6.8.2020 அன்று சா.கந்தசாமிக்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது. அன்று கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் க்ரியா ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனும் இவ்வளவு சீக்கிரமாக இறந்து விடுவார் என்று யாருமே நினைத்திருக்க முடியாது. இன்று (17.11.2020) இறந்து போன க்ரியா ராமகிருஷ்ணன் நினைவாக இந்த ஒளிப்பதிவு.
வழக்கம்போல் கவியரங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு எல்லோரும் கவிதை வாசித்தார்கள். நானும் வாசித்தேன். நெறியாளராக பானுமதி அவர்கள் செயல் பட்டார். அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை இஙகே அளிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
கிட்டத்தட்ட 20கவிஞர்களுக்கு மேல் மழை என்ற தலைப்பில் கவிதை வாசித்து அசத்தினார்கள். அந்தத் தொகுப்பை ஒளிப்பதிவு செய்து இங்கே அளிக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
அழகியசிங்கர்
கவிஞர் க.வை பழனிசாமி, தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற தலைப்பில் 06.11.2020 அன்று சிறப்பான உரை நிகழ்த்தினார். அந்த உரை தேவதச்சன் கவிதைகளை எப்படிப் படித்து உணர்வது என்று இருந்தது. சிறப்பான உரையை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
22வது சூமில் நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். உற்சாகத்துடன் பெரும்பாலோர் கவிதை வாசித்தார்கள். இவை எப்படிப்பட்ட கவிதைகள், இவற்றின் தரம் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது. வேறு வேறு விதமாய் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்கிறார்கள். அவற்றைக் கேட்போம் . ரசிப்போம்.
முபீனுடைய போஸ்டிங்கைப் பார்த்தவுடன்தான் இன்று தமிழவனின் பிறந்தநாள் என்று தெரிந்தது. ஆரம்பத்தில் பங்களூர் செல்லும்போதெல்லாம் தமிழவன், பாவண்ணன், பா.கிருஷ்ணசாமி, நஞ்சுண்டன், மகாலிங்கம், ராமச்சந்திரன் என்றெல்லாம் ஒரு இடத்தில் கூடிச் சந்தித்துக் கொள்வோம். அதன்பின் நான் அங்கெல்லாம் போகும்போது யாரையும் ஒன்றாகச் சந்திக்க முடியவில்லை. ஒரு இடத்திலிருந்து ஒரு இடம் போவது ரொம்பவும் சிரமமாகப் போய் விட்டது. யாரையாவது ஒருத்தரைச் சந்தித்தால் அவரை மட்டும் சந்திப்பதாக மாறிவிட்டது. சிலசமயம் யாரையும் சந்திக்காமல் ப்ளாசம்ஸில் புத்தகங்கள் வாங்குவதோடு நின்றுவிட்டது. ‘யாருடனும் இல்லை’ என்ற என் முதல் கவிதை கொண்டு வரும்போது எனக்குத் தயக்கம் இருந்தது. தமிழவன்தான் அணிந்துரை எழுதிக்கொடுத்தார். அப்போதுதான் புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர முயன்ற தருணம். அந்தப் புத்தகத்திற்கு தமிழவனைக் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார். அதன்பின் தமிழவனுடன் எங்காவது சந்தித்துப் பேசுவதென்றால் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார் நேரம் போவதே தெரியாது. அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம் நான் போய்ப் பார்த்துவிடுவேன். ஆனால் சமீபத்தில் அவரைச் சுற்றி கூட்டம் அதிகமாகி விட்டது. அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் கூட சென்னைக்கு வந்துவிட்டுப் போகிறாரென்று நினைக்கிறேன்.” ஆரம்பக் காலத்தில் அவருடைய புத்தகங்களுக்கெல்லாம் நான் விமர்சனக் கூட்டங்கள் சென்னையில் நடத்தியிருக்கிறேன். ஞானக்கூத்தன் கூட கலந்துகொண்டு அவர் நாவலைப் பற்றிப் பேசி உள்ளார். 2017 நவம்பர் மாதத்தில் அவரை ஒரு பேட்டி கண்டேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் கீழ். அதை இங்குத் தர விரும்புகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள்.
16.10.2020 அன்று நடந்த சூம் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் பிரமிள் கவிதைகள் குறித்து கால சுப் ரமணியம் நடத்திய உரையாடல் ஒளிப்பதிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை இங்கு அளிக்கிறோம்.
09.10.2020 அன்று சூம் வழியாக விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம். பெண் கவிஞர்கள் மட்டும் பங்குப் பெற்றனர் . அதனுடைய ஒளிப் பதிவை இங்கு தருகிறேன். அழகியசிங்கர்