யாருக்கும் தெரிய வேண்டாம்?

கதை : 47 

அழகியசிங்கர்


  காலையில் கதவைத் திறந்தவுடன், வாசல் படிக்கட்டில் எலி செத்துக் கிடந்தது.  கொஞ்சம் அருவெறுப்பாக இருந்தது.
 மைதிலி எழுந்து வருவதற்குள் அப்புறப்படுத்தி விடலாமென்று தோன்றியது. உள்ளே உடனே போய் ஒரு முறம் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தாளில் செத்த எலியை தள்ளினேன்.

பின்

மூக்கைப்பிடித்துக்கொண்டு மாடிப்படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாக இறங்கி கேட்டைத் திறந்து வெளியே தூக்கி எறிந்தேன்.
நான் தினமும் வித்தியாசமான முறையில் தூங்கிக் கொண்டிருப்பேன்.  திடீரென்று விழித்துக் கொள்வேன். மைதிலி  நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பாள்.

கதவைத்திறந்து பால் பாக்கெட்டை எடுத்து உள்ளே வைப்பேன்.  அப்படித் திறந்தபோதுதான் செத்த எலியைப் பார்த்தேன்.  
ஐந்துமணிக்குக் கதவைத் திறந்து பால் பாக்கெட்டுக்ளை எடுத்து வைக்காவிட்டால் யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.
அடுத்த நாளும் கதவைத் திறந்தேன்.  இன்னொரு பெரிய எலி செத்துக் கிடந்தது. பூனை கடித்துப் போட்டிருக்குமென்று தோன்றியது. பூனை ஏன முழுதாக எலியைக் கடித்து கொதறாமல் இப்படி கொலை செய்துவிட்டுப் போடுகிறது? இதற்குக் காரணம் புரியவில்லை.
திரும்பவும் மைதிலிக்குத் தெரியாமல் எடுத்துப் போட்டேன்.
இராத்திரி நகுலன் பற்றி ஒரு கட்டுரைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  ரொமப நேரம் கண் விழிக்க வேண்டியிருந்தது.
நன்றாகத் தூங்கி விட்டேன்.

“ஆண்கள் தினத்திற்கு வாழ்த்துகள்,” என்றாள் மைதிலி.
“நன்றி” என்றேன்
மணி எட்டாகியிருந்தது. 
“இன்றைக்கு ஒன்றுமில்லையா?”
“என்னது?”
“அது…பால் பாக்கெட்டுகள் எல்லாம் திருடு போகாமலிருந்ததா?”
“இருந்தது.”

ஒவ்வொரு நாளும் செத்துப் போய்க் கொண்டிருக்கும் எலிகளைப் பற்றித் தெரியாமலிருந்தால் சரி என்று எண்ணிக்கொண்டேன்.


மைதிலி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். ஆண்கள் தினத்தன்று எலி செத்து வாசலில் கிடந்தது ஏன் சொல்ல வேண்டுமென்று அவளே எலியை அப்புறப் படுத்தி விட்டாள்.

71வது விருட்சம் நேசிப்புக் கூட்டத்தின் காணோளி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (06.11.2021)   சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது.   
கலந்து கொண்டு சிறப்பு செய்த கவிஞர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

71வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 21

07.10.2021

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம்.

Time: Oct 9, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82567412507…

Meeting ID: 825 6741 2507

Passcode: 102835

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

07.10.2021


துளி – 222

அழகியசிங்கர்


இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள். ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபசகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். அவர்கள் கண்கலங்கினார்கள் என்றார்.“ உண்மையில் ஞானக்கூத்தன் வயது இப்போது 82 வயதாகியிருக்கும். எப்போதும் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் படிக்கும்போது புது புது அர்த்தங்கள் தொனிக்கும். பெரும்பாலோர் அவர் ஆரம்பக்காலக் கவிதைகளை மட்டும் கூறுவார்கள். புதிதாக அவர் எழுதிய கவிû8தகளைக் கூறவே மாட்டார்கள். வித்தியாசமான நான் பிற்காலத்தில் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். உணவு மேஜை என்ற கவிதையைஇங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


உணவு மேஜை

ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத்

தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா

மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார்

சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு

இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. வியந்தார்

மௌனி ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

சு.ரா.வீட்டு சப்போட்டா மரத்தைப்

பார்த்துக் கொண்டே

மௌனி வெளியே போனார்

அவர் போன கையோடு

நகுலன் சுசீலாவோடு உள்ளே நுழைந்தார்

அப்போதும் தியானத்தில் இருந்தார் சு.ரா.

ஆனால் சு.ரா. மனைவியைக் கூப்பிட்டார்

இருவர்க்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. இப்போதும் வியந்தார்

நகுலன் ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

தன் வீட்டில் மரத்தில் போல

சு.ரா. வீட்டு சப்போட்டா மரத்தில்

வாழும் பாம்பு இருக்குமோ என்று பார்த்தார்

பின்பு நகுலன் வெளியே போனார்

சு.ரா. எழுந்தார்

உணவு மேஜையைப் பார்த்தார்

அங்கே ஒருவரும் இல்லை


இக் கவிதையில் நடந்த நிகழ்ச்சி போல் ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்து சொல்கிறார். இதுதான் இக் கவிதையின் சிறப்பு
இதில் உள்ள எந்தக் கதாபாத்திரங்களும் இப்போது இல்லை. இதை எழுதிய ஞானக்கூத்தனும் இல்லை. ஆனால் அவர் எழுதிய கவிதை மட்டும் இருக்கிறது.
இப்போது உள்ள வாசகனுக்கு இது ஒரு கற்பனை சம்பவம் என்று தெரியும். எதிர் காலத்தில் இக் கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு இது நிஜமான சம்பவம் என்று நம்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

69வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

01.10.2021

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 69வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (02.10.2021) நாளை சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன். 1. உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம் 2. மற்றவர்களுடைய கவிதைகளை வாசிக்கலாம் 3. மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கலாம்.சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 69வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: Oct 2, 2021 06:30 PM IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/86945949909…

Meeting ID: 869 4594 9909

Passcode: 845989

ரஸவாதி கதைகள் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.


அதனுடைய காணொளியை இங்கு அளிக்கிறேன். கண்டு களியுங்கள்.

விருட்சம் – குவிகம் நடத்தும் ஆறாவது கூட்டம்.

 
அழகியசிங்கர்

சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம்.

தலைமை உரை : முத்த எழுத்தாளர் நரசய்யா

நிகழ்த்துபவர்கள் :

1. தமிழ் அறிஞர் கால சுப்பிரமணியன்

2. தமிழ் ஆய்வாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம்

3. முனைவர் தி. செந்தமிழ்ச்செல்வி

4. முனைவர் பட்ட ஆய்வாளர் த.முத்துலட்சுமி

5. எழுத்தாளர் அழகியசிங்கள்

6. திரு செல்லப்பா மணி

நன்றி உரை : தமிழ் நேசர் சிட்டி வேணுகோபாலன்

Topic: சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம்.

Time: Sep 30, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82224342142?pwd=Y2E0S01uUGVDNHJTOEFVRWE2RzlSZz09

Meeting ID: 822 2434 2142 Passcode: 783186

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 20

அழகியசிங்கர் 

சிறப்பாக நடந்து முடிந்தது.   வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள்

1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் 

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளை சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி உள்ளார்கள்.  அதன் காணொளியை ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்


இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்…

புதிய இடுகை சேர்க்க

அழகியசிங்கர்

1) கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 20

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். இன்று (25.09.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள்1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகள்û சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.

Topic: விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம்Time: Sep 25, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89862838751…

Meeting ID: 898 6283 8751Passcode: 386195

2) ரஸவாதி கதைகள் – விமர்சனக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் உரையாற்றுகிறார்கள்.

நாளை (ஞாயிற்றுக் கிழமை – 26.09.2021) காலை 11

மணிக்கு நடக்க உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: ரசவாதியின் சிறுகதைகள்Time: Sep 26, 2021 11:00 AM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87108699304…Meeting ID: 871 0869 9304Passcode: 825201

4You, Ramanathan Rk, Kumar Bhuvaragavalu and 1 otherLikeCommentShare