சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

 

அழகியசிங்கர்

வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து வாசிக்கிறோம். 10 போர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பிக்கவும். இது 11வது கூட்டம்.

Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

Time: May 14, 2021 06:30 PM

IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88495694488…

Meeting ID: 884 9569 4488Passcode: 452384

50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழûமை மாலை 6.30 மணிக்கு நடந்ததின் ஒளிப்பதிவு.

அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 50வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 08.05.2021  நடைபெற்றதின் ஒளிப்பதிவு.


கவிதையை நேசிக்கும் கூட்டத்தில்…

 27.04.2021
துளி – 193

அழகியசிங்கர்

கவிதை நேசிக்கும் கூட்டங்களில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.


49வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் 2 கவிதைப் புத்தகத்தை அறிமுகப் படுத்திúன்ன. சுரேஷ் ராஜகோபால் எழுதிய இரண்டு கவிதைப் புத்தகங்கள். 1. ஆர்ப்பரிக்கும் கடல் 2. வாடாமல்லி


நேற்று நடந்த 50வது கவிதைக் கூட்டத்தில் நான் அறிமுகப் படுத்திய கவிதைப் புத்தகம் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள். எழுதியவர் மனோஹரி.
சுரேஷ் ராஜகோபால் வாடாமல்லி என்ற புத்தகத்திலிருந்து.
புத்தகங்கள் நடுவிலே


புத்தகங்கள் நடுவிலே நான் பயத்திலே இருந்தேன் என்னருகே புத்தகங்கள் நடுக்கத்தில் இருந்தன புதுசு புதுசாக நூல்கள் வந்தவண்ணம் இருந்ததால் பயம் மட்டும் கூடிக்கொண்டே போயின புத்தகங்கள்போலே


‘கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்’ என்ற மனோஹரி கவிதைப் புத்தகத்திலிருந்து,
மீனைக் கொத்திய பறவையின் சிறகைப் பற்றிக்” கொண்டது துளி கடல்….!

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்

அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம்.
மோகினியும், ஜெகனும் : வணக்கம்.
அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம்.
மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
அழகியசிங்கர் ; ஆமாம்.
ஜெகன் : இந்தக் கதை அசோகராஜன் என்ற 40வயதுக்காரன் லதா என்கிற 20 வயதுக்காரியை காதலிக்கிற கதை.
அழகியசிங்கர் : ஆனா லதாவை அசோக் காதலிப்பதாக எந்த இடத்திலும் நாவலில் கூறவில்லை.
மோகினி : அசோகராஜன் லதா என்ற வண்ணத்தியைக் காதலிக்கிறான்.  அவள் அழகாக இருக்கிறாள்.
ஜெகன் : அவள் அம்மா இறந்து விடுகிறாள்.  அந்த ஊர்வலத்தில் அசோக்ராஜா லதாவைப் பார்க்கிறான்.  வளர்ந்த பெண்ணாக அவன் கண்களுக்கு அப்போதுதான் அவள் தென்படுகிறாள்.
மோகினி : அசோகராஜா குறும்படம் எடுப்பவன். நாடகம் அல்லது நதிக்கரை என்ற குறும்படம் முடித்தபோதுதான் லதாவின் அம்மா இறந்து விடுகிறாள்.
அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் ஒரே பேச்சு.  அதுவும் லதாவுடன்.
ஜெகன் : ஒரு இடத்தில் அசோகராஜா இப்படிக் குறிப்பிடுகிறான்.  ஜெகன் படிக்கிறான். . இதோ இந்தக் கணம் கூட நாம் ஒரு அறைக்குச் சென்று உடலுறவு கொண்டு விடலாம்.  ஆனால் அது வேண்டாம். 
மோகினி : லதாவை வண்ணாத்தி என்று கூறும் அசோகராஜா தான் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று எங்கும் கூறவில்லை. ஏனோ நாவலாசிரியர் இதைத் தெரியப்படுத்தவில்லை.
அழகியசிங்கர் : அவனுக்குச் சோரன் கீர்க்கிகார்ட் புத்தகத்தைத் தோழி கண்ணகிதான் அறிமுகப்படுத்தினாள்.  அசோகராஜாவிற்கு கீர்க்கிகார்ட் புத்தகம் பிடித்திருந்தது.  கொஞ்ச நாட்களாய் கற்பனையில் மார்க்ஸ் என்ற பாத்திரத்தில் உலாவிக்கொண்டிருந்த அவன் திரும்பவும் அசோகராஜா ஆகிவிட்டான். 
ஜெகன் : அசோகராஜன் தன் வீட்டைவிட்டு வந்தது பற்றிச் சிறப்பாக நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அசோகராஜா அக்கா அந்த வீட்டை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். இது குறித்து அசோகராஜாவிற்கு எந்த வருத்தமும் இல்லை.அமைந்தகரை குடியிருப்பில் ஒரு சிறிய குடியிருப்பை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறான்.பக்கத்தில் மாடர்ன் லான்டிரி இருந்தது.அங்குச் சலவைக்குத் துணிப்போட்ட 3ஆம் நாள் மூன்று வயதுக் குழந்தை லதாவைப் பார்க்கிறான்.
மோகினி : லதாவின் அப்பா சோமு அசோகராஜ்ஜைப் பார்த்துத் தான் முன்புபோல் என் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறான்.
ஜெகன் : கல்யாணம் ஆகாத அசோகராஜாவிடம் அவன் இதைக் கூறியிருக்கிறான்.
மோகினி : சோமு பைத்தியமாகக் காரணமாக அவனுடைய அப்பா வேலுதான் காரணமாக இருப்பார் என்பதை அசோகராஜா கண்டுபிடித்து விடுகிறான்.
ஜெகன் : ஒரு உறவு மீறல் வாழ்க்கை முழுவதும் சிதைத்து விட்டது என்கிறாள் லதா.  அழகியசிங்கர் : ஒரு கிழவர் தன் மருமகளுடன் உறவு கொள்வது ஒரு சமூக அவலம் என்கிறார் கதாசிரியர். 
மோகினி : சோமுவின் பைத்தியம் முற்றி விடுகிறது.  அதற்குக் காரணம் அவன் மனைவியும் அப்பாவும் வைத்துக்கொண்டிருந்த தகாத உறவு. 
ஜெகன் : கூனி குறுகிப் போய் வேலு வீட்டிலேயே கிடந்திருக்கிறார்.  சோமு தற்கொலை செய்து கொண்டு விட்டான்.
மோகினி : ஒரு குடும்பம் எல்லாவிதங்களிலும் கெட்டுப் போய் விடுகிறது என்பதற்கு உதாரணமாக சோமு, சேகர், வேலு போன்றவர்களில் தகாத உறவுகள் ஒரு காரணமாக அமைகிறது. 
அழகியசிங்கர் : இந்த நாவல் எழுதும்போது எய்ட்ஸ் நோய் உலகம் முழுவதும் பரவி எல்லோரையும் அச்சப்பட வைத்திருக்கிறது.   மோகினி : ஆமாம்.  சேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தான் என்றுநாவலில்  வருகிறது.
ஜெகன் : அசோகராஜனுக்கு ஏன் லதா அம்மாவிற்கு எய்ட்ஸ் நோய் வரவில்லை என்று சந்தேகம் வருகிறது.  சேகருடன் அவளும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவள் அம்மா புற்று நோயால்தான் இறந்தாள்.
அழகியசிங்கர் : கல்லூரியில் படிக்கும்போது கோபால் என்ற பையனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவன் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். 
மோகினி : இந்த நாவல் சமுதாயத்தில் சீரழிந்து போனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஜெகன் : கோபாலுக்கும் அசோகராஜாவிற்கும் சண்டை வருகிறது.  கோபால் சண்டை போடுகிறான்.  வயதான அசோகராஜா ஏன் லதாவுடன் அடிக்கடி சுற்றுகிறான் என்பதுதான் வாதம்.
மோகினி : அவள் விரும்பினால் கோபால் திருமணம் செய்து கொள்ளலாம்.  தனக்கும் அதுதான் விருப்பம் என்கிறான் அசோகராஜா.
அழகியசிங்கர் : அசோகராஜனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  அவன் அக்கா ராஜஸ்தானுக்கு ஒரு திருமணத்திற்குப் போகவேண்டுமென்று போகிறாள்.  அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு.  அசோகராஜாவை வீட்டிற்கு வந்திருந்து பார்த்துக்கொள்ள சொல்கிறாள்.  அவன் மறுத்து விடுகிறான். அந்தத் தருணத்தில் அப்பா இறந்து விடுகிறார்.  இருத்தலியல் கொள்கைப் படி பாசம் என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது.  
ஜெகன் : இந்த நாவலின் அடுத்த கட்டம். கோபால் பற்றியது.  ஏற்கனவே கோபால் திருமணமானவன்.  அவன் லதாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.  அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண் கோபாலை மிரட்டுகிறாள்.  அவனை அவளுடன் வந்து இருக்கச் சொல்கிறாள்.  அவன் முடியாது என்கிறான்.  தன் உடல் மீது தீ வைத்துக்கொள்கிறாள்.  உடனே கோபாலையும் கட்டிப்பிடிக்கிறாள்.  தீக்காயத்தால் அவள் இறந்து விடுகிறாள்.  அவன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ந்து பிழைத்து விடுகிறான். கோபால் எப்போதுமே அசோகராஜாவை எரிச்சலுடன் பார்க்கிறான். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோதும் அப்படித்தான் பார்க்கிறான்.  
மோகினி : தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறாள் லதா.
அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் லதா – அசோகராஜா பற்றித்தான்.  அடிக்கடி லதா அசோகராஜாவைப் பார்க்க வருகிறாள். அவளுடைய துன்பத்தையெல்லாம் அவனிடம் சொல்கிறாள்.
மோகினி : நிறைய உபகதைகள்.  இசை ஆசிரியர் செல்வம் வீட்டில் கருக்கலைப்பு செய்துவிட்டுத் தங்குகிறாள் லதா. அங்கு இசை ஆசிரியர் செல்வம் பற்றி செய்தி வருகிறது.
ஜெகன் : முன்பே சொன்னதுபோல் இந்த நாவல் எய்ட்ஸ் பற்றிப் பேசுகிறது.
அழகியசிங்கர் : ஆமாம். சிவலிங்கம் என்ற கதாபாத்திரம்.  பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு.  அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது.  அவர் மனைவிக்கு அது பரவியிருக்கும் என்று நம்புகிறார்.
மோகினி : லதாவிற்கு அசோகராஜா மீது வெறியான காதல்.  அதுதான் அவளை கோபாலை நாடவிடாமல் தடுத்துவிட்டது.  கண்ணகி அவள் கணவனைக் கொன்றது.  அசோகராஜனின் பால்ய கால நக்ஸலைட் நண்பன் அய்யாவு போலீசரால்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்  முதலில் சிவலிங்கம் மனைவி இறந்து போகிறாள்.  பின் அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து விடுகிறார்.  அடுக்கடுக்காக மரணங்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த நாவலில் 

ஜெகன் :  இந்த நாவலைப் பற்றி கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்?
அழகியசிங்கர் : இந்த நாவல் ஒரே மரண ஓலமாகஒலிக்கிறது . லதா அசோகராஜாவிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.  அவனும் அவளிடம்.  அந்த அன்பு கடைசிவரை வரம்பு மீறவில்லை என்பது ஆசிரியமாக இருக்கிறது.  கோபாலுக்கு அசோகராஜாவின் மீது ஒரே சந்தேகம். லதாவை கோபால் சீரழித்தும்  அவன் அவளை விட முடியாமல் இருக்கிறான்.  பலரிடம் அவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் லதாவை விட முடியவில்லை.  அவனால் அவளிடம் உள்ள தாபத்தைத் தணிக்க முடியவில்லை இதற்குக் காரணம் அசோகராஜாவும் அவளும் பழகிய விதம்.  
இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் கோபாலைத் தள்ளிவிட அவன் இறந்துவிடுகிறான்.  இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிதான்.  கோபால்தான் மூர்க்கமாக அவனைத் தாக்குகிறான். கோபாலைத் தடுத்துத் தள்ளிவிடுவதால் தடுமாறி தலையில் அடிப்பட்டு இறந்து விடுகிறான்.  இந்த இடத்தில் நாவல் ஆல்பெர் கம்யூவின் நாவலான அந்நியனை ஞாபகமூட்டுகிறது.  காரணமில்லாமல் ஏற்படுகிற கொலையில் அதில் வரும் கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போகிறது.  இங்கு போலீஸ் ஸ்டேஷன் போகிறான் அசோகராஜா.  இறுதியில் வன்முறையில் முடிந்து விடுகிற இந்த நாவல், முதலிலிருந்து கடைசிவரை துயரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.  (குவிகம் ஏப்ரல் 2021 மாத மின் இதழில் வெளிவந்த கட்டுரை) 

50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 08.05.2021 நடைபெற உள்ளது. எல்லோரும் கவிதை வாசிக்க வாருங்கள். எல்லோரும் 2 நிமிடம் வரை கவிதை வாசியுங்கள். முதலில் ஒரு கவிதை வாசியுங்கள். கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் இரண்டு, மூன்று என்று கவிதைகள் வாசிக்கலாம். Topic: Zoom Meeting Time: May 8, 2021 06:30 PM India 50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு.

https://us02web.zoom.us/j/83262682587?pwd=cE1CNDQ2RUdtZVdwdHZTQ3BweXpMQT09 Meeting ID: 832 6268 2587 Passcode: 934847

ஒரு கதை ஒரு கருத்து….4

அழகியசிங்கர்

சுஜாதா

ஒரு கதையில் இரண்டு கதைகள்

இரண்டாம் கதை சென்னையில் நடக்கும் கதை.  ராதா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் வந்து ஏறுகிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் ராமசாமி அம்பு போல், மான் போல் ஓடிவந்து ஏறிக் கொள்கிறான்.


ராதாவைத் தவிர அவன் மட்டும்தான் டைம் புரட்டிக்கொண்டிருந்தாள்.


“ஹலோ ராதா” என்கிறான் ராமசாமி.


அவள் அவனைப் பார்த்தாள்.  “ஹலோ” என்றாள்.  உடனே பத்திரிகையில் ஆழ்ந்தாள்.


“ராதா என் கடிதம் கிடைத்ததா?” என்று பேச்சுக் கொடுத்தான்.


“கிடைத்தது. ஸ்டுபிட் லெட்டர்.”


“ஏன் ராதா?” 


“அந்த மாதிரி கடிதம் எழுதுவதே அநாகரிகம்.  முட்டாள்தனம்.”


“நீ கூட எனக்குக் கடிதம் எழுதுகிறாயே ராதா?”

“அது ஒன்றரை வருடத்துக்கு முன்.  அப்பொழுது  நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.”


இப்படி அவர்களுக்குள் இந்தப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கிறது.


இந்தக் கதை இப்படி உரையாடல் மூலம் போய்க் கொண்டிருக்கிறது.  ராதா அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.


சுஜாதா இப்படி எழுதுவதில் தன் கை வண்ணத்தைக் காட்டுகிறார்.


ஒரு இடத்தில் ராதா இப்படிக் குறிப்பிடுகிறாள்.   “உங்கள் உலகம் வேறு உலகம்.  சோழ பரம்பரை.  அவர்கள் பேரன்கள், பேத்திகள், சிற்பங்கள், திருப்பளாய்த்துறைச் செப்பேடுகள், நாணயங்கள், அரசர்கள், அவர்களுக்குப் பின் வந்த அரசர்.”


“அவர்கள் எல்லாம் மனிதத் தன்மை நிறைந்தவர்கள் ராதா.”


“அவர்கள் எல்லாம் இறந்து போனவர்கள்”


“இல்லை ராதா.  அவர்கள் நம் சரித்திரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.”


“நீங்கள் இந்தக் காலத்து மனிதர் இல்லை.  இது கம்ப்யூட்டர் யுகம்.  கல்வெட்டு யுகமல்ல.  பழமை, பண்பாடு, ஆராய்ச்சி இதெல்லாம் உங்கள் பி.எச்.டிக்குத் தேவை.  அவைகளைப் பிறர் மேல் ஏன் திணிக்கிறீர்கள்?  என்னைத் தனியா விடுங்கள்.  இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கலாம்.”


இந்த இடத்தில் திடீரென்று ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார்.   ரயில் நின்றது. ஓர் ஆசாமி ஏறினார்.  ராதாவை முறைத்துப் பார்த்துவிட்டு மாற்றோர் ஓரத்தில் உட்கார்ந்தார்.  மாலைப் பத்திரிகை ஒன்றைப் பிரித்தார்.  அதன் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில் ராதாவுக்கு இன்று விடுதலை என்று அடித்திருந்தது.


ராதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.  ஏன் இதை இங்கு சுஜாதா கொண்டு வருகிறார்.  இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.எதிரில் வந்த நபர் யார்? இதெல்லாம் கதையில் புரியவில்லை.


ராதா ராமசாமியைத் திட்டி தீர்த்துவிடுகிறாள்.  “நீ ஒரு போர்”  என்கிறாள்.
வண்டி நின்றது.  ராமசாமிக்குக் காதுவரை, மூளை வரை ஓர் உஷ்ணம் ஏறியது.  சரேல் என்று விலகி இறங்கிவிட்டான்.


அது என்ன ஸ்டேஷன்? எதுவாக இருந்தால் என்ன? ரயில் வேகம் பிடித்து அடுத்தடுத்த ஜன்னல் சதுரங்கள் ஒன்றி மறைந்தன.


இந்த இடத்தில் ராமசாமி மூலம் முதல் கதையை இணைக்கிறார் சுஜாதா.  ஒரே இருட்டாக  இருக்கிறது.  ராமசாமி மூலை திரும்பினான். 


எதிரே தீப்பந்தமா தெரிகிறது… தீப்பந்தங்களா?  அவை அவனை அணுகின.   ஒரு பல்லக்குத் தெரிந்தது.  ஆடி ஆடி அசைந்து அசைந்து அவனை நோக்கி வந்தது.  இதோ, மிக அருகில் வந்து விட்டது.  


“இளவரசி” என்றான்.


மறுபடி வந்து விட்…திரைச்சீலை விலகியது.  மேகலா அவனைப் பார்த்தாள்.  அதே முகம்.  அதே ஆசை முகம்.  


“நீங்கள் யார்?”


“இளவரசி..என் பெயர் இராமசாமி.  இரண்டாவது கதையில் நிராகரிக்கப்பட்டவன்”. இளவரசி அவனைப் பார்த்து முறுவலித்தாள்.  “நீங்கள் கலைப்பாக இருக்கிறீர்கள்.  என்னுடன் வாருங்கள்.  ஏறுங்கள்..பல்லக்கில்.”


அவனைப் பிடித்துத் தூக்கி அவர்கள் ஏற்ற, பல்லக்கில் அவள் எதிரே உட்கார்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, பல்லக்கு ஆடி ஆடிச் சென்றது.  அசைந்து அசைந்து…
ஹைஹோ…ஹைஹோ…ஹைஹோ… என்று கிண்டலாக முடிக்கிறார்.
அட்டகாசமாக முடித்துவிட்டார் கதையை.  நான் இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும்போது, முழுப் புத்தகம் படிக்க முடிவதில்லை.  பாதிப் புத்தகம்தான் படிக்க முடிகிறது.  அல்லது கால் புத்தகம்தான் படிக்க முடிகிறது.  ஆனால் சுஜாதாவின்  விஞ்ஞானச் சிறுகதைகளை முழுவதும் படிக்கும்படி தூண்டுகிறார்.  நான் அவருடைய எல்லாக் கதைகளும் படிக்காலமலி ருக்கப் போவதில்லை.   


            ‘புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன்.  குறிப்பாக மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர்’ என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசிகீரன் கவிதையும் அஃதே.  விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைகாட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன். என்கிறார் சுஜாதா ‘ 

ஒரு கதை ஒரு கருத்து…3

அழகியசிங்கர்

சுஜாதா

ஒரு கதையில் இரண்டு கதைகள்

ஏன் சுஜாதா எழுதிய இந்தக் கட்டுரையை இவ்வளவு நாட்களாகப் படிக்கவில்லை என்று வருந்துகிறேன்.

அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற குறிப்பிட்டதை இப்போது படிக்கும்போது என் கண்ணைத் திறந்து விட்டது போல் தோன்றுகிறது. இந்த வருடம் அவர் பிறந்தநாள் போதுதான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.

அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் என்ன என்று எனக்குப் பாடம் நடத்தி விட்டார். நன்றி சுஜாதா அவர்களே!

‘அழகியசிங்கர் கதைகள்’ என்ற பெயரில் 664 பக்கங்களுக்கு நான் என் மொத்த கதைகளையும் கொண்டு வந்தேன். அதில் 100 கதைகள் இருக்கும். சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகம் படித்தபோது நானே 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.

சுஜாதான் கண்டுபிடிக்க வைத்தார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. என் கதைகளுக்கு இது கூடுதல் பலம் கொடுக்கிறது நான் விஞ்ஞானச் சிறுகதைகள் என்று என்னமோ நினைத்து யோசனை செய்ததை ஒன்றுமில்லாமல் உடைத்துப் போட்டுவிட்டார் சுஜாதா.

100 கதைகளில் நான் எழுதிய 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள். அவற்றை இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 1. வால் 2. நான்தான் 3. முடிவல்ல. இந்த மூன்று கதைகளும் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற பிரிவில் இப்போது எடுத்துப் போக விரும்புகிறேன்.

சுஜாதாவைப் படித்தபிறகு எதையோ கண்டுபிடித்து விட்ட உற்சாகம் எனக்கு. விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்திலிருந்து ‘ஒரு கதையில் இரண்டு கதைகள்’ என்ற தலைப்பில் எழுதிய முதல் கதையை எடுத்துக் கொண்டு வாசித்தேன். அபாரம். 1965ல் இந்தக் கதையை சுஜாதா எழுதி உள்ளார்.

சோழர்கள் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிப் போய் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் எஞ்சியிருந்த ஒரே பகுதியை ஆண்ட – மிச்சமிருந்த ஒரு சோழனின் ஒரே மகள். எப்போதுமே சுஜாதாவிற்கு எழுதிக்கொண்டே வரும்போது நகைச்சுவை உணர்வு தானாகவே வெளிப்பட்டு விடுமென்று தோன்றுகிறது.” (சோழனுக்கு மற்றொரு மகளும் உண்டு என்று பேச்சு. இதை அந்தச் சோழன் ஒப்புக்கொண்டதில்லை. ஊர்வாய்!)

இளவரசி மேகலா பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறாள். சோலையிளந் தென்றல் போல, சோமரசக் கவிதை போல இளவரசி மேகலா. இளவரசியின் கையில் ஓலை இருந்தது. ஒரு மடல். அதை மடல் என்று சொல்வதா, காதல் கடல் என்று சொல்வதா? எழுத்தாணியை இதயத்தில் தோய்த்து, தேவநாதன் எழுதியிருந்தான்.

எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் மலிந்திருந்த அந்த லிகிதம் அவளுக்கு ஓர் அலட்சிய முறுவலைத்தான் தந்தது. அவளுடைய உதவியாளைக் கூப்பிட்டாள் மேகலா. உதவியாளன் செங்கல்வராயன் பணிவுடன் அவள் முன் வந்து நின்றான். அவன் கையிலிருந்த பந்தத்தில் அந்த ஓலையைக் கொளுத்தினாள் இளவரசி.

‘பித்துப் பிடித்தவன்’ என்றாள்.

தூரத்தில் குளம்பொலி கேட்கிறது. நான்கு கொள்ளைக்காரர்கள். ஒரு கொள்ளைக்காரன் பரியைவிட்டு இறங்கினான். பல்லக்கின் அருகில் இளவரசியை மிரட்டுகிறான். இளவரசியோ யாருக்கும் பயப்படவில்லை. தன் உதவியாளனைக் கூப்பிட்டு சண்டைப் போடச் சொல்கிறாள். உதவியாளன் செங்கல்வராயன் கடைசியாக வாளை உருவியது சென்ற ஆயுத பூஜையின்போது. இப்போது உருவினால் கைப்பிடி மட்டும் வந்தது.

கழுத்தில் மாட்டியிருக்கும் வைர மாலையை மட்டும் கழட்டச் சொல்கிறான். ‘முடியாது’ என்கிறாள் இளவரசி. அப்பொழுது மற்றொரு குளம்புச் சப்தம் கேட்டது.

கால் விந்திக்கொண்டே வந்தது ஒரு குதிரை. தேவநாதனைக் கிண்டலாக வர்ணிக்கிறார் சுஜாதா. கொள்ளைக்காரனை வீழ்த்துகிறான் தேவநாதன். இது ஒரு நாடகம்.

“ஆண்டவனே என்னை விட்டுவிடுங்கள். உங்கள் வாள் வலிமைக்கும் தோள் வலிமைக்கும் என்னால் ஈடு செய்ய முடியாது. எனக்கு உயிர் கொடுங்கள் தேவனே. இந்த தொழிலை விட்டுவிட்டு இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுகிறேன,” என்கிறான் கொள்ளைக்காரன்.

“ஓடு என்கிறான்,” தேவநாதன்.

“நில்,” என்கிறாள் இளவரசி

“நிற்கிறேன்,” என்கிறான் கள்வன்.

தேவநாதனை சண்டைக்குக் கூப்பிடுகிறாள் இளவரசி. அவள் முன்னால் தேவநாதனால் சண்டையில் நிற்க முடியவில்லை. தேவநாதன் உடுக்கை நழுவ ஓடினான் என்று எழுதியிருக்கிறார் சுஜாதா.

முடிக்கும்போதுஇளவரசியின் நினைவில் அந்த ஆசை முகம் என்று முடிக்கிறார். இப்போது இரண்டாம் கதை தொடங்குகிறது.

(இன்னும் வரும்)

1Chandramouli Azhagiyasingar

ஒரு கதை ஒரு கருத்து….2

 
அழகியசிங்கர்


சுஜாதா


ஒரு கதையில் இரண்டு கதைகள்


இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் பாரதியின் காக்காய் பார்லி மெண்ட் என்று சொல்லத் தோன்றுகிறது.
அதன் ஒரு பகுதி இது:


‘கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே என்று அர்த்தம்….காஹகா என்றால் சண்டை போடுவேன் என்று அர்த்தம்..ஹாகா என்றால் உதைப்பேன் என்று அர்த்தம்..

சயின்ஸ் பிக்ஷன் ‘ஆர்வெலின் 1984இல் உள்ள ‘ந்யூஸ்பீக்’கை இது நினைவுபடுத்துகிறது. சயின்ஸ்ஃபிக்ஷனுக்கு முக்கியத் தேவை ஒரு புதிய உலகத்தை புதிய சூழலை அமைத்து அதன் விதிகளையும் தெளிவாக்குவதுதான்.


‘புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள் சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் பெற்ற கதை இது.
அதுபோல் பிரம்மராக்ஷஸ்’ ‘கயிற்றரவு’ போன்றவற்றையும் ஃபேண்டஸி என்னும் ஜானரில் வரும். கல்கியின் குறுநாவல்களான மோகினித்தீவு, ‘சோலைமலை இளவரசி’ இரண்டையும் சைன்ஸ்பிக்ஷனில் சேர்க்கலாம்.


‘அதேபோல க.நா.சுவும் ‘பொய்த்தேவு’ போன்ற புதினங்களில் பரிசோதனைகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன், கல்கி தவிர இவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற சிறந்த எழுத்தாளர்கள் யாரும் இதை முயற்சிக்கவில்லை.


கலைமகளில் ‘ஆனை சு.குஞ்சிதபாதம்’ எழுதிய ‘நல்ல பிசாசு’ என்கிற கதை ஓர் அரிய விதிவிலக்கு. விந்தன் ஒரு கதையில் தீபாவளியில் பணமில்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பத்தின் அவல நிலையை வருணித்துவிட்டு கடைசியில் இவர்கள் கஷ்டம் தீருவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே கடவுள் அவன் முன் தோன்றினார். ‘பக்தா உனக்கு என்ன வேண்டும் என்றார். அவன் தன் தீபாவளிக் கஷ்டங்களைச் சொல்ல எல்லாவற்றையும் தீர்த்து வைத்தார் என்று முடித்திருக்கிறார்.

இது துல்லியமான சைன்ஸ் ஃபிக்ஷன். சைன்ஸ்ஃபிக்ஷன் எழுதுவதற்கு சைன்ஸ், ராக்கெட் விண்வெளிப் பயணம் தேவையில்லை. எதிர்காலத்தைத்தான் எழுத வேண்டும் எனும் கட்டாயமில்லை. ‘ஜெயமோகனின் ‘பேய்ச்சிப் பாறை, விஷ்ணுபுரம்’ போன்ற படைப்புகளில் விஞ்ஞானக்கதைக் கூறுகள் இருப்பதைப் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் என்பது ஒரு காத்திக் வகை நாவல்தான். கோணங்கியின் சில கதைகளை மாஜிக் ரியலிசக்காரர்கள் விட்டு வைத்தால் சைன்ஸ்ஃபிக்ஷனில் சேர்க்கலாம். உதாரணம் ‘ஆதிவிருட்சம்.’ கிருஷ்ணன் நம்பி ஒரு ஷøவுக்குள் ஒரு குடும்பமே வாழ்வதைப் பற்றி எழுதி உள்ளார்.
‘மாலன் எழுதிய ‘வித்வான் என்கிற கதை விஞ்ஞானப் புனைகதை.
லா.சா.ரா சில கதைகளில் அருகில் வருகிறார். (ஜனனி, யோகம்).
‘புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக மீராவின் எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர் என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசி கீரன் கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன்.’


இதுவரை அறிவியல் புனைகதைகளின் கூறுகள் என்ற கட்டுரையில் சுஜாதா எழுதியதை சுருக்கமாகக் கூறி உள்ளேன்.


சுஜாதா எழுதியதைப் படிக்கும்போது எனக்குள்ளிருந்த சைன்ஸ்ஃபிக்ஷன் என்ற மாயை உடைந்து விட்டது. சைன்ஸ்ஃபிக்ஷன் கதை எழுத ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நினைத்ததால் அதைத் தொடக்கூட இல்லை. என் சந்தேகத்தைத் தீர்த்துவிட்டார் சுஜாதா. இனி அவர் கதையான ஒரு கதையில் இரண்டு கதைகளுக்குப் போகலாம். (இன்னும் வரும்)

ஒரு கதை ஒரு கருத்து



சுஜாதா


ஒரு கதையில் இரண்டு கதைகள்


விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் எனக்கு சுஜாதா என்ற எழுத்தாளரைத்தான் ஞாபகத்திற்கு வரும். அவர்தான் தமிழில் அறிவியல் கதைக்கு ஆரம்பம்.


உயிர்மை வெளியிட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
‘எழுத ஆரம்பித்து நாற்பதாண்டுகளாகின்றன. அப்போதிலிருந்தே விஞ்ஞானச் சிறுகதைகள் என்று பத்திரிகையாசியர்களிடம் குறிப்பிடாமலேயே வாசகர்களிடம் கடத்தியிருக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார் முன்னுரையில்.


‘விஞ்ஞானக் கதைகள் அப்படி ஒன்றும் செப்பிடுவித்தையல்ல, கற்பனை வெள்ளத்திற்கு மற்றொரு வடிகால் என்று தமிழர்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறேன்
‘தொடர்ந்து பிடிவாதமாக இவ்வகைக் கதைகளை மற்ற பேர் எழுதுகிறார்களோ இல்லையோ நான் எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன். இந்தக் கதைகள் வெளிவந்த சமயத்தில் வாசகர்களுக்கு உவகை அளித்தன. இவற்றை மறுபடி படிப்பவர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் அதே போன்ற உவகை ஏற்படும் என நம்புகிறேன்.’
இதெல்லாம் உயிர்மை வெளியிட்டுள்ள ‘சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் முன்னுரையில் எழுதியது;.


அதேபோல் ‘அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’ என்று தமிழ் இனி 2000 என்ற மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையும் இத் தொகுப்பில் உள்ளது.


கட்டாயம் ஒருவர் அதையும் படிக்க வேண்டும். இந்த நெடுங் கட்டுரையில் ஒரு சில பகுதிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.


விக்கிரமாதித்தன் கதைகள் பல சைஃபி தகுதி பெறுகின்றன. இரு நண்பர்களிடையே தலையும் உடலும் மாறிப்போய் யார் உண்மையான கணவன் என்று மனைவி தடுமாறும் விக்கிரமாதித்தன் கதை உண்மையான சைன் ஸ்பிக்ஷன் (இதை கிரீஷ் கர்னாட் ஹயவதானா என்ற அற்புதமான நாடகமாக மாற்றினார்)உர்சூலா லா குவைன் எழுதிய ஐலண்ட் ஆஃப் இம்மார்டல்ஸ் என்னும் கதை விக்கிரமாதித்தன் கதை போலத்தான் இருக்கிறது. ஒரு வகை கொசு கடிப்பதால் ஒரு தீவில் உள்ளோர் சாகாவரம் பெறுகிறார்கள் என்பது கதையின் கரு – அதைச் சொல்லும் முறை நவீனச் சிறுகதை பாணியில் யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும். கதை என்னவோ அரே மந்திர தந்திரக் கதைதான். இவ்வகைக் கதைகள் நிறைய உள்ளன.
இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் ‘பாரதியின் காக்காய்பாராளுமென்ட் என்று சொல்லத் தோன்றுகிறது. (இன்னும் வரும்)

49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 01.05.2021 அன்று சனிக்கிழûமை மாலை 6.30 மணிக்கு இனிது நடந்து முடிந்தது. அதன் ஒளிப்பதிவு.

 
அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 01.05.2021 இனிதே நடந்தது. கவிதையைக் குறித்து உரையாடல் நடந்து முடிந்தது. அதன் ஒளிப்பதிவு.