முப்பத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (06.10.2019)


அழகியசிங்கர்


ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து (20.10.2019) மூன்று நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. இதோ இன்று (திங்கள்) மயிலாடுதுறை பயணம். கையில் பா.ராகவனின் ‘மெல்லினம்’ புத்தகம். இன்னும் சில புத்தகங்களையும் கொண்டு போயிருக்கிறேன். ஆனால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.
நான் ஏற்கனவே ஆரம்பித்த ‘மெல்லினம்’ என்ற பா.ராகவனின் நாவலை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். அதன்பின் இன்னொரு நாவலையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன். கையில் ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு போனேன். ராகவன் நாவலைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.


‘மெல்லினம்’ என்ற நாவல் ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. இந் நாவலைப் படிக்கும்போது கல்கி வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் போல் தோன்றவில்லை. நாவல் சொல்லும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். சிறுவர்களை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி விட்டார். ஒரு விதத்தில் இது சிறார்களின் நாவலா என்பதை ஏற்க முடியவில்லை. நாவலை எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.


நாவலில் ஜக்குவும், குட்டியும் அறிமுகமாகிற விதமே சிறப்பாக இருக்கிறது. ஜக்கு மூலம் பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துகிற விதமே சிறப்பாக இருக்கிறது.
ஜக்கு பட்டாம்பூச்சியைப் பிடித்து அதைக் கொஞ்சிவிடடு திரும்பவும் பறக்கவிடுவான். அவனுடைய அரவணைப்பில் பட்டாம் பூச்சி மயங்கி இருக்கும். நாய், பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும். ஜக்கு எப்படிப் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான் என்ற சந்தேகம் குட்டிக்கு.


குட்டியிடம் ஜக்கு சொல்கிறான் : ‘பாடம் படிக்கிறது மட்டும் போதாது குட்டி. பலதும் கத்துக்கணும். அப்பத்தான் சயின்டிஸ்டாக பொயட்டாக இன்னும் என்னென்னவாக நினைக்கிறோமோ அதெல்லாம் முடியும்,’ என்கிறான்.


ஆறாம் வகுப்புப் படிக்கும் ஜக்குவும், நான்காம் வகுப்பு படிக்கும் ககுட்டியும் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஜக்குவின் அப்பா – அம்மாவின் அறிமுகம் நடக்கிறது. ஜக்கு அப்பா குமார் குற்றச் செய்தியாளனாகச் சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன. அவனுடைய மனைவி அழகு சாதன நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறாள்.


குட்டி ஜகனைப் பார்த்துக் கேட்கிறாள் : ‘நீ எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புகிறாய்?’


ஜக்கு சொல்கிறான். ‘நான் ஒரு பட்டாம்பூச்சியாக விரும்புகிறேன்.’


ஜக்கு பட்டாம்பூச்சியுடன் பேசுகிறான், ஒரு நாயை வளர்க்கிறான். அதற்கு வெங்கடாஜலபதி என்று பெயர். மகாபலிபுரம் போய்விட்டு வந்தபின் ஒரு குரங்குடன் அவனுக்கு சகவாசம் உண்டாகிறது. அவனுடன் குரங்கு பேசுவதுபோல் வருகிறது. இதெல்லாம் நிஜமா? கற்பனைதான். கற்பனையை அப்படி எழுதுகிறார். இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமில்லைதான். ஆனால் இதை என்ன சொல்வது? மேஜிக்கல் ரியலிஸம் என்று குறிப்பிடலாமா? அந்தத் தியரியை ராகவன் நாவலில் கொண்டு வருகிறாரா? ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் தொடர்கதையாக இதைக் கொண்டு வருகிறார். பெரிய முன்னேற்றம். இயல்பான கதை கிடையாது. துணிச்சலான முயற்சி.
ஜக்கு சராசரியாக இருக்கக் கூடாது என்று கதாசரியர் நினைக்கிறார். ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.


‘சராசரிகளின் அந்தரங்கம் அநேகமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இடங்களும் பெயர்களும் சம்பவங்களும் மாறினாலும் உணர்ச்சிகள் ஒரேதரம்தான்.’
அப்பாவின் பழைய டைரிகளை எடுத்து எதாவது காலிப்பக்கங்கள் இருக்குமா என்று தேடுகிறான். அந்த டைரியில் அப்பா எழுதி வைத்ததைப் படிக்கிகாற்ன.


கல்யாணத்திற்கு முன்னால் அப்பாவிற்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் நிர்மலா. டைரி மூலம் இதைத் தெரிந்து கொண்டு விடுகிறான். அன்றிலிருந்து அவன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது. வகுப்பில் வந்தால் கூட வெறித்து எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறான். குட்டியோடு அவன் சரியாகப் பேசவில்லை. அவன் பள்ளிக்கூடத்தில் காதலைப் பற்றி ஏற்கனவே அவனுக்கு ஒரு அனுபவம் இருக்கிறது. காதலை நோய்க் கிருமியாகப் பார்க்கிறான். அப்பாவின் டைரியில் வரும் காதலை அவன் படிக்கும்போது இப்படி நினைக்கிறான். ‘வரிகளில் நிறைந்திருந்த எழுத்துகளிலிருந்து கிருமிகள் எழும்பி வந்து அவனது கண்கள் வழியே ஊடுருவி நேரே அவனது மூளையைத் தாக்கியது..’
அப்பா காதலித்த நிர்மலா அதிகப் பணம் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல நினைக்கிறாள். ஜக்கு அப்பா குமார் இதற்கு சம்மதிக்கவில்லை. தன்னுடைய அப்பா அம்மாவை தனியாக விட்டுவிட்டு வரப்பிடிக்கவில்லை. காதல் முறிந்து விடுகிறது. நிர்மலா அமெரிக்கா போய்விட்டாள்.


இந்த நாவலில் ஒரு இடத்தில் பெயர் குழப்பம் இருக்கிறது. குட்டியோடு அம்மா பெயர் காஞ்சனா. நிர்மலா என்ற பெயரி ஜெகன் அப்பா குமாரின் காதலியின் பெயர். நிர்மலா குட்டியின் அம்மா பெயராக் ஒரு இடத்தில் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. எப்படி பா.ராகவன் இந்தத் தவறை தெரியாமல் விட்டுவிட்டார்?
குட்டியிடம் ஜகன் நிறையா பொய் சொல்கிறான். அப்பா டைரியில் எழுதிய கனவை தான் கண்டதாக சொல்கிறான். பின் வயலட் புடவைக் கட்டிய மேட்டுத் தெரு பொல்லாத ஆவி ஒன்று இரவு தன் அப்பாவை பயமுறுத்துகிறது என்கிறான். யாரிடமும் சொல்லாதே என்று குட்டியை மிரட்டுகிறான். குட்டி கேட்கிறாள். ஏன் அந்த ஆவி உன் அப்பாவை மட்டும் பயமுறுத்த வேண்டும் என்று. அதற்கு ஒரு கதை சொல்கிறான்.


குட்டி ஜகன் சொன்னதையே கற்பனை செய்து ரத்தக்காட்டேரி என்று ரஞ்சனா என்ற வகுப்புத் தோழியிடம் சொல்கிறாள். ரஞ்சனா அவள் அம்மாவிடம் சொல்ல குட்டி அம்மாவுடன் ரஞ்சனா அம்மா சண்டைக்கு வந்து விடுவாள் போல் தோன்றுகிறது. சின்னவர்கள் பேசிக்கொள்வது பெரியவர்கள் சண்டையாகப் போய்விடும்போலிருக்கிறது.


ஜக்கு இரண்டாவது டூரில் தனியாக பள்ளிக்கூட ஆசிரியார்கள் மாணவர்களோடு போகிறான். மூன்று நாள். அவன் ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். வேண்டுமென்றே. அவன் அப்பாவை இறுதியில் பார்க்கும்போது அவன் குழப்பமெல்லாம் தீர்ந்து விடுகிறது.
இந்தக் கதையல் ஒன்று புரியவில்லை. ஆரம்பத்தில் குட்டி நாலாங்க்ளாஸ் படிப்பதாகவும், ஜகன் ஆறாம் வகுப்புப் படிப்பதாகவும் நாவலாசிரியர் எழுதியிருக்கிறார். இங்கேதான் லாஜிக் உதைக்கிறது. ஜகன் எட்டாம் க்ளாஸ் படிக்கிறவனாகவும் குட்டி ஆறாம் க்ளாஸ் படிக்கறவளாகவும் விவரித்தால் சரியாக இருக்கும்போல் தோன்றுகிறது. காதல் என்கிற விஷயம் சிறுவர்களிடம் எப்படிப் புகுந்து போகிறது என்பதை விவரிப்பதுதான் இந்த நாவல்

.
இந்த நாவல் 2004 ஆம் ஆண்டு கிழக்குப் பதிப்பகதில் வந்துள்ளது. அப்போது விலை ரூ.70.


விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 51


    தலைப்பு  :  வ.உ.சியும் நானும் 

சிறப்புரை :  ரெங்கையா முருகன்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        19.10.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : நூலகர் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

இருபத்தொன்பதாம் நாள் வாசிப்பனுபவம் (30.09.2019)


அழகியசிங்கர்


நான் ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டே இருக்கிறேன். அது அவ்வளவு சுலபமாக முடியாது போல் தோன்றுகிறது. நாளைக்கு முடியலாம் அல்லது நாளான்னைக்கு முடியலாம். முடிந்தபிறகு அந்த நாவலைப் பற்றி எழுத முடியும் என்று தோன்றுகிறது.


இப்போது சுலபமாக வேறு எதாவது புத்தகத்தைப் படித்து எழுத வேண்டுமென்று தோன்றியது. கையில் கிடைத்தது சூபி கதைகள். இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் யூமா வாசுகி.


எளிமையான விளக்கத்துடன் 49 கதைகளை மொழிபெயர்த்துள்ளார் யூமா வாசுகி. முன்னுரை வாசகமாக ஒன்று எழுதியிருக்கிறார். ‘இந்த உலகின் மீதான தெளிவை ஏற்படுத்த விழைகின்றன.’


இக் கதைகள் எல்லாவற்றையும் படித்து முடித்தப் பிற்கு இன்னும் ஒரு மறை இதை மறுவாசிப்புக்கு ஆளாக்க வேண்டுமென்று தோன்றியது. இக் கதை ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை நமக்கு அளிக்கிறது.


ஒரு ராஜா நிறையா தேசங்களை வென்று செல்வம் சேர்த்தவர். ஒரு நாள் அவர் சூபி தத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார். ஒரு ஞானியைச் சந்திக்கிறார். ராஜாவைப் பார்த்தவுடன் ஞானி, ‘நீங்கள் சூபி ஆக முடியாது’ என்கிறார்.

ராஜாவிற்குக் கோபம். ‘ஏன் முடியாது?’ என்கிறான்.
‘சரி நான் உங்களைச் சோதிக்கிறேன். எல்லார் முன்னிலையிலும் சபையில்தான் இந்தச் சோதனை நடத்த முடியும்.’ என்கிறார் ஞானி.
அரசன் சம்மதிக்கிறான். ஞானி சொல்கிறார் நான் பத்து கேள்விகள் கேட்போன், நீங்கள் பதில் சொல்லும்போது ‘நான் உங்களை நம்புகிறேன்,’ என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லத் தவறிவிட்டால் உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்,’ என்கிறார் ஞானி.


எல்லாக் கேள்விக்கும் அரசன், நான் உங்களை நம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறான். ஒரு கேள்விக்கு மட்டும் வேற மாதிரி சொல்கிறான்.


ஞானி கேட்ட கேள்வி இதுதான் : ;’ஒரு பயணத்தின் போது நான் உங்கள் தாய் தந்தையைப் பார்த்தேன். அவர்கள் திருடர்களாயிருந்தார்கள். மோசடிக்காரர்களாய் இருந்தார்கள். அவர்கள் செய்த பெரிய குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைத்தது.’
ராஜா சொன்னார் : ‘இது பொய். இதில் ஒரு வார்த்தையைக் கூட நான் நம்பவில்லை.’


கிட்டத்தட்ட இத் தொகுப்பில் 49 கதைகள் இருக்கின்றன. எல்லாக் கதைகளும் அரை பக்கம், முக்கால் பக்கம், முழு பக்கம். ஒரு கதையை விட்டு விட்டு இன்னொரு கதையைத் தொடரலாம்.
ஜென் கதைகளுக்கும் சூபி கதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இரண்டு புத்தகங்களும் ஒருவர் வைத்துக்கொண்டு படித்தால் கிட்டத்தட்ட இரண்டு ஒன்றாகத்தான் தோன்றுகிறது.
இக் கதைகளில் ஒரு பொதுவான தன்மை இருக்கிறது. கதைகள் எந்த அறிவுரையும் கூறுவதில்லை. படிப்பவர்கள் கதைகள் மூலம் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளவேண்டும்.
மேலும் இதை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படுகிறது. சுதந்திரமான வாசிப்புக்கு இது வழிவகுக்கிறது.


ராஜ அதிகாரத்தைத் துறந்து சென்ற ஒரு சூபி, பக்கீராகத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் அடிமை சந்தையிலிருந்து ஒரு அடிமையை விலைக்கு வாங்கிக கொண்டு வருகிறார். அடிமையிடம் கேட்கிறார்: உங்கள் பெயர் என்ன?
அடிமையின் பதிலை பாருங்கள்,”நீங்கள் என்ன சொல்லி அழைக்கிறீகளோ அதுதான்.” இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை சொல்லிக்கொண்டே போகிறான். கடைசியில் ஒரு கேள்வி, உங்களுக்கு என்ன பிடிக்கும்? அதற்குப் பதில் ஒரு அடிமை எதாவது ஆசைப்படுவதில் அர்த்தம் உண்டா? என்று சொல்கிறான்.
இறுதியில் சூபி, உங்களிடம் அதிகமாகக் கற்றுக்கொண்டேன் என்கிறார் அடிமையைப் பார்த்து. இப்படி கதைகளின் சில பகுதிகள் உரையாடல்களில் போய் முடிகின்றன.


ஒன்று சூபி அடிமையிடம் கற்றுக் கொள்வார். அல்லது அடிமை சூபியிடம் ஞானம் பெறுவார். எல்லாம் கன கச்சிதமான கதைகள். பெரும்பாலும் மேடைப் பேச்சாளருக்கும் இதுமாதிரியான கதைகள பயன்படும்.


ஞானம் தேடும் ஒருவர் ஒரு சூபி குருவைப் பார்க்கச் சென்றார். ஒரு கம்பளத்தில் அமர்ந்திருக்கும் குருவிடம் அவர் சொன்னார் :


‘மதிப்பிற்குரிய குரு அவர்களே, நான் சூபி வழியில் செல்வதற்கு நீங்கள் எனக்கு உபதேசம் தர வேண்டும்.’


குரு சொன்னார் :


‘நீங்கள் உடனடியாக மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன் பிறகுதான உபதேசம்.’


‘அந்த மூன்று விஷயங்கள் என்னவென்று சொல்லுங்கள். நான் உடனே அவற்றைச் செய்து முடிக்கிறேன்.’


‘ஒன்று நீங்கள் உங்கள் அதிக அவசரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நீங்கள் என் காலை மிதித்து நின்று கொண்டு பேசுகிறீர்கள்.

எனக்கு வலிக்கிறது. நீங்கள் காலை எடுக்க வேண்டும். மூன்றாவது, சூபி நான் அல்ல. அவர் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்.’
இக்கதைகளில் சில இடங்களில் தத்துவமாக சில வரிகள் பளிச்சிடுகின்றன.


‘அன்பு பரிசுத்தமாக இருந்தால் என்ன பிரார்த்தித்தாலும் அது நடக்கும். நல்லதையும் கெட்டதையும் நாம்தான் முடிவு செய்கிறோம்.’


புகழ் பெற்றுவிட்டால் பெரும்பாலான சூபிக்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள்.


கதைகள் மூலம் தத்துவத்தைக் கூறுவது சூபி.
இக்கதைகளைப் படிக்கும் போது ஆழமான அனுபவத்தைப் படிப்பவருக்குக் கொடுக்கும்.

இருபத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)


அழகியசிங்கர்

இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம்.  இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.  

இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை.  ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது.  இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை.  அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல்.  நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது.  இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள்.  அடிக்கடி குடிக்கிறார்கள்.  பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம்.  அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது. 

சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.  

சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து, üஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது.  அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்ý என்கிறார்.  

“என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன. என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிக்கும் காரணம்,” என்கிறான் கதைசொல்லி. 

சந்திரன் காதலிதான் மாதங்கி.  அவளைப் பற்றி ஒரு இடத்தில் கதைசொல்லி இப்படிக் கூறுகிறான். மாதங்கிதான் என் சிநேகிதி, அம்மா எல்லாம் என்று. கல்லூரி காலத்திலிருந்து கதைசொல்லியின் உணவு உடை சமாச்சாரங்கள் எல்லாம் மாதங்கி கவனித்துக் கொண்டிருக்கிறாள்.  சந்திரன்தான் அதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறான்.  

இந்த நாவல் கல்லூரியில் படிப்பதில் சுழன்று வருகிறது. இளங்கலை படிப்போடு கதைசொல்லி தன் படிப்பை முடித்து விடுகிறான்.  மாதங்கி, சந்திரன் எல்லாம் முதுகலை படிப்பிற்குத் தயாராகிறார்கள்.  இவர்களுடைய இன்னொரு கல்லூரி நண்பர்கள்தான் கதைசொல்லியின் நண்பர்களாக மாறுகிறார்கள்.  

இங்கே திவ்யா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் கதா ஆசிரியர்.  சந்திரனுடன் படித்த தோழிதான் திவ்யா.  திவ்யாவிற்கும் கதைசொல்லிக்குமான உறவு ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது. 

ஒரு ரெஸ்ட் ரூமில் திவ்யாவுடன் கதைசொல்லிக்கு இப்படி ஒரு அறிமுகம் நடக்கிறது.  üஇயல்பாக நெருங்கி வந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.  கை ஜோதிடம் பார்ப்பதுபோல என் உள்ளங்கைகளை அவளது விரல்களால் வருடிவிட்டாள்.  அவள் நெருங்கி வந்து என்னை மார்போடு ஒட்டி அணைத்து, என் உதட்டருகே அவளது உதடுகளைக் கொண்டுவந்து முத்தமிட்டுக் கொள்ளலாமா? என்றாள்.  நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தபோது அவள் என் உதடுகளைக் கவ்வினாள்.  நான் அவளது உடலெங்கும் என்னுடைய கைகளை கௌரவமாக நகர்த்தினேன்.ý

சந்திரனும் கதைசொல்லியும் அடிக்கடி பேசிù;கொள்ள மாட்டார்கள்.  அவர்களிடம் ஒரு நிழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.  திவ்யாவுடன் கதைசொல்லி பழகுவது சந்திரனுக்குத் தெரியாது,  அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால். 

“உன் மாய உலகம் ஒருநாள் உன்னை அடித்து வெளியே துரத்தும்,” என்கிறான் சந்திரன் ஒருநாள். அவனுடைய வீட்டில் பணம் இருந்தாலும் விடாப்பிடியாக அதை உதறிவிட்டு வாழ்கிறவன்.  

கதைசொல்லி கோபத்துடன், “உன்னுடைய வாழ்க்கை உனக்கு இப்படிச் சிந்திக்கச் சொல்லித் தந்திருக்கிறது.  என்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய நியாய தர்மங்களுக்கு வேலையே இல்லை,” என்கிறான் கதைசொல்லி. 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்திரனும் கதைசொல்லி சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்தார்கள்.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் தவிர்த்துவிட்டான்.  

கதைசொல்லியின் வறுமையைப் பற்றி இந்த நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது.  இந்த இடத்தில் ஒரு குறிப்பு வருகிறது. படிக்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது.

  ‘கல்லூரியில் என்னை சந்திரன் முதன்முறையாகப் பார்த்தபோது என்னிடம் இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட் மட்டுமே இருந்தன. துவைத்து மாறி மாறிப் போட்டுக்கொள்வேன்.  என்னுடைய வகுப்பிலிருந்த பெண்பிள்ளைகள் கூட இதுபற்றி பலமுறை என்னிடம் விசாரித்திருக்கிறார்கள்.  நான் அவர்களிடம் காந்தியைப் பற்றிச் சொல்லித் தப்பித்துக்கொள்வேன். காந்தி எளிமையாக இருக்கச் சொன்னது மனதளவில் என்னைக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் விடாப்பிடியாக இந்தப் பழக்கத்தை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்,’ என்று எல்லோரிடமும் தன் ஏழ்மையை மறைக்கச் சொல்லிக்கொண்டிருப்பான் கதைசொல்லி.

திவ்யா கதைசொல்லியைவிட இரண்டு வயது மூத்தவள்.  திருமணம் ஆனவள்.  கதைசொல்லியுடன் அவள் நெருங்கிப் பழகும்போது நல்ல மூடில் இருந்தால், சிலசமயம் மச்சான் என்பாள், சிலசமயம் பேபி என்பாள். 

இந் நாவலில் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒவ்வொரு கதை வருகிறது.  கதைசொல்லியைத் தெடார்புப்படுத்திதான்.  12வது அத்தியாயத்தில் பாண்டியை அறிமுகப்படுத்துகிறார்.  இது தொடர்பாக எதாவது கதை இருக்கும்.  ரசித்துப் படிக்க முடியும். 

பதிமூன்றாவது அத்தியாயத்தில் பரதராமன் என்கிற பிஆர்ரை அறிமுகப்படுத்துகிறார்.  அவருடன் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை கதைசொல்லி விவரிக்கிறார்.  அதேபோல் விக்னேஷ் என்ற சினிமா நடிகனைப் பற்றி தகவல்களைக் கொடுக்கிறார்.  சந்திரனின் தாய் மாமாவைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.  தாய் மாமன் சந்திரனை விட கதைசொல்லியுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.

இந்த நாவலில் அங்கங்கே பல நிஜமாக நடந்த சம்பவங்களைப் புனைவாக மாற்றி எழுதியிருக்கிறார்.  ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவரின் ஹெலிகாப்டர் மரணம், ஒரு நடிகையைக் குளிக்கும்போது நிர்வாணமாகப் படம் எடுத்ததைப் பற்றி, போலி சித்த மருத்துவர்களைப் பற்றியும் வருகிறது. அதிகார மட்டத்திலிருக்கும் விஸ்வநாதனை யாரோ கொலை செய்து தஞ்சாவூரில் உள்ள கால்வாயொன்றில் போட்டுவிட்டார்கள். அவர் அதிகார மட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.  அடவடியான காரியங்களுக்கு அந்தக் பகுதியில் அறியப்பட்டவர்.  இந்தக் கொலைக்கான துப்பும் கிடைத்து விடுகிறது.  இது ஒரு அத்தியாயம் முழுக்க வருகிறது. 

ரோலக்ஸ் வாட்ச்சைப் பற்றி குறிப்புகள் 27வது அத்தியாயத்தில் வருகிறது.  ரோலக்ஸ் வாட்ச் மாத்திரம் டுப்ளிக்கேட் கிடைக்காது.  அதற்குக் காரணம் தொழில் சாம்ராஜ்யத்தில் உள்ள ஒரு தொழில் தர்மம்.  

இந்த வாட்ச்சை விற்று வருகிற இலாபத்தில் தான தரும காரியங்கள் பலவற்றை செய்து வருகிறது இந்த நிறுவனம். 

மேரியட்டில் அறையெடுத்து திவ்யாவை வரச் சொல்லி அழைக்கிறான் கதைசொல்லி.  அங்கே அவர்கள் இருவரின் லீலைகள் தொடர்கின்றன.  üüநாம பிரிஞ்சுரலாமா?ýý என்று கேட்கிறான் கதைசொல்லி.  அவளும் சரி என்கிறாள்.  எப்படி இந்த உறவு தற்செயலாக ஆரம்பித்ததோ அதேபோல் பிரிவும் ஏற்பட்டுள்ளது என்று முடிகிறது கதை.

சந்திரனுக்கு பெல்ஸி பால்ஸி நோய்.  ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்த நோய் வருமாம். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் இழுத்துக்கொண்டு விடுமாம்.  இதற்கு எந்த மருந்தும் கிடையாதாம்.  தானாகவே சரியாகப் போக வேண்டும்.  முகத்தில் பயிற்சிகள் செய்து வரவேண்டும்.  கதைசொல்லி உருகுகிறான்.  தனக்கு வரக்கூடாதா? ஏன் சந்திரனுக்கு வந்தது என்று.  திவ்யாவுடன் ஏற்பட்ட உறவு துண்டித்துப்போனது பற்றி சந்திரனிடம் சொல்லவேண்டும். சுந்தர் அண்ணாவைப் பார்த்து தற்செயலானவன் என்று சொல்ல வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி.

156 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஆரம்பித்திலிருந்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை.  விறுவிறுவென்று போகிறது.  இன்னும் இவருடைய மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும். 


விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 50

    தலைப்பு  :   காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார்
        சைக்கிள் பயண அனுபவங்கள்

சிறப்புரை :   பிரபு மயிலாடுதுறை

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        21.09.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : எழுத்தாளர்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும்.

அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் – 1


பிரெஞ்சு இலக்கியமும் நானும்

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். 

அழகியசிங்கர்

அன்புடையீர் 

வணக்கம்

முன்னோடி படைப்பாளுமைகளை கௌரவிக்கும் முகமாகவும், தீவிர இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் மணல்வீடு இலக்கியவட்டம் கடந்த இருவருடங்களாக இலக்கிய விருதுகள் வழங்கிவருவருகிறது. அதன் நீட்சியாக இந்த வருடம் அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருதுக்கு நவீன விருட்சம் சிறுசஞ்சிகை தெரிவு பெற்று இருக்கிறது . மேற்சொன்ன விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்து மூன்றாம் தேதி (03 – 08 -19) ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடில் அமைந்துள்ள ராணா விடுதி நிகழ்வரங்கத்தில் நடக்க இருக்கிறது. ஆர்வலர்களும் அன்பர்களும் நேரில் வந்திருந்து விழாவை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன் .

இவண்

மு . ஹரிகிருஷ்ணன்

தெரிவுக்குழு

செ. ரவீந்திரன்

சுதாகர் கதக்

விவேகானந்தன் ஐ . எப் . எஸ்

நக்கீரன்

குறிப்பு

விருது ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் தொகையும், சான்றிதழும் நினைவு பரிசொன்றும் உள்ளடக்கியது . மாற்றத்திற்குட்டபட்ட விழா நிகழ்ச்சி நிரல் இத்துடன்.

மணல்வீடு இலக்கிய வட்ட நிகழ்வு – 10

நிகழ்விடம் – ராணா விடுதி நிகழ்வரங்கம் – சூரம்பட்டி நான்கு ரோடு – ஈரோடு

நாள் – 03 – 08 – 2019

நேரம் – காலை பத்து மணிக்கு

அமர்வு – 1

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது வழங்கும் நிகழ்வு

அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது

-நவீன விருட்சம் – ஆசிரியர் – அழகிய சிங்கர்

நிகழ்வில்

நாஞ்சில் நாடன் – பிரம்மராஜன் – மோகனரங்கன் – ஷா அ ந. விச்வநாதன் கமலாலயன் பிரவீன் பஃ றுளி

நன்றியுரை – மு.ஹரிகிருஷ்ணன்

தொடர்புக்கு

இர.தனபால்

9677520060 – 9894605371

No photo description available.

துளி : 46 – உலகப் புத்தகத் தினம்..

அழகியசிங்கர்

போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.  

இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன்.  இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.  அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன்.  எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஐ பி ஸிங்கரின் சிறுகதைகளைப் படிக்கிறேன்.

ஒரு முறை நூலகத்தைச் சுற்றி வரும்போது ஒரு மூலையில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு என்று எழுதப்பட்டிருந்தது.  சாதாரண புத்தகமாக இருந்தால் கால் டாலரும், கனமான அட்டைப் போட்டிருந்த புத்தகமாக இருந்தால் 1 டாலரும் ஏன்றும் போட்டிருந்தது.  இதைத் தவிர நேஷனல் ஜியாகரபி, டைம் பத்திரிகை விலை குறைவாக விற்கிறார்கள். ஒவ்வொரு நூலகத்திலும் ஒவ்வொரு விதம்.  டிவிடி, சிடி எல்லாம் விற்கிறார்கள். விற்கிற இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.  நாம்போய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நன்கொடையாக ஒரு மரப்பெட்டியில் காசைப் போடவேண்டும்.    

இந்த உலகப் புத்தக தினத்தை ஒட்டி நான் கீழ்க்கண்ட புத்தகங்களை அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். பெரும்பாலும் நாவல்கள்தான்.  இன்னும் சில புத்தகங்கள் வாங்குவதாக உத்தேசித்துள்ளேன்.  

1.The Grapes of Wrath – Steinbech 2. In a Mirror – Mary Stolz 3. All the Missing Girls – Megan Miranda 4. This is my God – Herman Wouk 5. The Truffle with weddings – Laura Durham 6. Book J – translaated from Hebrew by David Rpsemnerg 7. Truevine – Beth Macy 8. The Secret of Rain and Lightining – Nancy Pickard 9. A Certain Justice – P D James 10. People Like us – Dominick Dunne 11.The Last Symbol – Dan Brown t 12. Granny Dan – Danielle Steel 13. The Long Road Home – Danielle Steel

இன்னும் நூலகங்களுக்குப் போய் புத்தகங்கள் கொண்டு வாங்கி வர உத்தேசம்.  சென்னைக்குக் கொண்டு வருவதற்குத் தனியாகப் ஒரு பெட்டியை ஏற்பாடு செய்ய நினைத்துள்ளேன்.  

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் – 1

அழகியசிங்கர்

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மறைந்தார்.

நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.

அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன்.  முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன்.  தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்

கேள்வி கேட்பவர் : தொழில் ரீதியாக நான் ஒரு மருத்துவன்.  நான் அறுவை சிகிச்சைச் செய்பவனாக என் தொழிலை ஆரம்பித்தேன்.  பின், மனோதத்துவ நிபுணனாகத் தொடர்ந்தேன்.  மேலும் நான் சில மனோதத்துவப்  புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன்.  நம்பிக்கையின் மூலம் குணப்படுத்த முடியுமென்று நம்புகிறவன்.  நான் உங்களைப் பார்க்க வருவதற்கு முக்கிய காரணம், ஆன்மிக விதிகளைக் கற்பதற்குத்தான்.

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்  : ஒரு நோயாளியின் நோயைத் தீர்க்குமுன் நீங்கள் எந்தவிதமாக நோயைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்கள்? நோயைத் தீர்ப்பது என்றால் என்ன?  எப்போது சொல்வீர்கள், ஒரு மனிதன் குணமடைந்துவிட்டானென்று?

கே.கே : நான் நோயைக் குணப்படுத்துவதோடல்லாமல், மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை சரி செய்வேன்.  மனதைச் சரிசெய்ய முயற்சி செய்வேன்.

மஹாராஜ் : மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் ஆராய்ச்சி செய்வீர்களா?   எந்தத் தருணத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?

கே.கே : உடலுக்கும், உணர்வுநிலைக்கும் இடையில் மனது 

உள்ளது.

மஹாராஜ் : உடல் உணவால்தானே உருவாக்கப்பட்டுள்ளது?

உணவு இல்லாமல் மனம் இருக்க முடியுமா?

கே.கே : உணவால்தான் உடல் உருவாக்கப்பட்டு நிலைத்திருக்கிறது.  உணவு இல்லாவிட்டால் மனமும் பொதுவாக தளர்ந்து விடும்.  ஆனால் உணவு மட்டுமல்ல மனம்.  வேறு ஒன்று ஒரு மனம் உடலில் இயங்கக் காரணியாக இருக்கிறது.  அப்படி மாற்றக்கூடிய ஒன்று என்ன?

மஹா : மரம் நெருப்பை உண்டாக்கக் காரணமாக இருந்தாலும், மரம் நெருப்பாகாது.  அதேபோல், மனதை உருவாக்க

உடல் காரணமாக இருந்தாலும் அது மனமாகாது.  ஆனால் யாருக்கு மனம் தெரியவரும்? யோசனைகளையும், உணர்வுகளையும் ஏற்றுக்கொள்பவர்களை நீங்கள் மனம் என்று கருதுகிறீர்களா?  மரம் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது, கூடவே நெருப்பைப் பயன்படுத்திக் கொள்பவரும் இருக்கிறார்.  யார் மனதை பயன்படுத்திக்கொள்கிறார்?  அப்படிப் பயன்படுத்திக் கொள்பவருக்கும் உணவுதான் அடிப்படையா? அல்லது அது இல்லாமல் தனிமையாக இயங்கக் கூடியவரா?

கே கே : மனதை உணரக்கூடியவர் தனிமையாக இயங்கக் கூடியவர்.

மஹா : எப்படி உங்களுக்குத் தெரியும்?  உங்களுடைய அனுபவத்திலிருந்து பேசுங்கள்.  நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை.  நீங்கள் அப்படிச் சொல்லலாம்.  எப்படித் தெரியும்?

கே.கே : எனக்குத் தெரியாது.  ஆனால் அப்படி ஊகிக்கிறேன்.

மஹா : சத்தியம் நிலையானது.  உண்மை மாற்றமில்லாதது. எது மாறக்கூடியதோ அது உண்மையில்லை.  எது உண்மையோ அது மாற்றம் அடையாதது.  இப்போது சொல்லுங்கள், எது உங்களிடம் மாற்றம் இல்லாதது?  உணவு இருக்கும்வரை, உடலும், மனமும் இருக்கிறது.  உணவு நின்றவுடன், உடல் அழிந்து விடுகிறது.  மனமும் கரைந்துவிடுகிறது.  ஆனால் உற்று நோக்குபவனும் அழிந்து விடுகிறானா?

கே கே : இல்லை என்றுதான் நான் ஊகிக்கிறேன்.  ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

மஹா : நீங்கள்தான் அதற்கு ஆதாரம். உங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடைக்காது.  நீங்கள் தான்.  உங்களுக்குத் தெரியும் உங்களை.  நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள்.  என்னதான் மனது  செய்தாலும், அது தன்னுடைய விருப்பத்திற்காகச் செய்யும்.  ஆன்மாவின் இயற்கை அன்புதான்.  அன்பு செலுத்திக் கொண்டிருந்தது, அன்பு செலுத்திக்கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்.   ஆன்மாதான் உடலையும், மனதை நெருக்கமாகவும்,

ஆர்வமுள்ளதாகவும் மாற்றும். 

கே கே : ஆன்மா என்பது உடலாகவும், மனதாகவும் இல்லையென்றால், அது உடல் இல்லாமலும், மனம் இல்லாமலும் இயங்க முடியுமா?

மஹா : ஆமாம்.  நிச்சயமாக இருக்கும்.  உண்மையில் அது  அனுபவமாக உள்ளது.  மனமும் உடலையும் இல்லாமல் தனியாக இயங்கக் கூடியது.  அது விழிப்புணர்வுடன் இயங்கிக் கொண்டிருப்பது. 

விழிப்புணர்வுடன் இருப்பது பேரின்பம்.

கே கே : உங்களுக்கு வேண்டுமென்றால் உண்மையான அனுபவமாக இருக்கலாம்.  ஆனால் எனக்கில்லை.  எப்படி நான் அதே அனுபவத்தைப் பெறுவது?  என்ன பயிற்சிகளை எடுத்துக்கொள்வது?  என்ன நடைமுறையைப் பின்பற்றுவது?

மஹா : நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் உடலும் இல்லை. மனமும் இல்லை.   ரொôம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும்.  உடலாலும், மனதாலும் பாதிப்பு இல்லாமல் வாழ வேண்டும்.  முழுவதுமாகவும், தனியாகவும், அதாவது நீங்கள் இறந்து போனால் எப்படியோ அப்படி.  இதற்கு என்ன அர்த்தமென்றால் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, இந்த உடலாலோ மனதாலோ..

கே.கே : பயங்கரமானது

மஹா : நான் உங்களைத் தற்கொலை செய்துகொள்ளும்படி சொல்லவில்லை.  உங்களாலும் முடியாது.  நீங்கள் உடலை மட்டும் கொலை செய்யலாம்.  ஆனால் மூளையின் தொடர்ச்சியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.  நீங்கள் நினைப்பதுபோல் ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.  எந்தப் பாதிப்பும் ஏற்படாத மாதிரி அப்படியே இருங்கள்.  இப்படி தனியாக உடலுக்கும், மனதுக்கும் தொடர்பு இல்லாதவாறு இருக்கும்போது, நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை.  நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மைக்கு ஆட்படுவீர்கள்.  உங்கள் உடலுக்கும், மனதிற்கும் என்ன நடப்பதென்பதை மாற்றுவதற்கு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம்.  ஆனால், நீங்கள்தான் உடல் அல்லது மனம் என்று

கற்பனை செய்வதை நிறுத்தி விடலாம். என்னதான் நடந்தாலும், உங்கள் உடலுக்கோ மனதிற்கோ நடப்பதாகவும் உங்களுக்கில்லை என்றும் அசையாமல் இருங்கள்.   

சொல்லுங்கள் என்ன முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள்?  உடலையும், மனதையும் மாற்றமே இல்லாத ஆன்மாவுடன் பார்ப்பதற்கு.

                                                                                      (இன்னும் வரும்)