நேற்று நடந்த சூம் கூட்டத்தில் நானும் ஒரு கவிதை வாசித்தேன். உண்மையில் வாசிக்க நினைத்தது சீப்பு என்ற கவிதையை. ஆனால் வேறு இருவர் தலையைப் பற்றி கவிதைகள் வாசித்ததால் அழகி என்ற கவிதையை வாசித்தேன். என் தொகுப்பில் இது 152வது கவிதை. 2003ஆம் ஆண்டில் இக் கவிதையை எழுதினேன். ‘அழகியசிங்கர கவிதைகள்’ என்ற தொகுப்பில் நான் 1975முதல் 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன்.முகநூல் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.
16.10.2020 – வெள்ளிக்கிழமை – 6.30 மணிக்கு – நாளை சூன் மூலமாக 21வது கவிதை வாசித்தல் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கம்போல் எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 20 வரிகளுக்கு மிகைப்படாமல் கவிதை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன் கால சுப்ரமணியம் பிரமிள் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துவார்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள் வாசிப்பதைத் தவிர்க்கவும்.
நேற்று ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். அந்த இங்கு உங்கள் முன் ஒளி பரப்புகிறேன் சிறப்பான அந்த உரை
சமீபத்தில் மறைந்த கி.அ சச்சிதானந்தம் அசோகமித்திரனின் 82 வது பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை நெறி செய்தார். அக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மட்டும் இங்கு அவர் நினைவாக அளிக்கிறேன்.
இதுவரை 75 கவிஞர்கள் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சூம் மூலம் கவிதை வாசித்து விட்டார்கள். இன்று நடைபெற உள்ள 17வது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை (நான்கு பேர்கள்) வரவேற்கிறேன்.
அரசியல், மத, ஆபாச கலப்பில்லாமல் கவியரங்கக் கூட்டங்களை நடத்தியதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.
கவிதைகளில் பல வகை உண்டு. மரபு, ஹைக்கூ, தன் முனைப்புக் கவிதைகள்,
புதுக் கவிதைகள் என்றெல்லாம். ஆனால் புதுக்கவிதை வாசிப்பவர்கள்தான்
முன்னணியில் நிற்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் பலவிதமான கவிதைகளைக்
காது கொடுத்துக் கேட்க முடிந்தது. கவிதை வாசிக்கும் நண்பர்களைப்
பிடித்திழுப்பது சற்று சங்கடமாக இருக்கிறது. பலருக்கு சூமில் எப்படி கவிதை வாசிப்பது என்று தெரியவில்லை. சிலருக்குக் கலந்து கொள்வதில் விருப்பமில்லை. அதையும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.
இனிமேல் இந்தக் கவிதை வாசிப்பு கூட்டத்தை வேறு விதமாக மாற்றி
அமைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டம் தொடங்குவதற்கு முன் கவிதை குறித்து
உரை நிகழ்த்துபவரை ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். பின் யார்
வேண்டுமானாலும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாமென்று தோன்றுகிறது.
இந்தக் கூட்டம் ஆரம்பம் முதல் இதுவரை சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அக்கறை கொண்டவர்கள் இருவர். சுந்தர்ராஜன், கிருபானந்தன்.
அவர்களுக்கு நன்றி. அதேபோல் வ.வேசு. அபாரமாக எல்லோருடைய கவிதைகளையும்
உள்வாங்கிக்கொண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் மதிப்பீடு செய்வது. இது
லேசான விஷயமாகத் தோன்றவில்லை. அவருக்கும் நன்றி.
விருட்சம் 16 சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் 11.09.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 7 மணி அளவில் 22கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். பாரதியாரைத் தூக்கி சுமந்த கல்கி என்ற தலைப்பில் கடற்கரை மத்த விலாஸம் அங்கதம் உரை நிகழ்க்தினார்
வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம் மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கவிதை வாசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து உரை நிகழ்த்த உள்ளா கள் .
இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் . ‘பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.
எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம். சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.
இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.
கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரிக்கவும். அரசியல், மத சம்பந்தமான கவிதைகளை வாசிப்பதைத் தவிர்க்கவும். கவிதையில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்.
இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது.
எல்லாம் சரி
இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன். சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஏன்?
நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு
வேலை கிடைத்து விட்டது. அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது. நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம்.
இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம். வாடகை வீடுகளில்தான் வாசம்.
கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல்
தோன்றுகிறது. இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம். ஆனால்
அதெல்லாம் சரி வராது.
நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை
முக்கியமாகக் கருதுகிறேன். ஒருவர் யாருடன் பேச வேண்டும் யாருடன் பேசக்
கூடாது என்பதெல்லாம் அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.
இந்தத் தருணத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியா வந்து இரண்டு மூன்று மாதங்கள் வந்திருந்து தங்குவதாகச் செய்தி வந்தது.
நான் உடனே அவர்களுடைய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கிருஷ்ணமூர்த்தியைச்
சந்திப்பதற்கு வாய்ப்புத் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
அவர்கள் ஒருநாள் வந்து சந்திக்கலாமென்று அனுமதி அளித்தார்கள். எனக்கு அவளுடைய பிரச்சினைதான் முக்கியமாகத் தோன்றியது. இதற்கு எதுமாதிரியான தீர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவரைப் பார்த்து இதைப் பற்றிப் பேச வேண்டுமென்று யோசித்தேன். கிருஷ்ணமூர்த்தியிடம் இதைப்பற்றியெல்லாம் பேசினால் சிரிக்கத்தான் சிரிப்பார்.
நான் கேலிக்கு ஆளாவேன் என்றெல்லாம் தோன்றியது. இந்தத் தருணத்தில் அவளைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஒரு முறை போன் செய்தபோது, அவள் சொன்னாள் :” வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. பார்க்க முடிவில்லை,” என்று.
அந்தப் பதில் எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதை நினைத்துப் பல நாட்கள் நான் யோசனை செய்தபடி இருந்தேன். வீட்டில் அம்மா கூடச் சொன்னாள் : நீ முன்பு மாதிரி கலகலப்பாக இல்லை என்று.
கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க வேண்டிய நாள் வந்து விட்டது. அன்று
அலுவலகம் போகவில்லை. சரியாக மதியம் 12 மணிக்கு அவரைச் சந்திக்க நேரம்
கொடுத்திருந்தார்கள்.
அவர்கள் அலுவலகத்திற்குப் போய் நான் வந்து விட்டதை அறிவித்தேன். அவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள்.
எப்போதுமே எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்குமிடம் பிடிக்கும். அடர்ந்த மரங்களும் செடிகளுக்கு நடுவில் அவர் தங்கியிருக்கும் வீடு இருக்கும். மரப்படிக்கட்டுகள் வழியாக மாடிக்குப் போனால் அவர் அறை இருக்கும்.
அங்கு அவரைப் போய்ச் சந்தித்தேன். உட்காரச் சொன்னார். அவர் என்னையே
உற்றுப் பார்த்தார். என்ன கேட்க வேண்டுமென்பதுபோல் அந்தப் பார்வை
இருந்தது. அவர் மௌனமாகவே இருந்தார்.
ஒரு நிமிடம் நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். என்னை அவர் தலையிலிருந்து கீழ் வரை தீர்க்கமாகப் பார்ப்பது போல் தோன்றியது. உடனே என் மனம் அமைதியாகிவிட்டது.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம். பின் நீங்கள் போகலாமென்பதுபோல் தலை ஆட்டினார். ஒருக்ஷணம் உலகமே புரிய ஆரம்பித்தது. வெளியே வந்து விட்டேன்.