நவீன விருட்சம்

ஒரு கதை ஒரு கருத்து 

 பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

அழகியசிங்கர்

            டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.

      அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது.  முதலில்  எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.  

      பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.  

      பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர்  (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு.

      இப்படி ஒரு காதல் கதையைப் பாரதியார் விவரிக்கிறார்.  மனோரஞ்சிதன் சுந்தரமான ரூபமுடையவன்.  பார்ப்பதற்கு மன்மதனைப்போலியிருப்பான்.   தன்னோடு ஒத்த வாலிபர்கள் எல்லோராலும் அர்ஜ÷னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.  

      அவனுக்கு வயது இருபத்தி மூன்றாகியிருந்த போதிலும், என்ன காரணத்தாலோ இன்னும் விவாகம் நடக்காமலிருந்தது.  இவனுக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுதே, இவன் அப்பா இறந்து விடுகிறார்.  அதனால் இவனுக்குத் திருமணம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விட்டது.  தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால், இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி வீட்டில் இவன் வைத்ததுதான் சட்டம்.  இவன் சொன்ன சொல்லை மீற மாட்டாள்.  இந்தக் குடும்பத்தில் அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும் உள்ள நிலத்தை விற்று பணம் எடுத்துக்கொண்டு கல்கத்தா போய் பரீட்சைகள் எழுதித் தேறி வர வேண்டுமென்ற இவன் எண்ணத்தின்படி இவனை அனுப்பி வைத்தாள்.

      இவன் தாயார் ரஞ்சனைப் பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பாள்.  இவன் அதற்குப் பதில் சொல்ல மாட்டான்.  அந்தப் பேச்சே எடுக்காதே என்று அம்மாவை மிரட்டுவான். 

      ஆனால் அந்தரகத்திலே இவன் வடக்கு வீதி ஸ÷ர்யகாந்த பாபு என்ற பெருஞ் செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோகம் வைத்திருந்தான்.  இது அவன் அம்மாவிற்கும் தெரியும்.  ஆனால் தன் பையன் ஸ்வர்ண குமாரியை ஒருபோதும் விவாகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறாள்.  அதற்குக் காரணம் அந்தப் பெண் மிலேச்சனுடைய பெண்.  அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்தால் இவனுடைய தாயார் தேட்ட மாத்திரத்திலேயே இறந்து விடுவாள்.   அதேபோல் அவளை தன் மகன் கட்டிக்கொள்வதைக் காட்டிலும் இறந்து போவது மேல் என்று நினைக்கிறாள்.

 “     ஏன் அவன் தாய் அப்படி நினைக்கிறாள்?  

      ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய÷ர்யகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்தாலும் பிரமஸமாஜம் என்ற புதிய மார்க்கத்திலே சேர்ந்து கொண்டு விட்டார். 

      பிரம ஸமாஜத்தில் சேர்ந்தவருக்கு ஜாதி பேதம் இல்லை.  விக்ரகாராதனை கூடாது.  பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம் என்பதுபோல் நவீன கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்.

      அவர்கள் வீட்டு ஸ்திரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை என்று நடப்பவர்கள். 

      ஸ்வர்ண குமாரிக்கு இன்னும் விவாகமாகவில்லை.  மனோரஞ்சனின் தயாருக்குக் காதால் கேட்கக் கூடா வெறுப்பாக இருந்தது.  தன் பையன் அடங்காத காதல் கொண்டிருக்கிறானென்றும்  அதன் பொருட்டே மறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறானென்பதும் அவளுக்குத் தெரியும்.

      பாரதியார் இந்தக் கதையை ஒரு காதல் கதையாகக் கொண்டுபோகிறார்.  ஜாதி மாறுவதை கடுமையாகக் கருதுகிறார்கள்.  ஸ்வரண குமாரி மனோரஞசனுடைய வடிவம் என்று அகலாத சுந்திர விக்கிரமாகப் பதிந்து போய்விட்டது.

      இந்த இடத்தில் ஸ்வர்ண குமாரியின் அழகை வர்ணிக்கிறார் பாரதியார்.  எப்படி?  ‘இவளுடைய ரூப லாவண்யமோ சொல்லுந் தரமன்று.  கருமை நிறங் கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும் கன்னமும், நெற்றியும், ஸ்வர்ண மயமான சரீரமும் என்னவென்று சொல்வது?’ என்கிறார்.

      இந்த இடத்தில் ஒரு ஜோக் அடிக்கிறார் பாரதி.  சுகப்பிரம்மரிஷி ஸ்வர்ண குமரியைப் பார்த்த போதிலும் மயங்கிப் போய் விடுவார் என்கிறார்.

      ஸ்வரணகுமாரி அடிக்கடி மனோரஞ்சிதத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாள்.  இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.  இதை அறிந்து அவள் அப்பா, ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் சொல்கிறார்.  இல்லாவிட்டால் என் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கிறார். 

      அவளுடன் ஹேமச்சந்திரா பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள்.  தோட்டத்திலுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்கு.  அப்படிச் சந்திக்கும்போது அவளுடைய சம்மதத்தைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்.  

      வேறு வழியில்லை ஹேமசந்திரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விதி இருக்கிறது.  திருமணம் செய்துகொண்டு விஷம் தின்று உயிரை விடலாமென்று நினைத்துக் கொள்கிறாள்.  

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)

                                                                     இன்னும் வரும்….
SHARE

Comments

Post a comment

Popular posts from this blog

சில சிறுபத்திரிகைகள்..

January 20, 2020SHARE POST A COMMENTREAD MORE

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

January 28, 2020SHARE POST A COMMENTREAD MORE

துளி – 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

January 12, 2020SHARE POST A COMMENTREAD MORE

உள்ளே

 Powered by Blogger

நவீன விருட்சம்

SUBSCRIBESEARCH

ஓஷோவின் பிறந்த தினம் இன்று

 துளிகள்  – 160

அழகியசிங்கர்

மத்தியபிரதேசத்தில் உள்ள குச்வாடா கிôமத்தில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 11ல்பிறந்தவர், ரஜனீஷ் சந்திர மோகன்.  இவர், ஓஷோ என்றழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் ஓஷோ கடையில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவேன்.  59 வயது மட்டும் வாழ்ந்த ஓஷோ 1990 ல் ஜனவரி 19ல் இயற்கை எய்தினார்.

சிறிய வயதிலிருந்து கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் உடனுக்குடன் வாசிக்கும் திறமை படைத்தவர்.  கிட்டத்தட்டப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பதிலிருந்து விலகியும் போய்விட்டார்.
\ அவருடைய எல்லாப் புத்தகங்களையும் அவர் கையால் எழுதவில்லை.  அவர் சொன்னதை மற்றவர்கள் குறித்துக்கொண்டு புத்தகங்களாக மாற்றி உள்ளார்கள்.  இப்படிப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன.

எந்தச் சிக்கலான தத்துவங்களையும் எளிதாகப் புரியும்படி சொல்லிக்கொண்டே போவார்.
இவர் காலத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நிஸகர்தத்தா மஹாராஜ், யூ ஜி கிருஷ்ணமூர்த்தி என்று பல ஆன்மிக குருமார்கள் வாழ்ந்து வந்தார்கள்.  ஓஷோவை நிஸகர்தத்தா மஹாராஜ் தவிர எல்லோரும் கிண்டல் அடிப்பார்கள்.  குறிப்பாக யூ ஜி ஓஷோவை பயங்கரமாகக் கிண்டல் அடிப்பார்கள்.
இன்றைய ஜெக்கி வாசுதேவ் கிட்டத்தட்ட ஓஷோ ஸ்டைலில்  இருக்கிறார்.  ஓஷோவின் கண்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் கண்கள்.  
என்னதான் மற்ற குருமார்கள் கிண்டல் அடித்தாலும் ஓஷோ எழுதிய புத்தகங்கள் முன் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக வேண்டியதுதான்.  ஓஷோவின் எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும்  ஒவ்வொருவரும் பரவசம் அடையாமல் இருக்க மாட்டார்கள்.  அந்த அளவிற்குத் திறமையானவர்.

அடையார் தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து ஓஷோவின் பதஞ்சலி யோகா ஐந்தாவது பாகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  படிக்கப் படிக்க அந்தப் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்கவே எனக்கு மனமில்லை.

சரி, இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது எனக்கு என் நண்பர் கூறியபடி எக்ஸ்பிரúஸô காப்பி குடித்த மாதிரி இருக்கும். ஆரம்பித்தில். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தூக்கிப் போடுவதுபோல் இம்மாதிரியான புத்தகங்களும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் எங்கே பார்த்தாலும் ஓஷோ புத்தகங்களை வாங்காமல் இருக்க மாட்டேன்.
சமீபத்தில் புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகம் தி புக் ஆப் சீக்ரட்ஸ்.  எங்கே  ஓஷோ புத்தகத்தைப் பார்த்தால் வாங்கிக் குவித்துவிடுவேனோ என்ற பயத்தில் ஓஷோ புத்தகம் விற்கும் பக்கத்திலேயே போய் நிற்கமாட்டேன்.
அன்று ஜெய்கோ என்ற புத்தக அலுவலகத்திற்குச் சென்றேன்.  ஆர்யாகவுடர் தெருவில்தான் அந்தப் புத்தகக் கடை இருந்தது.  என்ன சோகம்.  அங்குக் கிருஷ்ணா என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று இருந்தது.  700 பக்கங்கள் உள்ள புத்தகம்.  ரூ.375க்குக் கிடைத்தது. 
பொதுவாக ஓஷோ புத்தகங்கள் எல்லாம் கேள்வி பதில் வடிவத்திலிருக்கும்.  அந்த வடிவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதாவது ஒரு பக்கத்தைத் திறந்து எதாவது ஒரு கேள்வியை ஒரு பதிலைப் படித்தால் போதும். ஒன்றாம் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்க வேண்டாம். சரி, இந்தக் கொரானா நேரத்தில் ஓஷோ இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? தனித்திருக்கச் சொல்வார், விழித்திருக்கச் சொல்வார், மௌனமாக இருக்கச் சொல்வார்.  

     ஓஷோ பிறந்தநாளான இன்று கொஞ்சமாவது ஓஷோ புத்தகத்தைப் படிக்க வேண்டும்.        

28ஆம் கவிதை வாசிக்கும் கூட்டத்தின் ஒளிப்பதிவு

அழகியசிங்கர்  

02.12.2020 அன்று வெள்ளிக்கிழமை நடந்த 28ஆம் சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தவர்களின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.  
இந்த கவிதை ஒளிப்பதிவில் காணப்படும் குறைகளை யாராவது சுட்டிக் காட்டினால் அடுத்த முறை வராமல் பார்த்துக்கொள்ளப்படும்.

இன்று யோகிராம்சுரத்குமாரின்பிறந்த நாளும்..

அழகியசிங்கர்

என் பிறந்தநாள் போதுதான் யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாளும்.  அல்லது அவர் பிறந்தநாள் போது என் பிறந்தநாளும் வருகிறது.  

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் போது அவரையும் நினைத்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாளில் ஒரு முறை அவரைச் சந்தித்ததைப் பேசியதைப்  பெருமிதமாகக் கருதுகிறேன். 
2015 ஆம் ஆண்டு என் பிறந்த தினம் போதுதான் வெள்ளம் புயல் அடித்து புத்தகங்களை எல்லாம் நாசமாகிவிட்டன.  ஆனால் அதிர்ஷ்டவசமாய் என் கார் தப்பி விட்டது. புயல் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் அஜித் படம் பார்க்க காரில் போயிருந்தேன். பார்கிங் பண்ணும்போது என் கார் இன்னொரு கார் மீது மோதி என் காருக்கும் சேதம்  அன்று என் காரை நான் பார்க் பண்ணவிலலை.  தியேட்டரில் உள்ள ஒருவரைத்தான் பார்க் பண்ணக் கொடுத்திருந்தேன்.
நல்லகாலம் அவர் காரை இடித்ததால் அண்ணாசாலையில் உள்ள மெக்கானிக் கடைக்குப் போகும்படி ஆயிற்று.  வீட்டில் வைத்திருந்தால் கார் வெள்ளத்தில் மூழ்கி இன்னும் மோசமாக உருமாறி இருக்கும்.  ஏன் காரே போயிருக்கும்.
எல்லாம் நம்மை அறியாமலேயே யாருடைய சித்தம் இருக்கிறது. 
அந்த ஆண்டு அப்போதுதான் புதிதாக அடித்து அடுக்கி வைத்திருந்த கவிதைத் தொகுதி போய்விட்டது.  கூழ் கூழாகி விட்டது.  வேற சில புத்தகங்களும் போய்விட்டன.
ஒவ்வொரு முறையும் பெரிய முயற்சி செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறேன்.  பதிப்பாளரும் நானே.  எழுத்தாளரும் நானே.  
எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருப்பேன்.
இந்தக் கொரானா காலத்தில் நண்பர்களை உறவினர்களை  இழந்து விட்டேன்.
இதெல்லாம் மீறி இந்த ஆண்டு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.  ஜீரோ டிகிரி பதிப்பாளர் என் கதைகளின் 9 எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள்.  அப் புத்தகத்தின் தயாரிப்பு ஆங்கிலப் புத்தகம் பார்ப்பதுபோல் இருக்கிறது.  அஸ்வினி குமார் என் கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் பார்க்கும்போது என் புத்தகம்தானா என்ற பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Dad’s Favourite Newspapaer  என்பதுதான் புத்தகத்தின் பெயர்.   இரண்டாவது புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகம்.  ஏற்கனவே துளிகள் 1 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  நான் எப்போதும் 100 பக்கங்களுக்குள் என் புத்தகத்தைக் கொண்டு வருவதை விரும்புவேன்.  துளிகள் 1 என்ற புத்தகத்தைப் போல் துளிகள் 2.    இந்தப் புத்தகங்களை ஒருவர் வாங்கிப் படிக்க  ஆரம்பித்தால் கீழேயே வைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.. 

துளிகள் 155 – திடீரென்று சொன்னார்..

 24.11.2020

அழகியசிங்கர்

ஜெயராமன் பாகவதர் என் வீட்டில்தான் குடியிருந்தார். என் புதல்வனின் திருமணத்தின்போது ஜெயராமன் பாகவதரின் ராதா கல்யாணம் நடந்தது.  சிறப்பாக இருந்தது.
அதற்கு முன் வரை எனக்கு ராதா கல்யாணம் என்றால் எப்படி நடத்துவார் என்பது தெரியாது.  அன்று பார்க்கும்போது என்னால் மிகவும் ரசிக்க முடிந்தது.
ஜெயராமன் பாகவதர் மறக்க முடியாத ஒருவராக மாறிவிட்டார்.  அவரை நான் எப்போதும் கோவை ஜெயராமன் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் விருட்சம் வாசகர்.  ஆன்மிகத்தில் அவர் அதிகமாக ஈடுபட்டதால் அவர் இலக்கியம் பக்கம் திரும்ப முடியவில்லை. 
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு  போஸ்டல் காலனியில் என் இல்லத்திற்கு அவரே குடி வருவாரென்று எதிர்பார்க்கவில்லை.
அவர் வசித்த இடத்தில் உள்ளே நுழையும்போது ஞானானந்த சுவாமிகள் படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். 3 ஆண்டுகள் தங்கியிருந்தார்.   ஒருநாள் திடீரென்று அவர் போன் செய்து வீட்டை காலி  செய்வதாகக் கூறினார்.  எனக்குத் திகைப்பாக இருந்தது. 
என் பெண் பிரசவம்போது இந்த இடம் போதாது என்றார். மேலும் வீட்டிலுள்ள தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்றார்.  ஆனால் அவர் குடிபோன இன்னொரு இடம் இதை விட மோசம்.  2வது மாடி. 
அவர்காலி செய்து போனவுடன் என் வீட்டை நூல்நிலையமாக மாற்றி விட்டேன்.    
ஆனால் சில மாதங்களுக்கு முன் போன் செய்து,   ‘உங்கள் வீட்டிற்கே மறுபடியும் வந்து விடுகிறேன்,’ என்றார.
என்னால் அது முடியாது என்றும் தெரியும்.  ஏற்கனவே புத்தகங்களைக் குடி வைத்திருக்கும் நான் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்று தெரியும்.  நானும் அதை விரும்பவில்லை.
ஒவ்வொரு முறை என்னுடன் போனில் பேசும்போது நட்புடன் விசாரிப்பார். 
நேற்று காலை அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.  போஸ்டல் காலனியில் உள்ள அடுக்ககத்தின் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர்தான் இந்தச் செய்தியை முதலில் சொன்னார்.  உடனே என் நண்பர் வைத்தியநாதன் வாட்ஸ்அப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். 
 அவர் வீட்டிற்குப் போன் செய்தேன்.  யாரும் போனை எடுத்துப் பேசவில்லை.  
ஜெயராமன் பாகவதர் இனி இல்லை என்பதை  நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.     

சூமில் புதுமைப்பித்தன் கதைகள் வாசிக்கும் கூட்டம்..

அழகியசிங்கர்

 12 பேர்கள் சேர்ந்துகொண்டு புதுமைப்பித்தன் கதைகளை ஒரு அலசு அலசினோம்.  அதுவும் முக்கியமாகப் பிரபலமாகாத கதைகள்.  எல்லோரும் பேசப்பட்ட கதைகளை எடுத்து வைத்துவிட்டு யாரும் அவ்வளவாகப் பேசாத கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினோம்.  அப்படிப் பேசிய ஒளிப்பதிவை இங்கு அளிக்க விரும்புகிறோம்.


கவிதையும் ரசனையும் – 5

அழகியசிங்கர்

ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர். ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.

அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ‘ழ’ என்ற சிற்றேட்டிலும், பின்னால் ‘நவீன விருட்சம்’ இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.

‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது.

அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படையில் வாழ்க்கையில் நிதர்சன உண்மையைக் கிண்டலாகப் பார்க்கும் தன்மை இருக்கும்.மரணத்தைப் பற்றிய சிந்தனை ஆழமாக அவர் கவிதைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

இப்போது அவர் கவிதை ஒன்றிரண்டு பார்க்கலாம்

.”பாடைக் காட்சி”

நான்கு பேர் சுமக்க

கடற்கரையிலிருந்து பாடை

கிளம்பியது

பேசியபடி நண்பர்கள் சிலர்

பாடையை தொடர்ந்தார்கள்

யாருடைய முகத்திலும்

வருத்தமில்லை\

ஒருவரோடு ஒருவர்

பேசிக்கொண்டு போனார்கள்

பாடையைத் தூக்கிச் சென்றவர்கள்

மிகவும் நிதானமாக நடந்தார்கள்

பாடை குலுங்காமலும்

அதிகம் அசையாமலும்

கவனித்துக் கொண்டார்கள்

நண்பர்கள் சிகரெட் பற்ற

வைத்தார்கள்

சினிமா பற்றியும் அரசியல்

பற்றியும்

விவாதித்தார்கள்.

பஸ்ஸிலும் தெருவிலும் பலர்

பாடைக் காட்சியை கண்டார்கள்

சடலத்தின் கழுத்தில் மாலை

இல்லை

பின் போனவர்கள் யாரிடமும்

மரண காரியம் செய்யும்

தோற்றமில்லை

பீடிக்கு தீ கேட்பது போல

ரிஷாகாரன் ஒருவன்

நெருங்கி வந்து கேட்டான்

செத்துப் போனது யார் ஸார்?

ஒருவரும் அவனுக்குப் பதில்

சொல்லவில்லை

வெகுநேரம் சென்றபின் பாடை

திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்

இறக்கப்பட்டது.

எல்லோரும் மௌனமாக

நின்றார்கள்

பாடையில் இருந்தவர் எழுந்து

வீட்டிற்குள் போனார்

தூக்கி வந்தவர்களுக்குப் பணம்

தந்துவிட்டு

நண்பர்கள் உள்ளே சென்றார்கள்

வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து

கேட்டார்கள் –

என்ன கர்மம் இது

ஏனிப்படி பாடையில் வரணும்?

ரொம்பத்தான் களைப்பாக

இருந்தது

பஸ் டாக்ஸி ரிஷா

எதிலும் ஏறப் பிடிக்கவில்லை

பாடையில் படுத்து நன்றாக

தூங்கிக் கொண்டு வந்தேன்

என்றார்

மரணம் நிகழ்ந்த துக்கம்

முகங்களில் படர

பெண்கள் நிசப்தமானார்கள்

களைப்புடன் நண்பர்களும்

நாற்காலிகளில் சாய்ந்து

கண்மூட

வெற்றுப்பாடை

வீதியில் போனது,

இந்தக் கவிதை எளிதில் படிப்பவருக்குப் புரிந்து விடும். அவ்வளவு எளிமையாக எழுதப்பட்டிருக்கிற கவிதை. ஒருவிதத்தில் அங்கத சுவை கொண்ட கவிதை. பாடைக்காட்சி என்று படிக்கும்போது ஒரு துனுக்குற மன நிலையைத் தானாகவே உண்டாக்கும். பாடை என்பது மரணத்தைக் குறிக்கும் சொல்லாகவே இருக்கிறது.ஆனால் மரணமடைந்தவர்களைப் பாடையில் தூக்கிக்கொண்டு போவதுதான் இயல்பாக நடக்கக் கூடியது. இங்கு வேறு மாதிரி நடக்கிறது.கடற்கரையிலிருந்து ஒருவன் அவன் வீட்டிற்குப் பாடையில் படுத்துக்கொண்டு வருகிறான். கூடவே அவன் நண்பர்கள். பாடையைத் தூக்கிக்கொண்டு போகச் சிலர்.பாடை நிதானமாகப் பயணம் ஆகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. பாடையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களுக்கு எந்தத் துக்கமுமில்லை. அதேபோல் பாடையில் படுத்துக்கொண்டிருப்பவருக்கும் வருத்தமில்லை. சொகுசாகத் தூங்கிக்கொண்டு வருகிறார்.ஆனால் வீட்டில் வந்து இறங்கும்போதுதான் வீட்டில் உள்ளவர்கள் பதட்டமடைகிறார்கள்.பாடையில் படுத்து நன்றாகதூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்மரணம் நிகழ்ந்த துக்கம்முகங்களில் படரபெண்கள் நிசப்தமானார்கள்என்று எழுதியிருக்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு ரிக்ஷாக்காரன் நெருங்கி வந்து கேட்கிறான் செத்துப் போனது யார் சார் என்று. அதுவும் எப்படிக் கேட்கிறான் என்றால், பீடிக்கு தீ கேட்பது போல. செம்ம நகைச்சுவை உணர்வு பொங்க எழுதியிருக்கிறார்.பாடையில் சவாரி செய்வதைக் கிண்டலாகக் கொண்டுவந்தாலும் அது தொடர்பாக ஏற்படும் மரண பயத்தையும் குறிப்பிடுகிறார்.இறுதியில் வெற்றுப் பாடை வீதியில் போனது என்று முடிக்கிறார். மரணம் என்றாலே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பாட்டாலும் பயத்தையும் வேடிக்கை உணர்வாகவும் மாற்றி விடுகிறார் கவிதையில்.இதை ஒரு சர்ரியலிச கவிதையாகக் கருதலாம்.அடுத்தது இன்னொரு கவிதையை எடுத்துக் கொள்வோம். மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைக்குத் தலைப்பொன்றுமில்லை.

பொழுது விடிந்து

தினமும் நான்”

வருவேனென்று

கடற்கரை மண்ணெல்லாம்

குஞ்சு நண்டுகள்

கோலம் வரைந்திருந்தன

இங்குக் குஞ்சு நண்டுகள் முன்னமே கோலம் வரைந்து விடுகின்றன. இது இயல்பாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி.இந்த இயல்பான நிகழ்ச்சியை கவிகுரலோன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். சாதாரண விவரணையில் அழுத்தம் கொடுப்பது குஞ்சு நண்டுகள்தான்.தினமும் நடைப்பயிற்சிக்காக வருகிற கவிகுரலோன் குஞ்சு நண்டுகளின் அட்டகாசத்தைக் கவனித்துப் பூரித்துப் போகிறான்.தனக்குத் தென்படுகிற சின்ன சின்ன சம்பவங்களை அழகாகக் கவிதை ஆக்குகிறார். பாடைக் காட்சி மாதிரி சில கவிதைகள் அவரை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் இவர்தான் பாடுபொருளாகத் தென்படுகிறார்.

(இந்த வார (22.11.2020) திண்ணையில் ‘கவிதையும் ரசனையும்’என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை. ),

1Chandramouli AzhagiyasingarLikeCommentShare

Comments

துளிகள் 155 – நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்.

20.11.2020

அழகியசிங்கர்

போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில்   குறிப்பிட்டிருந்தேன்.  நேற்று திரும்பவும் மேற்கு மாம்பலம் கிளை அலுவலகத்திற்குப் போக நேரிட்டது.

ஒரு செக் கிளியரிங்கில் தாமதமாகிவிட்டது.  அதுவும் நவீன விருட்சம் இதழிற்காகச் சந்தாவாக ரூ150 ஐ ஒரு சந்தாதாரர் செக்.

வங்கிக் கிளைக்குப் போனவுடன் நான் ஏடிஎம்மில் ஏமாந்ததை ஞாபகம் வைத்திருந்த ஒரு பெண்மணி, சொன்ன செய்தியால் திகைத்துவிட்டேன்.
சார், இந்தக் கொரானா காலத்தில் பலர் லட்சக்கணக்கில் ஏமாந்து போகிறார்கள்.  இரண்டு நாட்களுக்குமுன் ஒரு வாடிக்கையாளர் 2 லட்சம் ஏமாந்து விட்டார்.  பாவமாக இருக்கிறது, என்றார். 

போனில் ஏமாற்றுபவர்கள் பேசும்போது ஹிந்தியும் தமிழும் கலந்து பேசுகிறார்களாம்.  மேலும் மானேஜர் பேசுகிறேன் என்கிறார்களாம்.  பெயர் கேட்டால் கேட்பவரைத் திட்டுகிறார்களாம். அங்கே இன்னும் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்கிறார்கள். 

எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் கொடுத்த புகாருக்கு எந்தப் பதிலும் வரவில்லை கமிஷனர் அலுவலகத்திலிருந்து.  அவசரம் அவசரமாக ஒரு ஞாபகமூட்டல் கடிதம் தாயரித்தேன்.  

எதற்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்யலாமென்று போன் செய்தேன்.  பொதுவாக கமிஷனர் அலுவலகத்திற்குப் போன் செய்தால், யாரும் எடுத்துச் சரியாகப் பதில் சொல்ல மாட்டார்கள்.  இப்போதும் அப்படித்தான் நடந்தது.  பாங்க் பிராடு பிரிவு  2வது தளத்தில் இருக்கிறது.  அங்குத் தொடர்பு கொண்டு  போனில் கேட்டேன்.  போனில் தொடர்பு கொண்டவர்  வேறு ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார்.  அங்குப் பேசினால் திரும்பவும் பழைய எண்ணிற்குப் பேசச் சொன்னார்கள்.

எனக்குத் தெரியும் இந்தப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று.  அதனால் நான் மேலே தொடர்பு கொள்ளாமல் அலட்சியமாக  ஒன்றரை வருடம் கழித்து விட்டேன்.

நேற்றைய சம்பவம் திரும்பவும் தொடர்பு கொள்ள வைத்தது.  நான் திரும்பவும் அவர்களுக்கு இந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி கடிதம் எழுதி விட்டேன்.
ஆனால் பலர் அந்நியாயமாக ஏமாந்து ஏமாந்து போகிறார்களே என்று தோன்றியது.இந்தக் கொரானா நேரத்தில் இப்படி ஏமாறுவது அதிகமாகி விட்டது.

இன்று மதியம் தூங்கி எழுந்தபோது ஒரு போன் வந்தது.  பேசியவர் ஒரு பெண்மணி. கிரிடிட் கார்டு ஏடிஎம் கார்டைப் பற்றி விசாரித்தாள்.  அவள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் சத்தம்.   உடனே போனை கட் செய்து விட்டேன்.  திரும்பவும் போன் செய்தாள்.  அதெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் போனைத் துண்டித்தேன்.  ஆபத்து போனில் என்று தோன்றியது.    



சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கம்

அழகியசிங்கர்


20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்திற்கு வருகைப் புரிந்து கவிதைகளை கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் திரு சீனிவாச நடராஜன். தலைப்பு : தற்கால கவிதைகளில் வடிவமும் உள்ளடக்கமும். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. வ வே சு – சுந்தரராமசாமி கவிதைகள்

2. ஷாஅ – ஆனந்த் கவிதைகள்

.3. ரவீந்திரன் – தேவதச்சன் கவிதைகள்

4. கணேஷ்ராம் – கல்யாண்ஜி கவிதைகள்

5. ஸ்ரீதர் – ஞானக்கூத்தன் கவிதைகள்

6. சிறகா – அனார் கவிதைகள்

7. பானுமதி – குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவ வேண்டும். எல்லோரும் முழுமையாகப் பங்கேற்று கவிதை வாசிப்பை உன்னிப்பாகக் கேட்க வேண்டும்.

மாலை 6.,30 மணிக்கு வெள்ளியன்று நடைபெற உள்ளது. Meeting ID: : 818 0247 4818 Passcode: : 827170 Topic: Virutcham Poetry 26th Zoom Meeting Time: Nov 20, 2020 06:30 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81802474818?pwd=cVJWbFJTeVFONzNGeFFoYzlFTzhRZz09 Meeting ID: 818 0247 4818 Passcode: 827170

நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை

அழகியசிங்கர்

‘நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை’ என்ற தலைப்பில் திரு பிரவீண் பஃறுளி  13.11.2020 (வெள்ஙளிக்கிழமை) அன்றுஆற்றிய உரையை  ஒளிப்பதிவு செய்கிறேன்.  கேட்டு மகிழுங்கள்.


.