்தில் காணும்படி கேட்டுக்கொள்கிறேன். 

துளி : 41 – ஒரு சிறிய ஆவணப்படம்

அழகியசிங்கர்

7ஆம் தேதி காலையில் 9 மணிக்குக் கிளம்பி விட்டோம்.  செடோனோ என்ற இடத்திற்கு.  அரவிந்த் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.  கையில் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.  சுற்றிலும் மலை. செங்கல் நிறத்தில் தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. பல மணிநேரம் காரில் பயணம். ஒரு இடத்தில் கற்களின் மீது கால் வைத்து வைத்து நடக்க   வேண்டியிருந்தது.  அப்படியே நடந்து சென்று பார்த்தபோது சலனமில்லாமல் ஆறு போய்க்கொண்டிருக்கிறது.  அதில் பலரி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.   நான் எல்லாவற்றையும் கையில் வைத்திருந்த சோனி காமெரா மூலம் படம் எடுத்துக்கொண்டு வந்தேன்.  ஆனால் காமெராவிலிருது கணினிக்கு மாற்றும் சிறிய ஒயரை ராகவன் காலனியில் விட்டுவிட்டு வந்தேன்.  என்ன செய்வதென்று தெரியவில்லை.  இங்கே அதுமாதிரியான ஒயர் கிடைக்குமா என்ற கேள்வி கடந்த 1 மாதத்திற்குமேல் என்னை குடைந்துகொண்டிருந்தது.  சென்னையில் இதுமாதிரி நிலமை வந்தால், அங்கும் இங்கும் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  ஒரு வழியாக என் பையன் (அரவிந்த்) வாங்கிக்கொண்டு வந்தேன்.  இதோ காமெராவிலிருந்து ஒரு காட்சியை உங்களுக்கு ஒளிபரப்புகிறேன். வீட்டிற்குத் திரும்பும்போது மணி 9.30 ஆகிவிட்டது.  

சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது – கடைசிப் பகுதி அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த மாதம் ஆதவன் குறித்து.


அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம்.  இந்த மாதம் ஆதவன் குறித்து.


சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது – முதல் பகுதி

அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம்.  இந்த மாதம் ஆதவன் குறித்து.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …28

அழகியசிங்கர்

பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார்.  அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.  குவிகம் வெளியீடு.  விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

https://youtu.be/rMKL05CdPfM

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …28

அழகியசிங்கர்

பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார்.  அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.  குவிகம் வெளியீடு.  விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …20

அழகியசிங்கர்

இன்றைய புத்தகக் காட்சியில் என் நண்பர் எஸ்.வி வேணுகோபாலன் கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து மொழிப் பெயர்த்த தெலுங்குக் கதைகளின் ஒன்றாவது பகுதியைப் பற்றி பேசுகிறார்.

இன்றைய கூட்டம்


அழகியசிங்கர்

அம்ஷன் குமாரின் 'ஆவணப்பட இயக்கம்' புத்தகம் குறித்து இன்று அஜயன் பாலா பேசியதை இங்கு ஒளிபரப்பு செய்கிறேன்.



நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12 இரண்டாம் பகுதி

இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் விதம் ஒரு சிறிய புத்தக அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளேன். முதல் நாளான இன்று ‘எதையாவது சொல்லட்டுமா?’ என்ற கட்டுரைத் தொகுதியைப் பற்றி நண்பர் செந்தூரம் ஜெகதீசன் பேசிய இரண்டாம் பகுதியைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12

அழகியசிங்கர்

இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் விதம் ஒரு சிறிய புத்தக அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளேன். முதல் நாளான இன்று ‘எதையாவது சொல்லட்டுமா?’ என்ற கட்டுரைததொகுதியைப் பற்றி நண்பர் செந்தூரம் ஜெகதீசன் பேசியதைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.