அழகியசிங்கர்
18.12.2020 அன்று சூம் மூலமாகக் கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள். எல்லோருக்கும் இரண்டு முறை கவிதை வாசிக்க நேரம் கிடைத்தது. அதைப் பெருமையுடன் இங்கே ஒளிபரப்புகிறேன்.(63) விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம் –
அழகியசிங்கர்
18.12.2020 அன்று சூம் மூலமாகக் கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள். எல்லோருக்கும் இரண்டு முறை கவிதை வாசிக்க நேரம் கிடைத்தது. அதைப் பெருமையுடன் இங்கே ஒளிபரப்புகிறேன்.(63) விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம் –
அழகியசிங்கர்
நாளை (சனிக்கிழமை) 6.30 மணிக்கு 12 எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியின் 12 கதைகளை எடுத்து விமர்சிக்க உள்ளார்கள்.
ஒவ்வொருவரும் 6 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர்.
ஒவ்வொருமாதமும் 3வது சனிக்கிழமை கதை வாசித்தல் நிகழ்ச்சியை கடந்த 3 மாதங்களாக நடத்தி வருகிறேன். இது நாலாவது நிகழ்ச்சி. இதுவரை அசோகமித்திரன், தி.ஜானகி ராமன், புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துள்ளோம்.
இந்த முறை கு.அழகிரிசாமி. எல்லோரையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். Meeting ID: 882 3278 0093 Password: 142292
ஒரு கதை ஒரு கருத்து
பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
அழகியசிங்கர்
டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.
அவர் 42 கதைகள் எழுதி உள்ளார். அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது. முதலில் எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.
பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.
பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர் (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு.
இப்படி ஒரு காதல் கதையைப் பாரதியார் விவரிக்கிறார். மனோரஞ்சிதன் சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப்போலியிருப்பான். தன்னோடு ஒத்த வாலிபர்கள் எல்லோராலும் அர்ஜ÷னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.
அவனுக்கு வயது இருபத்தி மூன்றாகியிருந்த போதிலும், என்ன காரணத்தாலோ இன்னும் விவாகம் நடக்காமலிருந்தது. இவனுக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுதே, இவன் அப்பா இறந்து விடுகிறார். அதனால் இவனுக்குத் திருமணம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விட்டது. தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால், இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி வீட்டில் இவன் வைத்ததுதான் சட்டம். இவன் சொன்ன சொல்லை மீற மாட்டாள். இந்தக் குடும்பத்தில் அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும் உள்ள நிலத்தை விற்று பணம் எடுத்துக்கொண்டு கல்கத்தா போய் பரீட்சைகள் எழுதித் தேறி வர வேண்டுமென்ற இவன் எண்ணத்தின்படி இவனை அனுப்பி வைத்தாள்.
இவன் தாயார் ரஞ்சனைப் பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பாள். இவன் அதற்குப் பதில் சொல்ல மாட்டான். அந்தப் பேச்சே எடுக்காதே என்று அம்மாவை மிரட்டுவான்.
ஆனால் அந்தரகத்திலே இவன் வடக்கு வீதி ஸ÷ர்யகாந்த பாபு என்ற பெருஞ் செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோகம் வைத்திருந்தான். இது அவன் அம்மாவிற்கும் தெரியும். ஆனால் தன் பையன் ஸ்வர்ண குமாரியை ஒருபோதும் விவாகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறாள். அதற்குக் காரணம் அந்தப் பெண் மிலேச்சனுடைய பெண். அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்தால் இவனுடைய தாயார் தேட்ட மாத்திரத்திலேயே இறந்து விடுவாள். அதேபோல் அவளை தன் மகன் கட்டிக்கொள்வதைக் காட்டிலும் இறந்து போவது மேல் என்று நினைக்கிறாள்.
“ ஏன் அவன் தாய் அப்படி நினைக்கிறாள்?
ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய÷ர்யகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்தாலும் பிரமஸமாஜம் என்ற புதிய மார்க்கத்திலே சேர்ந்து கொண்டு விட்டார்.
பிரம ஸமாஜத்தில் சேர்ந்தவருக்கு ஜாதி பேதம் இல்லை. விக்ரகாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம் என்பதுபோல் நவீன கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்.
அவர்கள் வீட்டு ஸ்திரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை என்று நடப்பவர்கள்.
ஸ்வர்ண குமாரிக்கு இன்னும் விவாகமாகவில்லை. மனோரஞ்சனின் தயாருக்குக் காதால் கேட்கக் கூடா வெறுப்பாக இருந்தது. தன் பையன் அடங்காத காதல் கொண்டிருக்கிறானென்றும் அதன் பொருட்டே மறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறானென்பதும் அவளுக்குத் தெரியும்.
பாரதியார் இந்தக் கதையை ஒரு காதல் கதையாகக் கொண்டுபோகிறார். ஜாதி மாறுவதை கடுமையாகக் கருதுகிறார்கள். ஸ்வரண குமாரி மனோரஞசனுடைய வடிவம் என்று அகலாத சுந்திர விக்கிரமாகப் பதிந்து போய்விட்டது.
இந்த இடத்தில் ஸ்வர்ண குமாரியின் அழகை வர்ணிக்கிறார் பாரதியார். எப்படி? ‘இவளுடைய ரூப லாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங் கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும் கன்னமும், நெற்றியும், ஸ்வர்ண மயமான சரீரமும் என்னவென்று சொல்வது?’ என்கிறார்.
இந்த இடத்தில் ஒரு ஜோக் அடிக்கிறார் பாரதி. சுகப்பிரம்மரிஷி ஸ்வர்ண குமரியைப் பார்த்த போதிலும் மயங்கிப் போய் விடுவார் என்கிறார்.
ஸ்வரணகுமாரி அடிக்கடி மனோரஞ்சிதத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாள். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். இதை அறிந்து அவள் அப்பா, ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் சொல்கிறார். இல்லாவிட்டால் என் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கிறார்.
அவளுடன் ஹேமச்சந்திரா பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். தோட்டத்திலுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்கு. அப்படிச் சந்திக்கும்போது அவளுடைய சம்மதத்தைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்.
வேறு வழியில்லை ஹேமசந்திரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விதி இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு விஷம் தின்று உயிரை விடலாமென்று நினைத்துக் கொள்கிறாள்.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)
இன்னும் வரும்….
SHARE
January 20, 2020SHARE POST A COMMENTREAD MORE
January 28, 2020SHARE POST A COMMENTREAD MORE
January 12, 2020SHARE POST A COMMENTREAD MORE
SUBSCRIBESEARCH
துளிகள் – 160
அழகியசிங்கர்
மத்தியபிரதேசத்தில் உள்ள குச்வாடா கிôமத்தில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 11ல்பிறந்தவர், ரஜனீஷ் சந்திர மோகன். இவர், ஓஷோ என்றழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் ஓஷோ கடையில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவேன். 59 வயது மட்டும் வாழ்ந்த ஓஷோ 1990 ல் ஜனவரி 19ல் இயற்கை எய்தினார்.
சிறிய வயதிலிருந்து கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் உடனுக்குடன் வாசிக்கும் திறமை படைத்தவர். கிட்டத்தட்டப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பதிலிருந்து விலகியும் போய்விட்டார்.
\ அவருடைய எல்லாப் புத்தகங்களையும் அவர் கையால் எழுதவில்லை. அவர் சொன்னதை மற்றவர்கள் குறித்துக்கொண்டு புத்தகங்களாக மாற்றி உள்ளார்கள். இப்படிப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன.
எந்தச் சிக்கலான தத்துவங்களையும் எளிதாகப் புரியும்படி சொல்லிக்கொண்டே போவார்.
இவர் காலத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நிஸகர்தத்தா மஹாராஜ், யூ ஜி கிருஷ்ணமூர்த்தி என்று பல ஆன்மிக குருமார்கள் வாழ்ந்து வந்தார்கள். ஓஷோவை நிஸகர்தத்தா மஹாராஜ் தவிர எல்லோரும் கிண்டல் அடிப்பார்கள். குறிப்பாக யூ ஜி ஓஷோவை பயங்கரமாகக் கிண்டல் அடிப்பார்கள்.
இன்றைய ஜெக்கி வாசுதேவ் கிட்டத்தட்ட ஓஷோ ஸ்டைலில் இருக்கிறார். ஓஷோவின் கண்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் கண்கள்.
என்னதான் மற்ற குருமார்கள் கிண்டல் அடித்தாலும் ஓஷோ எழுதிய புத்தகங்கள் முன் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக வேண்டியதுதான். ஓஷோவின் எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் ஒவ்வொருவரும் பரவசம் அடையாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் திறமையானவர்.
அடையார் தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து ஓஷோவின் பதஞ்சலி யோகா ஐந்தாவது பாகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க அந்தப் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்கவே எனக்கு மனமில்லை.
சரி, இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது எனக்கு என் நண்பர் கூறியபடி எக்ஸ்பிரúஸô காப்பி குடித்த மாதிரி இருக்கும். ஆரம்பித்தில். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தூக்கிப் போடுவதுபோல் இம்மாதிரியான புத்தகங்களும் என்று எனக்குத் தோன்றும். ஆனால் எங்கே பார்த்தாலும் ஓஷோ புத்தகங்களை வாங்காமல் இருக்க மாட்டேன்.
சமீபத்தில் புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகம் தி புக் ஆப் சீக்ரட்ஸ். எங்கே ஓஷோ புத்தகத்தைப் பார்த்தால் வாங்கிக் குவித்துவிடுவேனோ என்ற பயத்தில் ஓஷோ புத்தகம் விற்கும் பக்கத்திலேயே போய் நிற்கமாட்டேன்.
அன்று ஜெய்கோ என்ற புத்தக அலுவலகத்திற்குச் சென்றேன். ஆர்யாகவுடர் தெருவில்தான் அந்தப் புத்தகக் கடை இருந்தது. என்ன சோகம். அங்குக் கிருஷ்ணா என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று இருந்தது. 700 பக்கங்கள் உள்ள புத்தகம். ரூ.375க்குக் கிடைத்தது.
பொதுவாக ஓஷோ புத்தகங்கள் எல்லாம் கேள்வி பதில் வடிவத்திலிருக்கும். அந்த வடிவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதாவது ஒரு பக்கத்தைத் திறந்து எதாவது ஒரு கேள்வியை ஒரு பதிலைப் படித்தால் போதும். ஒன்றாம் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்க வேண்டாம். சரி, இந்தக் கொரானா நேரத்தில் ஓஷோ இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? தனித்திருக்கச் சொல்வார், விழித்திருக்கச் சொல்வார், மௌனமாக இருக்கச் சொல்வார்.
ஓஷோ பிறந்தநாளான இன்று கொஞ்சமாவது ஓஷோ புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
கவிதையும் ரசனையும் – 6
(பகுதி 2)
அழகியசிங்கர்
‘லாங்ஸ்டன் ஹியூஸ்’ கவிதையைப் பார்ப்போம்.
‘கலப்பு’ என்பது அக் கவிதையின் தலைப்பு.
என் தந்தை ஒரு வெள்ளையன்
என் தாய் ஒரு கறுப்பி
என் வெள்ளை தந்தையைச் சபித்தால்
என் சாபம் எனக்கே திரும்பும்
என் கறுப்புத் தாயைச் சபித்தால்
அவள் நரகத்தில் இருக்க விரும்பினால்
அந்த கெட்ட விருப்புக்கு வருத்தம்
அவள் நன்றாக இருக்கட்டும் அதுவே
என் இப்போதைய விருப்பம்
என் தந்தை இறந்தது அழகிய பங்களாவில்
என் தாய் செத்தது ஒரு குடிகையில்
நான் சாகப் போவது எங்கேயோ
நான் வெளுப்பும் இல்லை கருப்பும் இல்லையே
பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு சிறுபத்திரிகைகள்தான் தான் அடைக்கலம் கொடுக்கின்றன. ஆனால் இன்னும் கூட வணிக ரீதியாக இயங்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. ஏன் என்று தெரியவில்லை?
ஆனால் ஒருவர் விதம்விதமாக கவிதைகள் எழுத வேண்டுமென்று நினைத்தால் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பலவிதங்களில் எழுத உதவும். இதை சி சு செல்லப்பா புரிந்து வைத்திருந்தார்.
மேலே குறிப்பிடப்பட்ட லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதையைப் பார்ப்போம். தந்தை வெள்ளையனுக்கும் தாய் கறுப்பிக்கும் பிறந்திருக்கும் பையன் வழியாக இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கிறது. பையனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சாகப் போவது எங்கே? அவன் கருப்புமில்லை வெளுப்புமில்லை. அவன் தந்தை ஒரு வெள்ளையன் என்பதால் அவன் அழகிய பங்களாவில் இறந்து போகிறான். அவன் தாய் செத்தது ஒரு குடிசையில். அவன் வெள்ளைத் தந்தையைச் சபித்தால் என் சாபம் எனக்கே திரும்பும் என்று கவிகுரலோன் கூறுகிறான்.
லாங்ஸ்டன் ஹியூஸ் ஒரு நீக்ரோ கவிஞர். இன்னும் அதிகமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து ஆராய வேண்டும் என்று தோன்றுகிறது.
‘பிரமிள் படைப்புகள்’ என்ற புத்தகத்தில் கவிதைகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் எஸ்ரா பவுண்ட் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் பிரமிள். அதில் ஒரு கவிதை.
சுருட்டுக்கடை
ஆண்டவனே! சுக்கிரபகவானே!
நெடர்களைப் போஷிக்கும் புதனே!
கெஞ்சிக் கேட்கிறேன்,
காலாகாலத்தில்
எனக்கொரு
நட்டுக்கடை வைத்துக்கொடுங்கள் சாமி!
விதவிதமாகப் பதனிட்டு
கண்ணாடி பீரோவினுள்
அழகான பெட்டிகளில்
அடுக்கப்பட்ட
வெவ்வேறு வெட்பதட்பங்களின்
சுருட்டுக்கள்.
கூடவே, எடைபோட
எண்ணெய்ப் பிசுக்கு
ரொம்பவும் இல்லாத ஒரு தராசு.
இன்னும் ஒன்று –
கலைந்த தலைமயிரைச் செப்பனிட்டு,
சிறுவிஷமச் சொற்கள் பரிமாற
அவ்வப்போது சில
வேசிகளும் வரவேண்டும்.
ஆண்டவனே! சுக்கிரபகவானே!
திருடர்களைப் போஷிக்கும் புதனே!
எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி!
இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் –
நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற
இந்த எழுத்துத் தொழில் தவிர.
இந்தக் கவிதையைப் படிக்கும்போது சிரிப்பு தாங்க முடியவில்லை. கவிதையில் திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார். கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்கிறார் தெரியுமா? சுருட்டுக் கடை வைத்துக்கொடுக்க அருள் புரிய வேண்டும் என்கிறார்.
ஒரு கவிதையை எப்படியெல்லாம் கற்பனை செய்யலாம் என்பதற்கு இது முன்மாதிரி. எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் இதுமாதிரியெல்லாம் எழுதி உள்ளார்.
கடைசியில் முடிக்கும்போது திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார். ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்கிறார் என்றால் மூளை தேவைப்படுகிற எழுத்துத் தொழில் தவிர இதை அளிக்கச் சொல்கிறார்.
இப்படி சிறுபத்திரிகைகளில் வரும் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை இன்னும் பின்னால் ஆராய்ந்து பார்ப்போம்.
(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)
அழகியசிங்கர்
02.12.2020 அன்று வெள்ளிக்கிழமை நடந்த 28ஆம் சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தவர்களின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
இந்த கவிதை ஒளிப்பதிவில் காணப்படும் குறைகளை யாராவது சுட்டிக் காட்டினால் அடுத்த முறை வராமல் பார்த்துக்கொள்ளப்படும்.
அழகியசிங்கர்
என் பிறந்தநாள் போதுதான் யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாளும். அல்லது அவர் பிறந்தநாள் போது என் பிறந்தநாளும் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் போது அவரையும் நினைத்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாளில் ஒரு முறை அவரைச் சந்தித்ததைப் பேசியதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.
2015 ஆம் ஆண்டு என் பிறந்த தினம் போதுதான் வெள்ளம் புயல் அடித்து புத்தகங்களை எல்லாம் நாசமாகிவிட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாய் என் கார் தப்பி விட்டது. புயல் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் அஜித் படம் பார்க்க காரில் போயிருந்தேன். பார்கிங் பண்ணும்போது என் கார் இன்னொரு கார் மீது மோதி என் காருக்கும் சேதம் அன்று என் காரை நான் பார்க் பண்ணவிலலை. தியேட்டரில் உள்ள ஒருவரைத்தான் பார்க் பண்ணக் கொடுத்திருந்தேன்.
நல்லகாலம் அவர் காரை இடித்ததால் அண்ணாசாலையில் உள்ள மெக்கானிக் கடைக்குப் போகும்படி ஆயிற்று. வீட்டில் வைத்திருந்தால் கார் வெள்ளத்தில் மூழ்கி இன்னும் மோசமாக உருமாறி இருக்கும். ஏன் காரே போயிருக்கும்.
எல்லாம் நம்மை அறியாமலேயே யாருடைய சித்தம் இருக்கிறது.
அந்த ஆண்டு அப்போதுதான் புதிதாக அடித்து அடுக்கி வைத்திருந்த கவிதைத் தொகுதி போய்விட்டது. கூழ் கூழாகி விட்டது. வேற சில புத்தகங்களும் போய்விட்டன.
ஒவ்வொரு முறையும் பெரிய முயற்சி செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறேன். பதிப்பாளரும் நானே. எழுத்தாளரும் நானே.
எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருப்பேன்.
இந்தக் கொரானா காலத்தில் நண்பர்களை உறவினர்களை இழந்து விட்டேன்.
இதெல்லாம் மீறி இந்த ஆண்டு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஜீரோ டிகிரி பதிப்பாளர் என் கதைகளின் 9 எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள். அப் புத்தகத்தின் தயாரிப்பு ஆங்கிலப் புத்தகம் பார்ப்பதுபோல் இருக்கிறது. அஸ்வினி குமார் என் கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் பார்க்கும்போது என் புத்தகம்தானா என்ற பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Dad’s Favourite Newspapaer என்பதுதான் புத்தகத்தின் பெயர். இரண்டாவது புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகம். ஏற்கனவே துளிகள் 1 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். நான் எப்போதும் 100 பக்கங்களுக்குள் என் புத்தகத்தைக் கொண்டு வருவதை விரும்புவேன். துளிகள் 1 என்ற புத்தகத்தைப் போல் துளிகள் 2. இந்தப் புத்தகங்களை ஒருவர் வாங்கிப் படிக்க ஆரம்பித்தால் கீழேயே வைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்..
|
Add cap அழகியசிங்கர் tion |
நாளை நீ திரும்பவும்
கோரத்தாண்டவம் ஆடப் போவதாய்
சிலர் சொல்கிறார்கள்
உண்மையா..
2015 ஆம் ஆண்டு
நீ வந்து ஆடிய ஆட்டத்தை
யாரும் மறந்திருக்க மாட்டார்கள்
தெரு முட்ட முட்டச் சாக்கடை கலந்த
வெள்ள நீர்..
கீழே உள்ள சின்ன அறையில்
பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்களைப்
பதம் பார்த்துவிட்டாய்
நான் வைத்திருந்த விற்க வேண்டிய
புத்தகங்கள் ஏன் உன் கண்ணில் பட்டது.
சேர்த்து வைத்திருந்த முக்கிய புத்தகங்களையும்
அழித்தாய். படிக்கலாம் என்றும் எடுத்துப் பார்க்கலாம்
என்றும் நான் காத்திருந்தேன்.
நியாயமா புயலே
உனக்கு ஏதேதோ பெயர்கள் சூட்டுகிறார்கள்
உனக்குத் தெரியுமா?
நாளை என் பிறந்தநாள் என்று..
அழகியசிங்கர்
27.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் எது கவிதை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தமிழறிஞர் இலந்தை கந்தசாமியின் உரையின் ஒளிப்பதிவை கேட்டு மகிழுங்கள்.
நிவர் புயல்
1.எங்கிருந்தோ பதுங்கி பதுங்கி
எங்களைத் துடிக்க விட்டாய்
2. எப்போதும் போல் தோன்றி
இந்த முறை
ஒன்றும்செய்யாமல் விட்டுவிட்டாய்
உமக்கு நன்றி. கருணை வைத்ததற்கு
3. உன் பாதை எங்கோ கிளம்பி
எங்கோ செல்வதுதானே
இந்த முறை மட்டும்
சரியான பாதையில்
பயணம்
செய்து விட்டாய் ஏன்?
4. உனக்கு யார் இந்தப் பேர் வைத்தது?
நிவர் என்று
என்னால் ஞாபகப்படுத்திக்கொண்டு
ஒவ்வொரு முறையும் சொல்ல முடியவில்லை
5.ஏற்கனவே கொரானா பயத்தில்
வீட்டில் இருக்கிறோம்
இன்னும்
உன் பயத்தால்
இன்னும் இன்னும்
இருக்கிறோம்.
6. நிவர் நீ வந்தாலும் வந்தாய்
நாங்கள் கவிதை எழுதப்
பாடுபொருளாக மாறிவிட்டாய்
6. நல்லது உன்னைப் பற்றிஎழுதப்பட்ட
கவிதைகளைப்
படித்துப் படித்து
நீ ஓட்டம் பிடித்து விட்டாய்.
26.11.2020 (வியாழன்)