அழகியசிங்கர்
17.04.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு இனிதாக நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவு இங்குத் தரப்படுகிறது.
கலந்து கொண்டு கவிதை வாசித்தவர்களுக்கு நன்றி.
அழகியசிங்கர்
17.04.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு இனிதாக நடைபெற்றது. அதன் ஒளிப்பதிவு இங்குத் தரப்படுகிறது.
கலந்து கொண்டு கவிதை வாசித்தவர்களுக்கு நன்றி.
அழகியசிங்கர்
இதுவரை ஒன்பது கதை வாசிக்கும் கூட்டம் நடந்து விட்டது. இப்போது நடைபெற உள்ள கூட்டம் பத்தாவது கூட்டம். லா.ச.ரா கதைகளைத் தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்த உள்ளேன். கதைகளை வாசித்து 15 நண்பர்கள் கதைகளைக் குறித்துப் பேசுகிறார்கள்.
வரும் வெள்ளிக்கிழமை (23.04.2021) மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி
Time: Apr 23, 2021 06:30 PM IndiaJoin Zoom Meeting
https://us02web.zoom.us/j/82144546544…
Meeting ID: 821 4454 6544
Passcode: 469795
துளி – 187
அழகியசிங்கர்
நகுலனின் நீண்ட கால நண்பர் நீல பத்மநாபன். அவருடைய நீள் கவிதை நகுலம்.
இந்தப் புத்தகம் விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. கடந்த ஆண்டு விருட்சம் வெளியீடாக இரண்டு நூல்கள்தான் சொண்டு வர முடிந்தது.
ஒரு புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகமும் இரண்டாவது புத்தகம் ஒரு கதை ஒரு கருத்து தொகுதி 1 என்ற புத்தகமும். இதைத் தவிர 4 இதழ்கள் விருட்சமும்.
ஆனால் 2021 ஆம் ஆண்டு எந்தப் புத்தகமும் இதுவரை கொண்டு வந்ததில்லை.
சில புத்தகங்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளன. தற்போது நீல பத்மநாபனின் நகுலம் என்ற நீள் கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது.
இப்புத்தகம் நீல பத்மநாபன் மேற் பார்வையில் திருவனந்தபுரத்தில் உருவானது. இப்புத்தகத்தில் இன்னொரு விசேஷம் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நீல பத்மநாபனின் கவிதைத் தொகுதிகள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன.
நகுலம் என்ற நீள் கவிதை அதன் தொடர்ச்சியாக முத்திரை பதித்துள்ளது. முழு நீள வாழ்க்கை வரலாற்றில் நகுலன் ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீல பத்மநாபனுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார். உண்மையில் தன் நட்பின் ஆழத்தை நகுலம் என்ற பெயரில் ஒரு நீள் கவிதை
நீள் கவிதை மட்டுமல்ல இந்தப் புத்தகத்தில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. கவிஞர் ஷண்முக சுப்பையாவைப் பற்றி ஒரு உரையாடல் நகுலனும் நீலபத்தமநாபனும் நிகழ்த்தியது இதில் வெளிவந்திருக்கிறது.
152 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை : ரூ.150.
இப் புத்தகத்தின் பிரதி விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி எண் : 9444113205.
விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
பத்திரிகைகள் பலவிதம்….
அழகியசிங்கர்
‘ புதிய புத்தகம் பேசுது’ என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.
ஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன். இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை. பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு இதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது. வாசிப்பின் வாசல் திறப்பவர்கள் என்று தலைப்பில் இந்தப் பேட்டி வெளிவந்திருக்கிறது.
அடுத்தது இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள். நக்கீரன் கோபால் பற்றிய கட்டுரை. இதை எழுதியவர் ச.மாடசாமி. கோபால் என் வகுப்பறை மாணவர் அல்லர் மற்றொரு வகுப்பûயின் மாணவர் என்கிறார். கோபாலைப் பற்றி பற்பல நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இந்தக் கட்டுரையில்.
புதிய புத்தகம் பேசுதுவின் ஆசிரியர் ஆயிஷா இரா நடராஜன்.அவர் 15 புத்தகங்களைப் பற்றி விவரித்திருக்கிறார். சரியாக ஒரு பாரா ஒரு புத்தகத்திற்கு வீதம். இந்த முறையில் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது சிறப்பாக உள்ளது.
‘வலை வாசல் வருக’ என்ற புத்தகத்தைப் பற்றிக் கூறும்போது. வியப்போடு நமக்குச் சற்று வியர்க்கவும் செய்கிறது என்கிறார். முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம் எழுதிய கணினி இயல் குறித்து தமிழ்ப் புத்தகம்.
‘இலக்கணம் இனிது’ என்ற நா.முத்து நிலவன் புத்தகம். தமிழ் பேசும், எழுதும் நல்லுலகிற்கு மிகவும் தேவையான பங்களிப்பு இந்த நூல்.
மூன்றாவது புத்தகமாகக் ‘கண்ணில் தெரியும் கடவுள்’ என்ற ஹைக்கூ கவிதைகள் பற்றிய புத்தகத்தைப் பற்றி எழுதி உள்ளார். இந்த புத்தகம் ஒரு பல மிக அசலான ஹைச்கூ கவிதைகளை உள்ளடக்கியது.
உதய்சங்கரின் ‘பொம்மைகளின் நகரம்’ சிறார் புத்தகம். குழந்தைகளிடையே கற்பனைத் திறனை வளர்க்கும் சூப்பர் சித்திரம் என்கிறார்.
‘இந்திய சுதந்திர8ப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை ஜெ.ராஜா முகமது எழுதி உள்ளார். ஆயிஷா இந்தப் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது இந்த நூலை வாசித்தபோது பல பக்கங்களைத் திருப்ப முடியாமல் நான் கண்ணீர் கசிந்தேன் என்று குறிப்பிடுகிறார்.”
எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைத் தொகுப்பான ‘நன்றி ஓ ஹென்றி’ புத்தகத்தை நேர்த்தியான தொகுப்பு என்கிறார்.
அறிவியல் புனைவுகளை எழுதுவது கவிஞர் புவியரசு எனும் ஆளுமைக்குப் புதிதல்ல என்கிறார் ஆயிஷா.
‘நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ்’ என்ற மொழிபெயர்ப்பு புத்தகம். மொழி பெயர்த்தவர் சு. சுப்பராவ். இந்த நூல் ஒரு ஆவணம்.
‘காராபூந்தி சிறார் கதைகள்’ விழியன் எழுதியது. மின்னல்கள் எனச் சிறார் கதை ஆக்கிய விதத்தை வியக்கிறேன் என்கிறார் ஆயிஷா.
‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற கி.வீரமணி புத்தகம். வேறு எந்த தமிழறிஞரையும் விடத் தமிழுக்கு அதிக பங்களிப்பைச் செலுத்தியவர் தந்தை பெரியார் என்பதை ஆழமாக நிறுவும் அற்புத படைப்பு இந்த நூல் என்கிறர் ஆயிஷா.
என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு என்ற தகாஷி நாகாய் புத்தகம் மொழி பெயர்த்தவர் கு.ம ஜெயசீலன் கல்வி, குழந்தை வளர்ப்பு, அதில் அரசின் பொறுப்பு என்று எல்லாவற்றையும் கிழிக்கும் கசப்பு மருந்து இந்த நூல்.
‘101 கேள்விகளும் 100 பதில்களும்’ என்ற புத்தகத்தைத் தினகரன் எழுதியிருக்கிறார். அரிய தகவல்கள் இந்த நூஙூல் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார் ஆயிஷா.
‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ என்ற சரிதா ஜோவின் முதல் சிறார் கதை. சிறார் இலக்கிய படைப்பாளிகளில் பெண்கள் குறைவு. அதிலும் ஒரு ஆசிரியை என்கிறார்.
‘அப்பாவின் நாற்காலி’ என்ற கவிதைப் புத்தகம். வளவ துரையன் எழுதிய கவிதைகள். பல கவிதைகள் மிகவும் எளியவை என்கிறார் ஆயிஷா
‘உரக்கப் பேசு’ என்கிற சுதன்வா தேஷ்பாண்டே யின் மொழிபெயர்ப்பு நூல் மொழி பெயர்த்தவர் அ மங்கை. இன்றைய பாசிச அரசியல் சூழலில் உரக்கப் பேசப்பட வேண்டிய படைப்பு என்று முடிக்கிறார் ஆயிஷா.
இந்தப் பத்திரிகையில் ஆயிஷாவின் 15 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.
வாசிப்பு ரசனை வாழ்க்கை என்ற தலைப்பில் எஸ்.வி வேணுகோபாலன் ஒரு தொடர் கதையை எழுதிக்கொண்டு வருகிறார்.ஆர் சூடாமணி எழுதிய நெருப்பு என்ற கதையை எடுத்து அலசுகிறார்.
நேர்காணலில் சிந்து வெளி ஆய்வாளராகவும் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் பரவலாக அறியப்படுபவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இடம் பெறுகிறார். நேர்காணல் செய்தவர் சங்கர சரவணன். நீண்ட இந்த நேர்காணல் சிறப்பாக உள்ளது. பல அரிய தகவல்களைக் கொண்டது.
‘கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் மணியன் அவர்கள் வறீதையா கான்ஸ்தந்தின் புத்தகமான ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ என்ற நூலினை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புத்தகம் கடலோர மீனவர்கள் வாழ்வு, அவர்களின் தொழில் முறை குறித்து விரிவாகக் கூறுகிறது.
சிதம்பரம் இரவிச்சந்திரனின் ‘வீட்டிலிருந்து காட்டிற்கு’ என்ற சுற்றுச் சூழல் தொடர் ஒன்றும் வந்துள்ளது.
‘கொமறு காரியம்’ என்ற கீரனூர் ஜாகிர்ராஜா சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஸ்ரீநிவாஸ் பிரபு விமர்சனம் செய்துள்ளார். உடனே இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகிறது.
வெறும் பயணக் கதை அல்ல கம்யூனிச இயக்கத்தின் பிரசவ வலி என்ற கட்டுரையை க.பொ.அகத்தியலிங்கம் எழுதி உள்ளார். கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை.
கடவுளின் பெயரால் காமக்கூத்து என்ற கட்டுரை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் வந்துள்ளது. இப்புத்தகத்தைப் பற்றி பொ.வேல் சாமி கட்டுரை எழுதி உள்ளார். தேவதாசிகள் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாசிரியர் தரும் தகவல்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதற வைக்கும் என்று குறிப்பிடுகிறார் வேல் சாமி.
தமிழினி வெளியிட்டாக வந்த முன்னத்தி என்ற நாவலை மாற்கு என்பவர் எழுதி உள்ளார். இரு ஒரு வரலாற்று நாவல். ஒவ்வொருவரும் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியிருப்பவர். அ.ஜெகநாதன்.
இப்படி புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாதம் வெளிவந்த பத்திரிகை முழுவதும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறது.
இது பாரதி புத்தகலாயம் தயாரிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தாலும், அவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் புத்தகங்களையும் அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.. புத்தகம் பேசுகிறது இதழில் என் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர் சா.கந்தசாமி எழுதியிருக்கிறார். இந்தப் பத்திரிகை கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் கொண்டு வருவது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. புத்தகம் பேசுது தொண்டு தொடரட்டும்.
( தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஏப்ரல் 2021 திண்ணையில் வெளிவந்தது )
துளி – 186
அழகியசிங்கர்
கவிதை நேசிக்கும் கூட்டத்தை நேற்று நடத்தினேன். இது 47வது கூட்டம். நண்பர்களின் துணையின்றி நடத்தியதில்லை. மற்றவர்களுடைய கவிதைகளை வாசித்தோம்.
பலருடைய கவிதைகளை வாசித்தோம். நான் ரெங்கநாயகி கவிதையையும், ஆத்மாநாம் கவிதையையும் வாசித்தேன்.
மனுஷ்யபுத்ரன் கவிதைகளை தமிழ்ச்செல்வி என்ற கவிஞர் வாசித்தார். திருலோகசீத்தாராம் கவிதையை வ.வே.சு வாசித்தார். இப்படிப் பலர் வாசித்த கவி அரங்கம் சிறப்பாக முடிந்தது.
கூட்ட ஆரம்பத்தில் நான் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசித்தேன். காசியபன் கவிதையை வாசித்தேன். பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன்.
நான் அறிமுகம் செய்த கவிதைப் புத்தகம் பெயர். ஜிதேந்திரனின் புத்தகம். ‘கல் சூடாக இருக்கிறது.’
108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.100. சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
இதிலிருந்து நான் படித்த கவிதையை இங்கு வெளியிடுகிறேன்.
எத்தனை கவனமிருந்தும்
நிகழ்ந்துவிடுகிறது விபத்து.
மோதிக் கொன்றோம்
நானும் ரயில் பூச்சியும்!
என் சக்கரத்தில்
நசுங்கியது ரயில்.
ரயிலோட்டத்திற்கு நிற்கும் நான்
ரயில்பூச்சிக்கு நின்றிருக்கலாம்!
இப்பொழுதெல்லாம்
என்னை முந்திச் செல்கின்றன
ரயில் பூச்சிகள்.
பிறகொரு பொழுதில்
ஒன்றின்மீது ஒன்றாக
ரயில்பூச்சிகள் நகர்கையில்
உதட்டில் சிறு புன்னகையோடு நானும்
ஊர்ந்து சென்றேன்!
17.04.2021
46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 10.04.2021 அன்று சனிக்விழûமை 6.30 மணிக்கு நடந்தது.
அழகியசிங்கர்
அதில் கலந்து கொண்டவர்கள் வாசித்தவர்களின் கவிதை ஒளிப்பதிவு. கேட்டு மகிழுங்கள்.
அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 17.04.2021 நடைபெற உள்ளது.
இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது.
நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகள் வாசிக்க வேண்டும்.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
அழகியசிங்கர்
சதுர்புஜன், இராயசெல்ப்பா என்ற இரு கதைஞர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து 12 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள். அதை சூம் மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளோம். அதைக் கண்டு ரசியுங்கள்.
அழகியசிங்கர்
இன்று கடைகளுக்குச் சென்று அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். கொரோனா உலவும் தெருக்கள் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. போஸ்டல் காலனி முதல் தெருவில் நுழைந்து என் நூல்நிலையம் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடியில் மாவிலைகள் பறித்துக் கொண்டு வந்தேன்.
உள்ளே நூல் நிலையத்திற்குள் சென்று புத்தகங்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்துக்கொண்டேன். ஒரு கையடக்கப் பதிப்பாகத் திருவாசகத் தெளிவுரை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன். கழக வெளியீடு. சித்தாந்த பண்டிதர் ப இராமநாதப்பிள்ளை உரை ஆற்றியது.
‘அவனரு ளாளே அவன்தாள் வணங்கி’ என்ற வரி உடனே படித்த ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக்கொண்டது. அப்புறம் ஒரு பழைய இதழ் ‘அட்சரம்’ கண்ணில் பட்டது. படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். ஐந்தாவது இதழ் 2003 செப்டம்பர் மாதம் அச்சடிக்கப்பட்ட இதழ்.எஸ்.ராமகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த இதழ். சிறப்பாக உள்ளது.
இரண்டு புத்தகங்களையும் பையில் போட்டுக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்து விட்டேன். முகநூலைப் படிக்கும்போது எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று என்று தெரிந்தது.என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அட்சரம் பத்திரிகை எடுத்துக்கொண்டு வந்தது தற்செயலான விஷயம். ஆயிரத்தோரு இரவுகளின் சிறப்பிதழ்.
இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை. ஏன்? உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஆத்மாநாம் உயிரோடு இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம். அப்போதுதான்
நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.
நிஜம்
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்
என்ன அர்த்தம் என்று சொல்லவில்லை. ஆத்மாநாம் சிரித்துக்
கொண்டார். ஞானக்கூத்தன் இந்தக் கவிதையைக் குறித்துச் சொன்ன விஷயம் இன்னும் விசேஷ கவனம் பெற்றது.
முதலில் ஆத்மாநாம் இந்தக் கவிதையை எழுதிக்கொண்டு ஞானக்கூத்தனிடம்தான் படிக்கக் கொடுத்தார். ஞானக்கூத்தன் அதைப் படித்துவிட்டு சிரியோ சிரி என்று சிரித்தாராம்.
இப்படி விதம்விதமாய் எழுதி சோதனை செய்து பார்ப்பதில் ஆத்மாநாமிற்கு விருப்பம். இதில் நிஜம் எது? நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது நிஜம் மாறிவிடுகிறது. நேற்றைய நிஜம் இன்றைய நிஜம் இல்லை. இன்று நிஜம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நாளை மாறிவிடும்.
உண்மையில் நவீன கவிதை என்பது ஆத்மாநாமிடம்தான் ஆரம்பிக்கிறது.
அவர் பெரும்பாலும் தன்னைப் பற்றிய கவிதைகளையே எழுதியிருக்கிறார். தன் சிந்தனையில் தோன்றுகிற தாறுமாறான எண்ணத்தையும் கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருடைய கவிதைகளில் பொது உடைமை தத்துவமும் உண்டு.
“
பிச்சை
நீ ஒரு பிச்சைக்காரனாய் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.
எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்
உன் பசிக்காக உணவு
சில அரிசி மணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர”
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர
“ இதனைச் சொல்வது
“ நான் இல்லை நீதான்
ஆத்மாநாமின் இந்தக் கவிதை ஒரு முக்கியமான கவிதை. உண்மையில் பிச்சையைப் பற்றி ஒரு தத்துவத்தையே கொண்டு வருகிறார். இதேபோல் சமூக சிந்தனை அதிகமாக உள்ளது இவர் கவிதைகளில். கடைசி வரியில் ‘இதனைச் சொல்வது நான் இல்லை நீதான்,’ என்கிறார்.
இந்தக் கவிதை மூலம் ஒரு தீர்ப்பும் கூறுகிறார். பிச்சையை நீக்க முடியாது என்கிறார். உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை. அப்படியென்றால் யாரிடம் இருக்கிறது. இன்றைய அரசியல்வாதியிடம். அவர்கள் நினைத்தால் யாரும் பிச்சை எடுக்காமல் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியுமா? ‘சில அரிசி மணிகளில் இல்லை’ என்கிறார் ஆத்மாநாம்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தைக் கூறுவதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி ஆத்மாநாம் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கூட்டங்களுக்குச் செல்வார்.
முன் யோசனை எதுவுமின்றி கவிதை எழுத வேண்டுமென்று நினைக்கிறார் ஆத்மாநாம். அவருடைய கவிதை தலைப்பிடப்படாதது என்ற கவிதையைப் பார்க்கலாம். இது ஆத்மாநாமின் அற்புதமான கவிதை.
எடுத்த உடனே,
இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது
திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன்தானா
ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி
இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்
இப்படியும் ஓர் நம்பிக்கை
இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்
அவற்றின் தவளைக் குரல்கள்””
கேட்கும் அடிக்கடி
அதனை ஒதுக்கத் தெரியாமல்”
தவிக்கையில்
நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்
நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்
இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்
ஆத்மாநாமின் தன்னைப் பற்றிய கவிதை. இம்மாதிரியான ஒரு கவிதையை ஆத்மாநாமை தவிர வேற யாரும் எழுதியிருக்க முடியாது. தன்னைப் பற்றி வெளிப்படுத்தும்போது தன்னையே உரித்து கவிதை மூலம் காட்டுகிறார்.
இதில் ஒரு வரி வருகிறது.
இருண்ட நேற்று
எனக்கிருண்ட கணங்கள்
அவர் ஏன் அப்படி எழுதியிருக்கிறார். அவருடைய மனக் கிலேசத்தைத்தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார்.
நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்
ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? மென்மையான மனம் கொண்ட ஆத்மாநாமிற்கு நிகழ்ச்சியின் சப்தங்கள் அலற வைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தக் கவிதை எப்படி முடியும் என்று தெரியாதுதான். முடியும் போது ஆரம்பத்தில் இருப்பவன்தானா என்ற கேள்வியைக் கேட்கிறார். மனநிலை என்பது எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகிறது. அப்படி மாறும்போது எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.
2083 ஆகஸ்ட் 11 என்ற கவிதையை ஒரு இன்லென்ட் லட்டரில் பதிவு எடுத்து அவர் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பினார் ஆத்மாநாம்.
அது ஒரு வினோதமான கவிதை. ‘என் கவிதை ஒன்று இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் கிடைத்தது என்று ஆரம்பிக்கும். இறுதி வரிகளில் ஒரு திகைப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம் என்று முடித்திருப்பார். இந்த விபரீதமான வரிகள்தான் கவிதை.
இன்று புதிதாக எழுத வருகிற கவிஞர்களுக்கு ஆத்மாநாம் ஒரு முன்னோடி. கொண்டாடப்பட வேண்டியவர்.