விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 50 – பிரபு 1,2 and 3

அழகியசிங்கர்

காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார்   சைக்கிள் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரபு மையிலாடுதுறை அவர்கள் நேற்று (21.09.2019) பேசிய உரையை 3 பகுதிகளாக இங்கு தருகிறேன்.



சில கேள்விகள் சில பதில்கள் – தேவிபாரதி 1, 2…

தொடர்ந்து 4 படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்தேன்.  ஈரோடில்.  நாலாவதாக நான் சந்தித்த எழுத்தாளர் தேவிபாரதி.  அவர் பேசியதைக் கேட்கும்போது உண்மையிலேயே மெய் மறந்து கேட்டோம்.  பேட்டி முடியும் தறுவாயில் காமெரா பேட்டரி முடிந்து விட்டது.  

சில கேள்விகள் சில பதில்கள் – ஷாஅ

அழகியசிங்கர்

இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 23 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். மூன்றாவதாக ஷாஅ அவர்களைப் பேட்டி எடுத்தேன்.  என் நெடுநாளைய நண்பர் இவர்.  தான் உண்டு கவிதை உண்டு என்று இருப்பவர்.  இவர் இயல்புபடி ரொம்ப வருடங்கள் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாமல் இருந்தவர்.   இயற்பெயர் அப்துல் அஜிம். சேலத்தில் வசிக்கிறார் 


சில கேள்விகள் சில பதில்கள் – அழகிய பெரியவன்

அழகியசிங்கர்

இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக நான் எடுத்தப் பேட்டி அழகிய பெரியவனுடையது.

‘கஸ்தூர்பாபா ஒரு நினைவுத் தொகுப்பு’

19.06.2019 அன்று தக்கர்பாபா வளாகத்தில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் சுசிலா நய்யரின் ‘கஸ்தூர்பாபா ஒரு நினைவுத் தொகுப்பு’
(மொழி பெயர்த்தவர் பாவண்ணன்) என்ற மொழிபெயர்ப்பு நூலின்
அறிமுக உரை)

www.youtube.com/watch?v=FxXk7-ANE5c 1

www.youtube.com/watch?v=1WWaIQuPAsc 2

www.youtube.com/watch?v=Exd0gHc4VII 3

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 3 

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் கடைசிப் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்


பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 1


பிரெஞ்சு இலக்கியமும் நானும்

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். 

அழகியசிங்கர்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 20 – எழுத்தாளர் ஒரு அரிசோனன் பதில் அளிக்கிறார்

அழகியசிங்கர்

பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்தவுடன் இங்கே வசிக்கும் தமிழ் எழுத்தாளர் பேட்டியை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.  1982ஆம் ஆண்டில் படிப்பதற்கு அமெரிக்கா வந்த மகாதேவன் இங்கேயே இருந்து விட்டார்.  ஒரு அரிசோனன் என்ற புனை பெயரில் கதைகள், கவிதைகள், சரித்திர நாவல்கள் எழுதி உள்ளார். சிறுகதைத் தொகுப்பும், சரித்திர நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இதோ அவருடைய பேட்டி.

துளி : 48 – இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் – 2

அழகியசிங்கர்



உலக அதிசயங்களில் ஒன்றான இடமாகத்தான் நான் கிரான்ட் கென்யான் என்ற இடத்தைக் காண்கிறேன்.  இந்த இடத்தின் முடிவில் முழுக்கக் கல்லால் ஆன காப்பி குடிக்கும் இடம்.  100 வருடங்களுக்கு முன்னால்  இந்த இடத்தைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டி இறுதியில் இந்தக் கல்லால் ஆன ஓட்டலில் காப்பி குடிப்பாராம்.  அதனால் இந்த இடம் பிரபலமானது என்று சொல்கிறார்கள்.
கிராண்ட் கென்யானில் உள்ள ஓட்டலில் இரவு தங்குவது அதிக அளவிற்கு வாடகைத் தரவேண்டும் என்பதால்  வ்ளாக் ஸ்டாவ் என்ற இடத்தில் உள்ள டேஸ் இன் என்ற ஓட்டலில் தங்கினோம்.  கிôôன்ட் கென்யான் கிட்டத்தட்ட 100 மைல் தூரத்தில் இந்த ஓட்டல் இருந்தது.  
அங்கிருந்து நாங்கள் கிளம்பி சென்ற இடம் லாஸ் வேகாஸ் என்ற இடம்.   24 மணி நேரமும் ஒரு நகரம் விழித்துக்கொண்டிருக்குமென்றால் அது லாஸ் வேகாஸ் என்ற இடம்தான்.  
பெரிய பெரிய ஓட்டல்கள்.  மேல்நாட்டு இசையின் சப்தம். கூடவே சூதாட்டம்.  110 மாடிகள் கொண்ட ஸ்டாராட்ஸ்பியர் என்ற 5 நட்சத்திர ஓட்டல்.  நாங்கள் 7வது மாடியில் உள்ள அறையில் இருந்தோம்.  பிரமிப்பாக இருந்தது. அன்று இரவு 108வது மாடிக்குச் சென்று வேகாஸ் என்ற  ஊரைப் பார்த்தோம்.
குடிப்பது, சூதாட்டம் ஆடுவது என்று முழுவதும் ஒரு ஓட்டல்.  அதேபோல் இங்குள்ள வேறு சில ஓட்டல்களிலும் சூதாட்டம்.  இங்கு தெருவில் தென்பட்ட வேன்களில் ஒரு விளம்பரம்.  இரவு நேரத்திற்கு உங்கள் துணைக்குப் பெண் வேண்டுமென்றால் அணுகவும் என்று எழுதியிருந்தது.  இங்கே சில பிச்சைக்காரர்களைக் கண்டேன்.  அவர்கள் பீர் குடிக்க, கஞ்சா அடிக்க பிச்சைப் போடும்படி கேட்கிறார்கள்.
நாங்கள் வீட்டிலிருந்தே சாப்பிடுவதற்கு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்ததால், அமெரிக்கன் ஓட்டல்களில் எதுவும் சாப்பிடவில்லை.  தெருவில் அரைகுறை உடைகளுடன் பெண்கள் எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.  
இன்னும் சில ஓட்டல்களில் வெனீஸ் நகரத்திற்குப் போவதுபோல் ஓட்டலை உருவாக்கியிருந்தார்கள்.  ஒரு ஓட்டலில் பாரீஸ் நகரில் செல்வது அமைத்திருந்தார்கள்.
திரும்பவும் பீனிக்ஸ் வருவதற்கு முன் ஒரு டாலரை வைத்து நானும் சூதாட்டம் ஆடினேன்.  30 டாலர்கள் வரை  ஜெயித்தேன்.  நாங்கள் திரும்பி வரும்போது யூவர் அணையைப் பார்த்துவிட்டு வந்தோம்.  இரவு 11.30 ஆகிவிட்டது.  வீட்டைத் திறக்கலாமென்று சென்றால் வீட்டைப் பூட்டாமல் போய்விட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டோம்.  வீட்டில் உள்ள எந்தப் பொருளும் திருடு  போகவில்லை.    
121 மாடியிலிருந்து நான் கண்ட காட்சிகளைச் சிறிய காணோலி மூலம் இங்கு அளிக்கிறேன்.