விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

19.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (19.06.2021) அன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய மொழிகளிலிருந்தும் மற்ற நாடுகளிருந்தும் வந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன்.

புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்கலாம். அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு.Topic: விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Jun 19, 2021 20:30 IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/88355962622…

Meeting ID: 883 5596 2622Passcode: 177199

1Sivakumar GanesanLikeCommentShare

0 Comments

ActiveWrite a comment…

Topic: விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Jun 19, 2021 20:30 IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88355962622…Meeting ID: 883 5596 2622Passcode: 177199

ஹைகூ 100…

14.06.2021
துளி – 203

அழகியசிங்கர்

55வது கவிதை நேசிக்கும் கூட்டம் 12.06.2021 அன்று நடைபெற்றது.   வழக்கம்போல் கவிதைப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்தும் வழக்கம். 


பலருடைய கவிதைப் புத்தகங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 
இப்படி அறிமுகப்படுத்துவதால் கவிதைப் புத்தகம் கடகடவென்று விற்குமென்றோ விற்காது என்றோ நான் நினைப்பதில்லை.

ஒரு முறை நான் வெளியிட்ட காசியபனின், ‘முடியாத யாத்திரை’ என்ற கவிதை நூலை இலவசமாகக் கொடுக்கிறேன்’  என்றேன்.  இலவசமாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிய பிறகு கூட ஒரே ஒருவரைத் தவிர யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை

.
        இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.


55வது கவிதை நேசிக்கும் நிகழ்வில் நான் அறிமுகப்படுத்திய கவிதை நூல். ஹைகூ 100 என்ற புத்தகம். எழுதியது தங்கம் மூர்த்தி.  
102 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.80.  மேன்மை வெளியீடாக வந்துள்ளது.


அப் புத்தகத்தில் உள்ள சில கவிதைகளைக் கவி அரங்கத்தில் வாசித்தேன்.
எனக்கு ஹைகூ பற்றி ஒன்றும் தெரியாது.  ஆனால் 3 வரிகளில் ஒரு கவிதை எழுதுவது பெரிய சவால் என்று தோன்றியது.”


ஹைகூ கவிதைகளில் கவிதைக்கு எந்தத் தலைப்பும் இல்லை. 3 வரிகளில் கடைசி வரியை மாற்றி எழுத வேண்டும்.
தங்கம் மூர்த்தி புத்தகத்தில் உள்ள சில கவிதைகளை இங்குத் தருகிறேன்.


கண்ணில்லாதவர்

கையேந்துகிறபோது

நாமெல்லாம் குருடர்கள்                                                               

*****


முதலில் பூத்த ரோஜா

கோவிலுக்கா கூந்தலுக்கா

பூமியின் மடியில் பூ                                                               

*****             

விழிகளில் ஊதி 

தூசி எடுத்தாய்

தூசி வெளியேற

உள்ளே நீ.                                                             

 *******
ஹைகூ கவிதைகளை எளிதாக வாசித்துக்கொண்டே போகலாம்.  ஆனால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது போல் தோன்றுகிறது.  

இதைப் படித்து விட்டு நான் ஒரு ஹைகூ முயற்சி செய்யட்டுமா?


கற்பனையில்

வாழ்ந்து வருகின்றேன்

நிஜம் கண்ணெதிரில்

விருட்சம் வழங்கிய 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 12.06.2021

  அழகியசிங்கர்

விருட்சம் வழங்கிய 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 12.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. 

அந்நிகழ்ச்சியின் காணொளியை இங்கு அளிக்கிறேன்.  

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்பு கூட்டத்தின் காணொளிப் பதிவு.

 கூட்டம் 11.06.2021 அன்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது
அழகியசிங்கர்


ஆர். ராஜகோபாலன், ஜெ.பாஸ்கரன் என்ற இரு கதைஞர்களைக் குறித்து கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.


8 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள.

விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

 
அழகியசிங்கர்

12.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு. சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற நாளை மாலை 6.30மணிக்கு 12.06.2021 அன்று நடைபெற உள்ளது.

இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது.

நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகளை வாசிக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Jun 12, 2021 18:30 India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86150691629?pwd=L09TNWFKcXlLQll3aXdyQ0tqRkdrQT09

Meeting ID: 861 5069 1629

Passcode: 079693

ஞானக்கூத்தன் கவிதையை வாசித்தேன்..

 துளி – 201

அழகியசிங்கர்


ஒவ்வொரு முறையும் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும்போது ஒரு கவிதைப் புத்தகம் அறிமுகப் படுத்துவேன். எத்தனைப் பேர்கள் கேட்டு ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. கவிதைப் புத்தகம் வாங்குவதற்கு ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் அப்படிக் கூறுவேன்.


54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த புத்தகம். ரூ895. 823 பக்கங்கள் கொண்ட 682 கவிதைகள். ஆரம்பத்திலிருந்து அவர் மரணம் அடையும் வரை எழுதிய எல்லாக் கவிதைகளையும் தொகுக்கப்பட்டிருக்கிறது.


நான் படித்த கவிதை ‘பக்திக்கு மெச்சினாள்’ என்ற கவிதை. அது சற்று நீளம். ஆனால் அக் கவிதை அச்சாகியிருந்த எதிர் பக்கத்தில் ஒரு நான்கு வரிக் கவிதை இருக்கிறது. அதையும் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். படிக்கவில்லை. அக் கவிதையின் தலைப்பு ‘சிரிப்பு’. அதை இங்கு தருகிறேன்.


சிரிப்பு

எத்தனை நேரம்தான்

நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு

விற்பனைப் பெண்ணின்

சிரிப்பு

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம் 11.06.2021 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது

 அழகியசிங்கர்

ஆர். ராஜகோபாலன், ஜெ.பாஸ்கரன் என்ற இரு கதைஞர்களின் கதைகள் குறித்துக் கூட்டம். 8 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். எல்லோரும் கலந்து கொள்ளும்படி சிறப்புச் செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி.

Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம் Time: Jun 11, 2021 18:30

India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88184924376?

pwd=RUFFbnF2cVRLZjBsa0xzMUNrdUF0Zz09 Meeting ID: 881 8492 4376 Passcode: 634615

ஒரு கதை ஒரு கருத்து


அழகியசிங்கர்


ஜெயகாந்தன்


ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்


‘ஜெயகாந்தனின் கதை. இரண்டாம் உலக மகா யுத்த காலம். அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை. அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் வீட்டுக்கு அனுப்பப் பட்டான். ராணுவத்திற்கு இனிமேல் அவன் உபயோகப்பட மாட்டான்.’


இப்படி ஆரமபிக்கிறது இந்தக் கதை


இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை.


இங்கு ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.


‘தான் வெறுத்து உதறிவிட்டப் போன அந்தத் தாழ்ந்த சேரிக்கே அவன் திரும்ப வேண்டி நேர்ந்தது.’


தாழ்ந்து கிடந்த தன் சமூக வாழ்க்கையை நினைத்து வெறுத்துப் போய் முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்தில் சேர்ந்து பதினெட்டு வயதிலேயே கடல் கடந்து செல்லும் பேற்றினை அடைந்தவன் அம்மாசி.


அப்போது அம்மாசி ஒரு முறை சில காலம் கழித்து அவன் சேரிக்கு வந்தான். அவன் அவர்களுடன் ஒட்டவில்லை.


இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது அவன் திருப்பி அழைக்கப்பட்டான். திரும்பவும் அவன் சேரிக்கு சாலமடித்துவிட்டுப் போய் விட்டான்.


எதிரிகளுடன் போராடும்போது எதிரிகளின் குண்டு வீச்சுக்கு ஆளாகி சில மாதங்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் கிடந்தான்.


ராணுவத்துக்கு உபயோகமற்றவனாக மாறிவிட்டான். அவன் ஊருக்குக் கிளம்பிவிட்டான். அவனுக்கு யாருமில்லை. அவனை வரவேற்க ஊரிலும் யாருமில்லை. அவன் ராணுவத்தில் இருக்கும்போதுதான் அவன் அம்மா இறந்து விட்டாள். அவனால் அப்போது வரக்கூட முடியவில்லை.

தன் கான்வாஸ் பைச்சுமையுடன், தான் பிறந்த ஊருக்குள்ளே போய் நான்கைந்து தெருக்களை அர்த்தமற்றுச் சுற்றிப் பார்த்தான். பின்
ஊருக்கு வெளியே வந்து தனது சேரியை தூரத்திலிருந்து பார்த்தான்.


மதகில் அமர்ந்திருந்தபோது தன் தாயைப் பற்றி நினைத்துக்கொண்டான்.
சேரியைச் சார்ந்த முண்டாசு கட்டிய ஒருவன், அங்கு வந்து அவனை விசாரிக்கிறான்.

அம்மாசிக்கு தன் ஒன்றுவிட்ட தங்கச்சி காசாம்பூவின் நினைவு வந்தது. உடனே அவள் கணவன் சடையாண்டியின் பேரைச் சொல்ஙூ அவர்களைத் தேடி வந்ததா கூறுகிறான். அவன் பட்டணத்துக்குப் பூட்டானே என்கிறான் அவன். அம்மாசிக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.


திரும்பவும் ரயில்வேஸ்டேஷனுக்குப் போகிறான். அவன் அந்தக் கிராமத்தை விட்டு பட்டணம் போகிறான். அதே பாசஞ்சர் வண்டியில்.


வண்டியில் கூட்டமில்லை. அவன் உட்காரப்போகும் எதிரில் ஒரு தாய் தூங்குகின்ற பெண் குழந்தையை மடியில் கிடத்தித் தானும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணைப்பற்றி ஜெயகாந்தன் இப்படி வர்ணிக்கிறார்.
‘அம்மாசி அவளை வெறித்துப் பார்த்தான்.


அவளது தோற்றத்திலிருந்து அவள் ஓர் இளம் பிராமண விதவை என்று தெரிந்தது. நாட்பட்ட க்ஷயரோகத்தால் அரிக்கப்பட்டு வெறும் ஆஸ்திக் கூடே உயிர் தரித்து அயர்ந்தது போல் தோற்றம்.’


டிக்கட் பரிசோதகர் அந்தப் பெண்ணைப் பார்த்து டிக்கட் கேட்கிறார். அவள் டிக்கட் வாங்கவில்லை என்று தெரிகிறது. அம்மாசி அவளுக்காக டிக்கட் வாங்கினான்.
அந்த விதவைப் பெண் அம்மாசியை வாழ்த்துகிறாள். இந்தக் கதை பாசஞ்சர் வண்டியிலேயே நடக்கிறது. அவளிடம் இருக்கும் குழந்தைக்கு எதாவது வாங்கலாமென்று நினைக்கிறான்.


‘குழந்தைக்கு எதாவது வாங்கித் தரட்டுமா?’ என்று கேட்கிறான். அவள் சம்மதிக்கிறாள்.
அம்மாசி வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பாரத்திலிருந்து ஸ்டாலுக்குச் சென்றான். ஒரு பன்னும் ஒரு கப் பாலும் வாங்கினான்.கொஞ்சம் யோசித்து இன்னொரு கப் பாலும் பன்னும் வாங்கினான்.


அவன் பன்னை அவளிடம் நீட்டினான். அவள் வேண்டாம் என்றாள். பாலாவது குடிக்கச் சொல்கிறான். அவள் முழுவதும் குடித்து விட்டாள். பசி. குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு ஒரு பன்னும், பாலும் கொடுத்தான்.
திரும்பவும் குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கிக்கொடுத்தான் அம்மாசி. ஒரு வாத்து பொம்மை. குழந்தை அவனோடு வெகு நாள் பழகியிருந்தவள் போல் சிரித்து விளையாடினாள். . .


வெகுநேரமாய் நின்றிருந்த பாசஞ்சர் வண்டி அந்த ஸ்டேஷனிலிருந்து கிளம்பியது.
அவளுடைய கதையை மூக்கைச் சிந்திக்கொண்டு அம்மாசியிடம் பேசினாள். இந்தக் குழந்தையின் அப்பாவுக்கு ஓட்டிலிலே வேலை. அவருக்கு க்ஷயரோகம். அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளுக்கு நாலு குழந்தைகள். ஒவ்வொன்றாகப் பிறந்து வாரிக் கொடுத்து விட்டாள். கடையிலே இந்தக் குழந்தை மட்டும் மிஞ்சியது.
சற்று நேரத்துக்கு முன் அருந்திய பாலி னால் விளைந்த தெம்பும் மாலை நேரக் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவளுக்குப் பேசச் சக்தி அளித்தன. ஆனால் பேசிய பிறகு அவளுக்கு மூச்சுத் திணறியது.


அவள் சிறிது நேரத்தில் இறந்து விடுகிறாள். சாவதற்கு முன், “உங்க குழந்தைகள்லே ஒருத்தியா….வளர்ப்பீங்களா ஐயா” என்று அவள் குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறாள்.
அந்த ரயில் வண்டி நின்ற இடத்தில் அவள் பிணத்துடன் இறங்குகிறான் அம்மாசி. அந்த வண்டியில் டிக்கட் எடுக்காமல் வந்திருந்த பிச்சைக்காரர்கள் அவனுக்கு உதவி செய்தார்கள். 3 நாட்கள் அந்த ஊரில் தங்குகிறான். அவளுடைய இறுதிச் சடங்கை முடிக்கிறான். இந்த இடத்தில் ஜெயகாந்தன் அவன் எங்கே தங்கினான். அவளுடைய குழந்தையை வைத்துக்கொண்டு எப்படித் தடுமாறினான் என்பதையெல்லாம் கதையில் சொல்லவில்லை. கதையில் இது சௌகரியம் வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு வேண்டாததை விட்டுவிடலாம்.


இந்த நிகழ்ச்சி நடந்து மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ் சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.
இந்த இடத்தில் ஜெயகாந்தன் இப்படிக் கூறுகிறார்.


தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக்கடன்களையெல்லாம் ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டான்.


வண்டியிலிருந்தவர்கள் எல்லோரும் குழந்தையும் அம்மாசிக் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு.
பொன்னா, பேத்தியா என்று கேட்கிறார்கள்.
பேத்தி என்கிறான்.


‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்கிறார்கள். ஒரு நிமிடம் யோசிக்கிறான். அந்தப் பெண்ணின் தாயிடம் இந்தக் குழந்தையின் பெயர் கேட்கவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு, ‘பாப்பாத்தி’ என்கிறான். இனிமேல் அது ஒரு பெயர்தான் என்று முடிக்கிறார் ஜெயகாந்தன்.


இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் ஜெயகாந்தன்.


தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவனுக்கு எந்த மதிப்பும் அவன் ஊரில் இல்லை. அவன் மதிப்பைப் பெறுவதற்கு ராணுவத்தில் சேர்கிறான். திரும்பவும் அவன் ஊருக்கு வரும்போது யாரும் அவனை வரவேற்கவும் இல்லை, என்ன என்று கேட்கவுமில்லை. அதற்குக் காரணம் அவன் ஊரை விட்டு சிறுவயதிலேயே போய் விட்டான். தாழ்ந்த ஜாதி என்ற குழப்பம் அவனிடம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் திருப்பு முனையாக க்ஷயரோகம் பாதித்த ஒரு பிராமணப் பெண்ணின் குழந்தையை வாங்கிக் கொண்டு வளர்க்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணிற்குக் கொல்லிப் போடும்போது தன் அம்மாவிற்கு அது மாதிரி செய்ததாக நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதாக நினைக்கிறான்.


ஜெயகாந்தன் அந்தக் காலத்தில் இப்படி புரட்சிகரமான கதையை எழுதியிருக்கிறார்.
(திண்ணை முதல் இணைய மின் இதழில் ஜூன் 8ல் பிரசுரமான கட்டுரை )

பத்திரிகைகள் பலவிதம்…3

 07.06.2021

ஜூன் 1981ல் வெளிவந்த ‘ழ’ என்ற சிற்றேடு


அழகியசிங்கர்


ழ என்ற பத்திரிகை 1978ஆம் ஆண்டிலிருந்து விட்டு விட்டு 1988 வரை வந்து நின்றுவிட்ட பத்திரிகை. ஆரம்பத்தில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த பத்திரிகை. பின் ஆத்மாநாமிற்குப் பிறகு ஞானக்கூத்தன் பொறுப்பாசிரியராக இருந்து பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.


நான் இப்போது பேசப்போவது ஆத்மாநாம் கொண்டு வந்த ழவின் 17வது இதழ். தற்செயலாக நான் புத்தகக் குவிலைத் துழாவிக்கொண்டிருந்தபோது இந்த இதழ் தற்செயலாகக் கிடைத்தது.


ழ என்றால் மிக எளிமையான தோற்றம்தான் என்னைக் கவரும்.


மொத்தமே 16 பக்கங்கள்தான் இதழ் இருக்கும். அட்டைப் படம் என்று தனியாக இருக்காது. பல நண்பர்களின் கூட்டு முயற்சியால் நடந்த இதழ் இது.


அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர்கள் என்று பலர் முயற்சியில் ழ பத்திரிகை நடந்து கொண்டிருந்தது.


16பக்க இதழாக இருந்தாலும் ஒவ்வொரு இதழும் மணிமணி யாக இருக்கும்.


இதழ் மீது நமக்கு அலாதியான பக்தியும் மரியாதையும் ஏற்படாமலிருக்க முடியாது. ஒரு புரட்டு புரட்டினால் ழ இதழைப் படித்து முடித்து விடலாம்.


ஆனால் நிதானமாக ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கலாம்.


ழ இதழில் முக்போவியமாக எஸ்.முரளிதரனின் ஓவியம் வெளிவந்திருக்கிறது. தனியாக இந்த ஓவியத்தை அச்சடிக்கவில்லை. பத்திரிகையின் ஒரு பகுதியாகவே அச்சடிக்கப்பட்டிருக்கிறது.


இதழ் ஜ÷ன் 1981ல் வந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்த இதழ் இது. அப்போது இதன் விலை ரூ.0.75 பைசா. ஓராண்டுச் சந்தா ரூ.9.


ழ ஏட்டில் எப்போதாவது தான் தலையங்கம் வரும். இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.


இதோ தருகிறேன் :

‘அனுபவத்தில் பார்க்கும்போது இன்றைய கவிதைகளுக்கு இளைஞர்களிடையே நல்லவிதமான வரவேற்பும் எதிர் விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நல்ல கவிதையை இனங்கண்டு கொள்ளும் கூர்மைப்படுத்தப்பட்ட உணர்வை இளைஞர்களிடத்தில் எளிதாகவே பார்க்க முடிகிறது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக எல்லாத் தயாரான இளைஞர்களுக்கும் கவிதைகள் போய்ச் சேருவதில்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும் தொடர்ந்து கவிதைகளுடன் பரிச்சயத்திற்கான வாய்ப்பு கைவரப் பெறாமல் போகிறது. இரண்டு வழிகளின் மூலமாக இதைச் செய்ய முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒன்று கவிதைகளை வெளியிடும் பத்திரிகைகள் கவிதை ஒரு உன்னதமான கலை வெளிப்பாடு என்பதை உணர்ந்துகொண்டு அதற்கான சரியான அந்தஸ்தைத் தரவேண்டும். இரண்டு கவியரங்கங்களில் கவிஞர்களை அவர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்லவேண்டுமே தவிர தலைப்புகள் கொடுத்து வாசிக்கச் சொல்லக் கூடாது. இவற்றையே உண்மையான கவிதைகளை இளைஞர்களுக்குக் கொடுக்கக் கூடும்.
அவ்வளவுதான் தலையங்கம். அதன் பின் 16 பக்கங்களிலும் கவிதைகள். கவிதைகள். கவிதைகள்.


கவிதையில் ‘புதிய பார்வைகள்’ என்ற தலைப்பில் ஆனந்த் கட்டுரை. இது முக்கியமான கட்டுரை.
ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
‘அன்றாட வாழ்வின் பிரக்ஞை வட்டத்தினுள் கவிதை நிகழ்வதில்லை. கவிஞனின் மனத்தில் கவிதை நிகழும் கணத்தில் அவன் அன்றாட வாழ்வின் கதி முற்றிலுமாக நின்று போகிறது. அக் கணத்தில் கவிஞனின் மனவெளி புதியதொரு பரிமாணத்தில் இயங்குகிறது. கவிதை நிகழ்ந்த பின்னர் கவிஞன் மொழியின் சாத்தியக் கூற்றில் ஒரு ஒழுங்கில் தன் அனுபவத்தை அமைக்கிறான்.’. இந்த இதழில் ஒரு காதல் கவிதை என்ற பெயரில் க.நா.சுப்ரமண்யம் எழுதி உள்ளார். 2 பக்ககங்களுக்கு.


வானம் என்ற தலைப்பில் ஆர்.ராஜகோபாலன் கவிதை வந்திருக்கிறது.


வானம்


ரொம்ப நாளைக்காகப்புறம்

கடற்கரை மணலில்

தனியாக உட்கார்ந்திருந்தேன்

சரியாக இருள் கூடாததால்

வானம் வெறுமையாய்க் கிடந்தது.

என்னைச் சுற்றிலும் மணலில்

கும்பல் கும்பலாய் மக்கள்

வழக்கம்போல்

உல்லாசமாய் ஓடியாடி

கொண்டே குழந்தைகள்.

மற்றபேர் மகிழ்ச்சியாகவும்

சோகமாகவும் தங்களை

உயர்த்திக்கொள்ள உரத்த

குரலெடுத்துப் பேசிக் கொண்டும்.

இப்போதைக்கு எந்தவித

உணர்வும் எனக்கில்லை

ஆனால் மறுபடியும் இங்கு

வரும்போது இவர்களில்

ஒருவராக மாறக்கூடும்

மல்லாந்து படுத்தேன்

எண்ணற்ற நட்சத்திரங்கள்

வானம் முழுவதிலும்


இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. கடற்கரையில் கூட்டத்தைப் பார்க்கிறார். ஆனால் கூட்டத்துடன் ஒன்ற முடியவில்லை. மல்லாந்து படுத்தேன் எண்ணற்ற நட்சத்திரங்கள் வானம் முழுவதும்.


காளி-தாஸ் அது வேறு உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி உள்ளார். 15 வரிகள்தான் இந்தக் கவிதை. ஒரு பக்கம் முழுவதும் கவிதைக்கான இடம் தந்துள்ளது ழ என்ற சிற்றேடு.
தேவதச்சனின் இரண்டு கவிதைகள். ஒரு கவிதை ‘என்றோ விட்ட அம்பு’, இரண்டாவது கவிதை ஒரு ‘கூழாங்கல்.’


ஐந்து வரிகள்தான் கவிதை.

மனம்

நீராய் ஓட

கீழே,

சூரியனைப் பார்த்துக்கொண்டு

ஒரு கூழாங்கல்


அவ்வளவுதான் கவிதை. சிலை ஒன்றின் சமீப வெற்றிடம் என்ற பிரம்மராஜன் கவிதை. வழக்கம்போல் பிரம்மராஜன் கவிதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தாலும் புரியாது.
பிரதீபனின் ஒரு கவிதை ஆரம்பிக்கும்போதே கபந்தத்தின் ஓலம் ஒன்று என்று ஆரம்பிக்கிறது.

சுயம் என்கிற தமிழன்பன் கவிதையைப் பார்க்கலாம்.


என்

கூடை நிரம்ப

சொற்கள். .

இறைத்துக் கொண்டே

நடந்தேன்…

ஒவ்வொன்றும்

ஒவ்வொரு ரோஜா …ஆனது

கூடையை

தூக்கி எறிந்தேன்

குப்பென்று இலைகள்..

பின்

என்னை

தூக்கி எறிந்தேன்

முள் முள்ளாய்

முளைத்தது.


இது இன்னொரு உள்முகத் தேடல் கவிதை வகையைச் சேர்ந்தது. படித்தவுடன் இக் கவிதை புரிந்தவிடும். ஆனால் கவிஞன் எங்கோ பயணம் செல்கிறான். கவிதை மூலம் அழைக்கிறான்.


‘உள்ளும் புறமும்’ என்ற ஞானக்கூத்தன் கவிதை. கவிதையின் புதிய பார்வைகள் என்ற தலைப்பின் கீழ் ஆனந்த் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு மூன்று பக்கங்கள் வரை.
கார்ல் சாண்ட்பர்க்கின் வேலி என்கிற பெயரில் ஒரு கவிதை. தமிழில் பரவாசி.


அதேபோல் கேத்லின் ரெய்ன் தன்மை என்ற கவிதை. தமிழில் கன்னி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.


இந்த இதழின் 16வது பக்கம் ழ வெளியீடுகளின் விளம்பரங்கள். அவ்வளவுதான் ஒரு இதழ் ஒன்றைப் படித்தாகிவிட்டது.

விருட்சம் நிகழ்ந்தும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

05.06.2021 அன்று நடந்தது.  காணொளி காட்சி.  


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 54வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.  காணொளியில் கண்டு களியுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்.