துளி – 61 அந்தக் கல்கண்டும் இந்தக் கல்கண்டும்…

அழகியசிங்கர்

தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பின் கீழ் 24.07.2019 வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்வாணனைப் பற்றி கூட்டம். வவேசுவும், லேனா தமிழ்வாணனும். 

நான் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (அறுபதுகளில்) எனக்கு கல்கண்டு என்ற பத்திரிகை அறிமுகமாயிற்று.  அதன் ஆசிரியர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்துகொண்டு பத்திரிகையில் போஸ் கொடுப்பவர்.  துணிவே துணை என்ற தாரக மந்திரத்தை பத்திரிகை மூலம் உச்சரித்துக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அவர் கிருஷ்ணா குளம் கிரவுண்டில்(சென்னை 1 ல் உள்ளது) பேச வருகிறார் என்று விளம்பரப்படுத்தினார்கள்.  நான் சிறுவன்.  எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ்வாணன் கூட்டத்திற்குப் போனேன்.  இப்போது அவர் என்ன பேசினார் என்று ஞாபகமில்லை, எப்படி இருந்தார் என்று ஞாபகமில்லை.  ஆனால் அவர் பேசி முடித்தவுடன், அவர் இறங்கி வரும்போது, என் கையில் உள்ள காகிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கியது ஞாபகத்திலிருக்கிறது.  இப்போது அந்தத் தாள் இல்லை.  

என் மாமாதான் கல்கண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் குமுதம் வாங்காதே, அது ஆபாசமாக இருக்கும் என்று கூறினார்.  தமிழ்வாணன் பத்திரிகையான கல்கண்டை நான் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிப்பேன். 

எனக்கு துப்பறியும் கதைகள் மீது ஆர்வமிருந்தது.   உயிரே உயிலா என்ற தொடர்கதை அப்போது கல்கண்டு இதழில் வந்திருந்தது.  நான் ஆர்வமாக எடுத்துப் படிப்பேன்.  தமிழ்வாணன் எழுதியது.  

அன்றைய கூட்டத்தில் தமிழ்வாணன் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறாரென்ற தகவல் கூறினார்.  அவர் கல்கண்டு பத்திரிகையில் அவர்தான் எல்லாம் எழுதுவார்.  கேள்வி பதில் பகுதி இருக்கும்.  சின்ன சின்ன தகவல்கள் இருக்கும்.  அரோக்கியமாக இருப்பது எப்படி? என்று கட்டுரை எழுதியிருப்பார்.  நூறு வயதுவரை வாழ்வது எப்படி? என்றெல்லாம் எழுதியிருப்பார். ஆனால் அவர் இதயநோயால் இறந்து விட்டார்.  51வயதிலேயே.  நான் அவரைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நானும் துப்பறியும் நாடகம் எழுதினேன்.  

அதை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடித்தோம்.  எல்லோரும் ஆண் பாத்திரங்கள்.  ஒரு பெண் பாத்திரம் கூட கிடையாது.  வில்லியே கிடையாது.  இப்போது நடக்கும் சீரியல்களில் வில்லிகள்தான் அதிகம்.  வில்லன் கிடையாது.  என் நாடகம் அரங்கேறியபோது நிறையா தமாஷ் நடந்தது.  நாடகம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நாடகம் எழுதியதுகூட தமிழ்வாணனின் கல்கண்டு படித்ததால்தான்.  

நன்றாக கையெழுத்து வரவேண்டும் என்பதற்காக கோடுபோட்ட நோட்டில் ஒரு பக்கம் எழுதிவந்து பள்ளிக்கூடத்தில் காட்டவேண்டும்.  அப்போது எனக்குத் தோன்றிய துப்பறியும் கதையை (கற்பனையில்) எழுதிக்கொண்டு காட்டுவேன்.  தமிழ்ஆசிரியர் பார்க்காமல் ரைட் போடுவார்.  நான் மர்ம நாவல்கள் எழுதி ராஜேஸ்குமாருடன் போட்டி போட்டிருக்க வேண்டும்.  தவறிப்போய்விட்டது. 

அந்தத் தமிழ்வாணனையும் கல்கண்டையும் என்னால் மறக்க முடியாது.  ஆரம்பத்தில் படிக்கும் பழக்கத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன்தான்.  ஆனால் அதன் பின் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.  தொடர்கதைகள் பத்திரிகைகளில் படிக்கும் பழக்கமிருந்தது. பட்டம் பூச்சி என்று ஹென்ரி ஷாரியர் தொடர்கதையை விடாமல் குமுதத்தில் படிப்பேன். சாண்டில்யனைப் படிப்பேன்.  கல்கியில் பொன்னியின் செல்வன் படித்து சோர்ந்து விட்டேன்.  ஆனால் ஜெகசிற்பியன, ரெங்கநாயகி தொடர்கதைகளைப் படிப்பேன்.  அப்படி படிப்பதும் மாறி கணையாழி, தீபம் என்று போய்விட்டது.  

இந்தக் கால கட்டத்தில் கல்கண்டு படிப்பதில் ஆர்வம் குறைந்து போய்விட்டது.  அன்றைய கூட்டத்தில் எனக்குத் திரும்பவும் தமிழ்வாணன், கல்கண்டு என்று ஞாபகம் வந்தது.  ஒரு இதழாவது பழைய தமிழ்வாணன் கல்கண்டு இதழை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்.  சேகரிக்கும் பழக்கம் இப்போதுதான் வந்துள்ளது.  ஏகப்பட்ட புத்தகங்கள், சிறு பத்திரிகைகள் சேகரிக்கத் தொடங்கி உள்ளேன்.  சமீபத்தில் வந்துள்ள கல்கண்டு இதழை வாங்கிப் பார்த்தேன்.  கல்கண்டு முழுவதும் மாறி விட்டது.  தமிழ்வாணன் இல்லை.  

காந்தியைப் பற்றிப் பேச வாய்ப்பு கொடுத்தார்கள்


அழகியசிங்கர்


நான் காந்தியை என்னுடைய கல்லூரி நாட்களிலேயே விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். அவருடைய சுயசரிதம்தான் படித்த புத்தகம். ஆனால் காந்தியைப் பற்றி எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொள்வேன். அதேபோல் பாரதியார். காணும் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துவிடுவேன். இப்படி வாங்கும் புத்தகங்களைத் தொட்டுப் படிக்க மாட்டேன். அப்படியொரு நல்ல பழக்கம் எனக்கு.


கடந்த 17ஆம் தேதி காந்தி நிலையத்திலிருந்து காந்தியைப் பற்றிப் பேச ஒரு அழைப்பு. 1 மணி நேரம் பேச வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.. என்னால் ஒரு மணி நேரம் பேச முடியுமா? காந்தி புத்தகத்தைப் படித்துவிட்டு. இது பெரிய சவால். நான் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் 5 நிமிடம் பேச எடுத்துக்கொள்ள முடியும். உண்மையில் 5 நிமிடம் போதும் ஒரு புத்தகம் பற்றிப் பேச.


அதனால் காந்தியைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்ட பிறகு, புத்தகத்தை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சொல்ல முடியாது என்று தோன்றியது. குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு சிலர் பேசுவார். அதுமாதிரியும் எனக்குத் திறமை இல்லை. வேற வழியில்லை கட்டுரை தயாரித்துப் பேசி விடலாமென்று நினைத்தேன். ஆனால் கட்டுரை தயாரிக்கவும் நேரமில்லை. 5 அல்லது 6 பக்கங்கள் டைப் அடித்து விட்டேன். அது போதாது ஒரு மணி நேரம் பேச. வேற வழியில்லை புத்தகத்தைப் பார்த்துதான் படிக்க வேண்டும். பார்த்துப் படிக்கும்போது பார்வையாளர்களைப் பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும். அப்படிப் படித்தால்தான் சரியாக வரும். இல்லாவிட்டால் மெஷின் மாதிரி ஒப்பிக்கிற மாதிரி ஆகிவிடும். நான் பார்த்துப் பார்த்துப் பேசினேன். ஒரு மணி நேரத்திற்கு.


நான் எடுத்துக்கொண்ட புத்தகம் 21ஆம் நூற்றாண்டில் காந்தி என்ற புத்தகம். எழுதிய ஆசிரியர் காந்தியவாதி லா சு ரங்கராஜன். இவர் காந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கயத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரியாக பணிபுரிந்தார். அதைப் படித்தபோது காந்தி ரொம்பவும் பிடிவாதக்காரராக இருந்திருப்பார் என்று தோன்றியது. முதல் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமல் கல்கத்தா போய்விட்டார் காந்தி. அங்கேயும் கலந்துகொள்ள வில்லை.


அங்கேயும் அவர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. உபவாசம் இருந்தார். ஏன்? அதேமாதிரி தேசிய கொடியில் ராட்டை சின்னம் வரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். மற்ற தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தேசிய கொடிக்கு மரியாதை தர விரும்பவில்லை காந்தி.


அதேபோல் தேசிய சீதம். வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக ஒலிக்கப் படவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். தாகூரின் ஜனகனமன ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி வரை தேசியகீதத்திற்கும் மரியாதைத் தரவில்லை. இதெல்லாம் லா சு ரவின் புத்தகத்தில் படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே எனக்குத் தோன்றியது காந்தியின் இன்னும் சில புத்தகங்களைப் படிக்கவேண்டுமென்று.

துளி : 60 – சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது….

அழகியசிங்கர்

இந்த முறை சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் விருது நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளது.  மணல் வீடு ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் இதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியாமலிருந்தது.

1988ஆம் ஆண்டு ஜøலைமாதம்தான் நவீன விருட்சம் முதல் இதழ் வெளிவந்தது.  கிட்டத்தட்ட 31ஆண்டுகள்.  ஆரம்பத்தில் விருட்சமாகவும் அதன் பின் நவீன விருட்சமாகவும் மாறிவிட்டது.  தற்போது 109வது இதழ் வெளிவந்துள்ளது.  

நவீன விருட்சம் பத்திரிகையில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை.  முன்பின் பார்த்திராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் இதழில் பிரசுரமாகி உள்ளன.

ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் நவீன விருட்சத்தில்தான் வந்துள்ளன.  ஞானக்கூத்தன் மட்டுமல்ல.  அசோகமித்திரன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஆனந்த், காளி-தாஸ், ரா ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆர் ராஜகோபாலன் என்று பலர் படைப்புகள் வெளிவந்துள்ளன. 

இந்தப் பத்திரிகையின் மூலம் நான் பல படைப்பாள நண்பர்களை சம்பாதித்துக் கொண்டேன்.  ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன். படிக்கக் கற்றுக்கொண்டேன்.  படைப்புகளை சரியாகக் கணிக்கக் கற்றுக்கொண்டேன். 

என்னுடைய திட்டம்.  ஒரு இதழுக்கு ஒரு கவிதை அல்லது ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை சிறப்பாக வந்திருந்தால் போதும். பத்திரிகைக் கொண்டு வருகிற நோக்கம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்.

அதிகப் பக்கங்களுடன் இதழைக் கொண்டு வரக்கூடாது என்பது என் நோக்கம். உண்மையில் விலை குறைவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தால் அதிகப் பக்கங்கள் போகாமல் பார்த்துக்கொண்டேன்.  

1988ஆம் ஆண்டு வெளிவந்த விருட்சம் இதழ் 16 பக்கங்கள்தான்.  ஒன்றிலிருந்து 16 பக்கங்கள் வரை கவிதைகள்.  இரண்டாவது மூன்றாவது இதழிலிருந்து பக்கங்கள் கூடிக்கொண்டே போயிற்று.  108வது இதழ் 108 பக்கங்கள்.  109வது இதழ் 100 பக்கங்கள்.

100 பக்கங்கள் ஆனாலும் விலை ரூ.20தான். மாதம் ஒரு முறை வரும் இலக்கிய வேல் என்ற பத்திரிகை தவிர்க்க இயலாத காரணங்களால் தற்காலிகமாக நின்று விட்டது என்ற அறிவிப்பை இந்த மாதம் வெளியிட்டுள்ளது. இப்படித்தான் நவீன விருட்சம் வரும் காலத்திலிருந்து பல சிறுபத்திரிகைகள் நின்று விட்டன. அந்த இடத்தை வேறுசில பத்திரிகைகள் தொடரத் தவரவில்லை.

ஒருமுறை விருட்சத்தை நிறுத்தி விடலாமென்று நினைத்தேன். அப்போது பிரமிள்,  ‘நிறுத்தாதீர்கள்.  அதுதான் உங்களுக்குப் பெயர் கொடுக்கும்,’ என்று சொன்னார்.  விருட்சம் ஆரம்பத்தில், ஞானக்கூத்தன், ‘உங்கள் கைக்கு தங்கக்காப்பு போடவேண்டும்,’ என்று ஒரு மாலை வேளையில் கடற்கரையில் கூடியிருந்தபோது குறிப்பிட்டார். உயிர்மை புக் ஸ்டாலில்  சுஜாதா கையில் விருட்சம் பத்திரிகையைப் பார்ப்பதுபோல் ஒரு புகைப்படம் உண்டு.  இது உயிரிமை பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது.   ஒரு கல்கி தொடர்கதையில் சுஜாதா விருட்சத்தைப் பற்றி கணேஷ், வசந்த் பேசிக்கொள்வதுபோல் ஒரு உரையாடல் வரும்.  சிறந்த சிறுபத்திரிகை என்று சுஜாதாவும் அசோகமித்திரனும் சொல்லியிருக்கிறார்கள்.  ம ந ராமசாமி என்ற எழுத்தாளர் விருட்சம் எழுத்து பத்திரிகையை ஞாபகப்படுத்துகிறது என்று கடிதம் எழுதி உள்ளார்.  

அஃக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பரந்தாமன் பேரில் இந்த விருது விருட்சத்திற்கு அளிக்கப்படுகிறது.  சிறுபத்திரிகையின் முன்னோடி அஃக் பத்திரிகை.  கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அஃக் பத்திரிகை அந்தக் காலத்தில் சிறுபத்திரிகை உலகில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.  அந்த அஃக் பத்திரிகையின் பேரில் இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.  இதை அளிக்கும்  
மணல் வீடு தேர்வுக்குழுவினருக்கு நன்றி.  
மணல் வீடு மாதிரி ஒரு இதழ் என்னால் கொண்டு வர  முடியாது. ஏன் கற்பனை கூட செய்ய முடியாது?    அன்றைய நிகழ்வில் கலந்து கொள்கிற எழுத்தாள நண்பர்களுக்கு என் நன்றி.  அஃக் விருது வழங்குதல் தவிர மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. 

எனக்கு அதிர்ஷ்டமில்லை..

அழகியசிங்கர்

இன்று தினமலரில் நான் எழுதிய புத்தகமான üபிரமிளும் விசிறி சாமியாரும்ý புத்தகத்திற்கான விமர்சனம் வந்தது.  மகிழ்ச்சியாக இருந்தது. நான் விசிறி சாமியாரைச் சந்தித்தது ஒரு தற்செயலான விஷயம். அதற்குமுன் சாமியார்களைச் சந்தித்தது இல்லை.  உண்மையில் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. யாரையும் தேடி சந்திக்க வேண்டுமென்றும் தோன்றியதுமில்லை.

ஆனால் பிரமிள் ஒரு சாமியார் பைத்தியம்.  அவருடன் நட்பு ஏற்பட்டபோது எனக்கு சாமியார் பற்றிய கவனம் ஏற்பட்டது.  எங்கள் அலுவலகம் ஒட்டி இருந்த பீச் ரயில்வே ஸ்டேஷனலில் ஒரு பெண் சாமியார் இருக்கிறார் என்று பிரமிள் சொன்னார்.  எனக்கு ஆச்சரியம். அந்தப் பெண் சாமியாரையும் அவர் ஒருநாள் சுட்டிக் காட்டினார்.  

தினமும் அலுவலகம் போகும்போதும் வரும்போதும் அந்தச் சாமியாரைப் பார்ப்பேன்.  அவர் ஒரு பிச்சைக்காரியாக எனக்குத் தென்பட்டார்.  பர்மா பஜார் கடை வாசலைப் பெறுக்குவார்.  

“அவர் பிச்சைக்காரி இல்லை.  சாமியார் என்றார் பிரமிள்.”

உண்மையில் அந்தப் பெண்மணி கை நீட்டி யாரிடமும் பணம் வாங்கவில்லை.  யாராவது பெறுக்குவதைப் பார்த்து காசு கொடுத்தால் வாங்கிக்கொள்வார்.  பின் சுரங்கப் பாதையில் அவர் இருப்பிடத்தை வைத்துக்கொண்டார்.  அவர் ஒரு வடநாட்டைச் சார்ந்தவர்.  பின் ஒருநாள் அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.

விசிறி சாமியாரைப் பார்க்க இப்படித்தான் ஒரு முறை பிரமிள் அழைத்துப் போனார்.  விசிறி சாமியாரை நெருக்கமாகப் பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தேன்.  அதன்பின் அதுமாதிரியான நெருக்கத்தில் விசிறி சாமியாரைப் பார்க்க முடியவில்லை.  இன்னும் பிரமிள் எனக்கு அறிமுகப்படுத்தியது சாய்பாபா கோயில்.  அதேபோல் அடிக்கடி கீரின்வேஸில் உள்ள ஜே கிருஷ்ணமுர்த்தி இடத்தில் பிரமிளைச் சந்திப்பேன்.  

இன்றைய தினமலரில் வெளிவந்த என் புத்தக விமர்சனத்தில் எல்லாம் சரியாக எழுதியிருந்தார்.  இதை விமர்சனம் செய்திருப்பவர் பின்னலூரான். ஆனால் புத்தகம் எங்கும் கிடைக்கும் என்ற விபரத்தில் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை.  முகவரியும் சரியாகக் கொடுக்கவில்லை. 

இதை சரியாகக் கொடுத்திருந்தால் சில பிரதிகள் இந்தப் புத்தகம் விற்றிருக்கும்.   அதுதான்  எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று குறிப்பிட்டேன்.  

துளி : 58 – கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டு விழா

அழகியசிங்கர்

1990ஆம் ஆண்டு விருட்சம் இதழிற்கு கரிச்சான்குஞ்சு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  இலக்கிய நண்பர் சுவாமிநாதன் என்னை கரிச்சான்குஞ்சுவின் வீட்டிற்கு அழைத்துப் போனார்.  நான் அவரிடம் விருட்சம் இதழ் கொடுத்துவிட்டு அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தேன்.  
தற்செயலாக 8வது இதழ் விருட்சம் பார்க்கும்போது கரிச்சான் குஞ்சு விருட்சத்திற்கு எழுதிய கண்ணில் பட்டது.  1990ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜøன் இதழில் எழுதி உள்ளார்.  அதை அப்படியே இங்கு தர விரும்புகிறேன்.
"இளைய தலைமுறையின் விழிப்புக்கும் திறமைக்கும் தங்களை வெளியீட்டுக் கொள்ளம் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாகும் üவிருட்சம்ý இதழ்களை என்னைத் தேடி வந்து கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.  ஆழமாகச் சிந்திக்கவும், தெளிவாகக் கருத்துக்களை வெளியிடவும் பயிலுங்கள்.  பத்திரிகை உலகம் எங்கோ திசை மாறிச் செல்லும் பொல்லாத காலம் இது.  இந்த ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பதே ஒரு பெருமை தரும் விஷயம்."
கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடன் பிரசித்தமான நாவல்.  அப்போது வாங்கியது.  அதை இப்போது இரண்டாவது முறையாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  
நான் ஒரு சில எழுத்தாளர்களுக்குத்தான் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  அதில் ஒன்று கரிச்சான் குஞ்சுவின் இரங்கல் கூட்டம்.  அக் கூட்டத்தில் பெரும்பாலோர் üகரிச்சான் குஞ்சுவிற்கு கொடுக்கவேண்டிய ராயல்டியைக் கொடுக்கவில்லை என்று பேசினார்கள். 

எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்

அழகியசிங்கர்

க.நா.சு ஒரு பொருளைக் கொடுத்துப் பேசச் சொன்னால் எந்த முன் தயாரிப்புமில்லாமல் பேசத் தொடங்கி விடுவார்.  இலக்கியத்தின் கட்டடக் கலை என்பதைப் பற்றி ஒரு முறை உரை ஆற்றினார். எந்தவிதத் தயாரிப்புமின்றி, ஞாபகத்திலிருந்து.  
ஆனால் பெரும்பாலான எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்.  எழுத்தாளர் சுஜாதாவிற்கு மேடைப் பேச்சு சரியாக வராது.  ஆனால் அவர் கட்டுரை மாதிரி தயாரித்துப் படித்து விடுவார்.  
அந்தக் காலத்தில் நகுலன் மேடையில் அமர்ந்து இருக்கும்போது கூனிக் குறுகி அமர்ந்திருப்பார்.  ஏன்டா மேடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்று அவருக்குத் தோன்றும்.  நகுலன் மணிக்கணக்கில் பேசுவார்.  ஆனால் அவர் எதிரில் உள்ள ஒருவருடன்தான் பேசுவார்.  பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கூட அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது. ஆனால் பல விஷயங்களைக் குறித்து அலுக்காமல் பேசுவார்.
என்னுடைய இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களில் பல எழுத்தாளர்கள் பேசியிருக்கிறார்கள்.  ஒருமுறை சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற அசோகமித்திரனுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வாசிக்க வைத்திருந்தேன்.  என்னைத் தவிர அந்தக் கூட்டத்தில் சா கந்தசாமி பேச அமர்ந்திருந்தார்.  ஆனால் கூட்டம் நடந்து ஒரு மணி நேரம் கூட இல்லாமல் சீக்கிரமாக முடிந்து விட்டது.  கூட்டத்தை ஏற்பாடு செய்த எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.  நான் கட்டுரையைச் சுருக்கமாக எழுதி விட்டேன்.   
இன்னும் கூட எனக்குக் கூட்டத்தில் யாராவது ஒரு மணி நேரம் பேசுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.  அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் உப்புசப்பில்லாத விஷயமே பேசுவார்கள்.
சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் எந்தப் புத்தகத்தைப் பற்றி பேச வேண்டுமோ அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் பேசினார்.  கில்லாடித்தனமாகப் பேசினார்.  புத்தகம் படிக்காமலயே அதைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எவ்வளவு சாமார்த்தியம் வேண்டும். ஆனால் கேட்பவர்கள் புத்திசாலிகள் கவனித்து விடுவார்கள்.
மேடையில் பேசுவதைப் பற்றி என் மூத்த இலக்கிய நண்பர்கள் பலவித அறிவுரை கூறுவார்கள்.  எதிரில் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று. அப்போதுதான் பேச வரும் என்று ஞானக்கூத்தன் கூறுவார்.  அவர் திறமையாகப் பேசக் கூடியவர். மேடைப் பேச்சுக்கு உதாரணமாக அவரைச் சொல்லலாம்.  
இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு துண்டு காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருப்பார்.  அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு திறமையாகப் பேசிவிடுவார்.
ஞானக்கூத்தனோ பேச்சில் தீவிரத்தன்மை உடையவர்.   அசோகமித்திரனோ அதற்கு எதிர்.  அவர் பேச ஆரம்பிக்கும்போதே கேட்பவர்களுக்குச் சிரிப்பு வந்துவிடும்.
என் நேர்பக்கம் புத்தக வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேச ஆரம்பித்தார்.  புத்தகத்தில் முதல் கட்டுரை சி சு செல்லப்பாவைப் பற்றி இருந்தது. சி சு செல்லப்பாவை வைத்து ஒரு ஜோக் அடித்தார்.  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
மேடையில் எழுதி வாசிப்பது என்பது சரியாக வராது.  அதை நான் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால் பேச்சு அனுபவமில்லாததால் எழுதித்தான் வாசிக்க வேண்டி உள்ளது.  அப்படிப் படிக்கும்போது மெதுவாக பார்வையாளர்களை அடிக்கடி பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும்.  ஒருமுறை வல்லிக்கண்ணனைப் பேச அழைத்தேன்.  அவர் தமிழ் நாவல்களைப் பற்றி பேசினார்.  அவர் படித்த நாவல்களைப் பற்றி கடகடவென்று ஒப்பித்தார்.  ஒரு பேச்சாளர் கையில் காùஸட் ரெக்கார்டரை வைத்திருந்தார்.  பேசுவதற்கு முன் காùஸட் ரெக்கார்டரை ஆன் செய்தார்.  இதோ நானும் பேசுகிறேன். இந்த ரெக்கார்ட் ப்ளேயரும் பேசுகிறது என்று ஆரம்பித்தார் பேச. 
பேசுபவருக்கு ஞாபகமறதி இருக்கக் கூடாது.  எதாவது ஒரு கவிதையோ குட்டி கதையோ சொல்லிக் கூட்டத்தை நடத்தி விடலாம். ஞாபகமறதி உள்ளவர்கள் பேசும்போது தாளில் எழுதி வைத்துப் பேசுவது சிறப்பானது.  பேச்சு என்பது நடிக்க வேண்டும்.  பேசும்போதே நடிக்க வேண்டும்.  சிலரால்தான் அது முடியும்.   வந்து வந்து என்று பேசும்போது பேசுவது பெரிய உபயோகமாக இருக்கும்.   எதாவது பேசும்போது தயக்கம் வந்தால் ஒரு வந்தை போட்டுப் பேசி விடலாம்.
சமீபத்தில் நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன்.  கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் என்னை கூட்டத்தை ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.  எனக்கு ஒரே திகைப்பு.  ஒரு வழியாக சமாளித்தேன்.
பல கூட்டங்கள் அர்த்தமில்லாமல் போகின்றன.  சரி கூட்டத்தால் என்ன கிடைக்க வேண்டும்.  ஒன்றும் கிடைக்க வேண்டாம்.  ஆனால் போவோம்.  நண்பர்களை, பிடித்தமானவர்களை சந்திப்பதற்காகப் போவோம்.  

க நா சுதான் கூட்டம் நடத்தச் சொன்னார்

அழகியசிங்கர்

கநாசு வை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்தேன்.  கூட்டம் ஒய்எம்சியில் நடந்தது.  அரங்கநாதன் புத்தக விமர்சனக் கூட்டம்.  பாரிமுனையில் அந்தக் கட்டிடம் இருந்தது.  அங்கேதான் க நா சுவைப் பார்த்தேன்.  üüநீங்கள் ஏன் கூட்டம் நடத்தக் கூடாது,ýý என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம்.  அப்போது நான் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கவே இல்லை.  அவர் சொன்னபிறகு பல மாதங்கள் ஓடி விட்டன.  நான் கூட்டம் போடுவதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.

பின் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  என் நண்பர் சீனிவாசன் அவர் தயாரித்த காயின் பவுடருக்கான  விளம்பரம் இந்து நாளிதழில் வெளி வர விரும்பினார்.  சின்ன விளம்பரம்.  ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளம்பரம் கொடுத்துவிட்டு பின் அவருடைய தயாரிப்பைப் பற்றி விளம்பரம் தர வேண்டும்.  அந்தச் செலவை அவர் ஏற்றுக்கொண்டு விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம் ஏற்பாடு செய்தார்.   தி நகரில் ஒரு பள்ளியில்.  முதல் கூட்டம் காசியபனை வைத்து நடத்தினேன்.  அந்த சமயத்தில் க நா சு உயிருடன் இல்லை.  

இப்படித்தான் நான் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  1988லிருந்து.  சில கூட்டங்களுக்கு சீனிவாசன் உதவி செய்தார்.  பின் உதவி செய்வதை நிறுத்திவிட்டார்.   அப்போதெல்லாம் ரூ.100 போதும் கூட்டம் நடத்த.  ஒரு லேடீஸ் ஹாஸ்டல் மாடியில் திருவல்லிக்கேணியில் கூட்டம் நடந்தது.  வாடகை ரூ.50.  கார்டு செலவு ரூ.25.  டீ, காப்பி வரவழைப்பதற்கு ரூ.25.  பேச வருகிற இலக்கியவாதிகளுக்கு பணம் எதுவும் கிடையாது.  அவர்களும் எதிர்பார்க்க மாட்டார்கள். 

பல கூட்டங்கள்.  இரங்கல் கூட்டங்கள்.  புத்தக வெளியீட்டுக்

கூட்டங்கள்.   எந்த இலக்கியவாதியும் என் கூட்டத்தில் பேசுவதிலிருந்து தப்பித்ததில்லை.  ஒரு முறை என் கவிதைப் புத்தகமான  üயாருடனும் இல்லைý என்ற புத்தகத்திற்கு அறிமுகக் கூட்டம் வைத்தேன்.  தலைமை ஞானக்கூத்தன்.  என்  4 நண்பர்களை அழைத்தேன்.  பேசுவதாக சொன்னார்கள்.  ஆனால் நால்வரும் பேச வரவில்லை.  உண்மையில் அவர்கள் ஒப்புக்கொண்டதால்தான் அழைத்தேன்.  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு வரவில்லையா என்பது தெரியவில்லை.  ஞானக்கூத்தனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.   ஆனால் கூட்டத்திற்கு எப்போதும் வருகிறவர்கள் வந்தார்கள்.

அதுதான் முதல் தடவை ஒருவித சங்கடமான நிலைக்கு  நான் ஆளானது.    பொதுவாக கூட்டத்திற்கு கலந்துகொள்பவர்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வர மாட்டார்கள்.  ஆனால் பேசுபவர்களே வரவில்லை என்றால்? அதுவும் நாலு பேர்களும் வரவில்லை என்றால்? அதில் ஒருவரைத் தவிர  மூன்று பேர்களுக்காக எத்தனையோ கூட்டம் நடத்தியிருக்கிறேன். 

பொதுவாக கூட்டம் அதிகமாக வராது.  கொஞ்ச பேர்கள்தான் வருவார்கள்.  கலந்து கொள்ள வருபவர்களுக்காக நான் இரக்கப் படுவேன்.  அவர்கள் எங்கிருந்தோ வருவார்கள்.  ஒருமுறை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்டு, பல மாதங்கள் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

இந்தக் கூட்டம் நடத்துவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு.  ஒரு பயனும் இல்லை.  எழுத்தாளர்களைச் சந்திப்பது.  புத்தகங்களைப் பற்றி பேசுவதுதான்.   இந்தக் கூட்டம் நடத்துவதால் அலுக்கவே இல்லையா என்ற கேள்வி என்னைக் கேட்கலாம்.  அலுக்கவே இல்லை. சரி கூட்டத்திற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும.  உண்மையில் நான் நடத்தும் கூட்டத்திற்கு 100 பேர்கள் வந்துவிட்டால் நான் தடுமாறிப் போய்விடுவேன்.  எப்படி நடத்துவது என்று தெரியாமல் போய்விடும்.  பத்து பேர்கள் வந்தால் போதும்.  கேட்பவரும் பேசுபவரும் இருந்தால் போதும்.  ஆனால் பேசுபவர்கள் அதிகமாக பேர்கள் வர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.  என்னைப் பொறுத்தவரை கேட்பதற்கு நான், பேசுவதற்கு ஒருவர் இருந்தால் போதும்.  பெண்கள் பொதுவாக் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். அவர்கள் கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போவதற்குள் அதிக தாமதம் ஆகும்.  என் அலுவலகத்தில் உள்ள பெண்கள் ஐந்து மணி ஆனவுடன் வீட்டிற்கு ஓடுவார்கள்.  அவ்வளவு வேகமாகப் போய்விடுவார்கள்.  இலகக்கியக் கூட்டம் என்றால எக்ஸ்டிரா முயற்சி வேண்டும்.  

நான் கூட்டம் நடத்தியது பெரும்பாலும் லேடீஸ் ஹாஸ்டல் மாடியில், தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணியில் அது இருக்கிறது. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஒரு பெண்மணி மட்டும் வருவார்.  கூட்டத்திற்கு வருபவர்களின் வயது?  எனக்கு அப்போது வயது 35.  கூட்டத்திலும் பெரும்பாலும் 35லிரந்து இருப்பார்கள்.  இப்போது 65. அதனால் கூட்டத்திற்கு வருபவர்களும் 65 வயதிற்கு மேல் இருப்பார்கள். 

நான் மாற்றிக்கொண்டு பந்தநல்லூருக்குப் போனபோது கூட்டம் போட முடியவில்ûல்.  ரொம்ப நாள் விட்டுப் போய்விட்டது. திரும்பவும் சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தேன்.  திருவல்லிக்கேணி பிராஞ்சில் பணி.  

அசோகமித்திரனுக்கு 82வது வயது கொண்டாட்ட கூட்டம் நடத்த முடிவு செய்தேன்.  அப்போது கூட்டம் நடத்தியே அதிக ஆண்டுகள் ஆகிவிட்டன.  எனக்குப் பெரிய சந்தேகம்.  கூட்டத்திற்கு வருவார்களா என்று.  ஏனென்றால் கூட்டத்தை பாரதியார் இல்லத்தில் வைத்திருந்தேன்.    எனக்கு நடுக்கம்.  கூட்டத்திற்கு யாரும் வராமல் இருந்துவிட்டால் என்ன செய்வது?  அதனால் பேச வருபவர்களை அதிகப்படுத்தி விட வேண்டுமென்று தோன்றியது.  20 பேர்களுக்கு மேல் பேச அழைத்தேன்.  நிச்சயமாக கூட்டத்திற்கு 20 பேர்கள் வந்து விடுவார்கள் என்று எனக்குத் தோன்றியது.

உண்மையில் அன்று அதிகமான பேர்கள் வந்தார்கள்.  கூட்டம் சிறப்பாக நடந்தது.  அதை வீடியோ எடுத்தேன். இன்னும் கூட நான் நடத்திய கூட்டத்தில் அது ஒரு சிறப்பான கூட்டம். நான் இதுவரை 200  300 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  சரி, ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சும்மாதான் நடத:துகிறேன்.  க.நா.சு கூட்டம் நடத்தச் சொன்னதால் நடத்துகிறேன்.

நான் இதுமாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை. நான் பழைய ஏடிஎம் கார்டுகளை என் கணக்கில் த்திருந்தேன். அவற்றை புது கார்டுகளாக மாற்ற வேண்டுமென்று நினைத்தேன்.

30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என் பழைய ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புதுகார்டை வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.

சில தினங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வங்கியிலிருந்து வந்தது. உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வருமென்று. நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை.

இன்று காலை 9.24 மணிக்கு போன் வந்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமில்லையா என்று. ஆமாம் என்று சொன்னேன். அப்படி பேசியது ஒரு பெண்.

உங்கள் பழைய கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றாள். நான் அவசரம் அவசரமாக இரண்டு பழைய கார்டு எண்களைச் சொன்னேன். எனக்கு புது ஏடிஎம் கார்டுகள் வாங்க வேண்டுமென்ற அவசரம். ஒரு கார்டு நவீன விருட்சம் கணக்கு. இன்னொரு கார்டு நானும் சகோதரனும் சேர்ந்த வைத்துள்ள கணக்குக் கார்டு.

உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச் சொல்லுங்கள் என்றாள்.

நீங்கள் யார் இந்தியன் வங்கிதானே என்றேன்

ஆமாம் என்றாள்.

என் செல் போனில் ஒரு செய்தி வந்தது.

அது இதுமாதிரி எழுதப்பட்டிருந்தது.

Rs. 9999.00 spent on POS/Ecom using IB Debit card on 02/07/2019 09.33 at Pay*WWW OLACABS Com Gurgaon from A/c XXX584636.

என்று.

உடனே போன் பேசியவள் அவசரப்பட்டு ஒடிபி எண்ணைக் கேட்டாள். நானும் என்னை ஏமாற்றுகிறாள் என்று புரியாமல் கூறிவிட்டேன். இது மாதிரி இரண்டு முறை நடந்தது.

அதன் பின் தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்னை ஏமாற்றுகிறாள் என்று. நான் உடனே மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கிக்குச் சென்று நான் இதைப் பற்றி வங்கி மேலாளரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

அதற்குள் என் கணக்கிலிருந்து இரண்டு முறை பணம் டெபிட் ஆகிவிட்டது. நான் தாமதமாக சுதாரித்துக்கொண்டதால் ஐந்து முறை அதுமாதிரி பண்ணியிருந்தது தப்பித்தது.

நான், உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்.,

அருணா என்றாள்

என்னவாக இருக்கிறீர்கள் என்றேன்

ஏடிஎம்மில் என்றாள்.

எந்த இடம் என்றேன்.

தலைமை அலுவலகம் என்றாள்.

நான் ஏமாந்து விட்டேன் என்பதை மேற்கு மாம்பல கிளை அலுவலகத்திற்கு வந்தபிறது தெரிந்து கொண்டேன். நல்ல காலம் என்னுடைய இன்னொரு கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை.

நவீன விருட்சம் எணக்கே குருவி சேர்க்கிற மாதிரி சேர்கிற கணக்கு. நான் போடுகிற புத்தகங்களிலிருந்து வருகிற பணத்தை திரும்பவும் புதிய புத்தகங்கள் போட பயன் படுத்துவேன். அந்தக் கணக்கி7ல் உள்ள பணத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதில் புத்தகம் பத்திரிகை நடத்தப் பயன்படுத்துவேன். என் முட்டாள்தனம் நான் ஏமாந்து விட்டேன்.

இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

யாராவது 6204482165 என்ற தொலைபேசியிலிருந்து போன் செய்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

நான் இதோ க்ரைம் ப’ôரஞ்சில் புகார் கொடுக்கப் போகிறேன். இந்தப் பணம் எனக்குக் கிடைக்காது என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் புகார் கொடுக்க உள்ளேன். பழைய கார்டு புது கார்டு குழப்பம் இருக்கிறது. புது கார்டு வேண்டும் என்கிற அவசரத்தால் நான் எமாந்து போனேன். இத்தனைக்கும் நான் வங்கியில் 33 வருடங்கள் பணிபுரிந்தவன்.

என் வங்கியில் என்னுடன் பணி புரிந்தவர்கள் இதை அறிந்தால் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்கள் கிண்டலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

நீங்களும் படிக்கலாம் – 47  

ஆல்பெர் காம்யுவின் அந்நியன்..

அழகியசிங்கர் 

ரொம்ப நாட்கள் கழித்து இந்தப் புத்தகத்தைத் தூசித்தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். 1980 ஆண்டு க்ரியாவில் வாங்கியது.   எல்லாம் மறந்து விட்டது.  ஆனால் கொஞ்சமாக ஞாபகத்தில் அம்மா   முதியோர் இல்லத்தில் இறந்ததை ஒட்டி மெர்சோ என்பவன் ஊருக்குச் செல்வான் என்று படித்திருந்தேன்.

அந்த ஊரில் அம்மாவை சவ அடக்கம் செய்யும் வரை அம்மாவின் இறந்த தோற்றத்தைப் பார்க்க விரும்ப மாட்டான்.  ஏன்? இயல்பாக இருப்பான்.  அம்மா இறந்து விட்டாள் என்று அழ மாட்டான்.  

இப்படி மெர்சோ நாவல் முழுவதும் வருகிறான்.  அவன் காதலி மேரி அவனிடம் கேட்கிறாள்.  தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று. அதற்கு மெர்சோ, திருமணம் செய்துகொள்வது கொள்ளாதது எல்லாமே ஒன்றுதான் என்கிறான்.

வேலை மாற்றமாக பாரிஸில் செல்ல விருப்பமா என்று கேட்கிறார் மெர்சோவின் முதலாளி.   மெர்சோ இதற்குப் பதில் அளிக்கும்போது அவனைப் பொருத்தவரை இப்போது இருக்குமிடத்தில் இருப்பதாகக் கூறுகிறான்.  உண்மையில் இது குறித்து அவனுக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.என்று தெரியப்படுத்துகிறான்.  ஏன்என்றால் இப்போதைய வாழ்க்கையில் எதுவும் மகிழ்ச்சி குறைவு இல்லை என்று நினைக்கிறான்.

மெர்சோ ஒரு அரேபியனை சுட்டு விடுகிறான்.  அவனுக்கு அந்த அரேபியனுக்க நேரிடையாக எந்தப் பகையுமில்லை.  மெர்சோவின் நண்பன் ரேமோனுக்கும் அரேபியனுக்கும்தான் பகைமை.   இதற்குக் காரணம் வைப்பாட்டியாக வைத்திருந்த பெண்ணை ரோமன் துர்த்தி விடுவதால் ஏற்படுகிறது.   அந்த அரேபியன் அவள் சகோதரனுக்கு வேண்டியவன் என்று கதை போகிறது.    

மெர்சோ சுட்டு விடுகிறான்.  இந்த இடத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கிறது.   ‘அதுவே நான் என் துரதிருஷ்டத்தின் வாயிற் கதவில் நான்கு முறை தட்டியதுபோலிருந்தது.’ ஆனால் கொலை செய்துவிட்டோமே என்ற பதைப்பு வெளிப்படவில்லை. அதுவும் தேவையில்லாத கொலை.  தவிர்க்கப்பட வேண்டிய கொலை.

கொலை செய்ததால் கைதாகிறான்.  இந்த நாவலில் இரண்டாவது பாகத்தில் எல்லாம் வருகிறது.  கொலை குற்றவாளி எப்படி தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்கிறான்.  சிறையில் சிகரெட் பிடிக்க முடியாது.  சிகரெட் பிடிக்காமல் தன்னை எப்படிப் பழக்கப்படுத்தி கொள்வது என்று தன்னை மாற்றிக்கொள்கிறான்.

மெர்சோ கடவுளை மறுப்பவன்.  இது அவனுக்கு எதிராக செயல்படுகிறது.  அவன் ஒரு முறை கூட கொடூரமாக கொலை செய்த தன் குற்றத்திற்காக வருத்தப்படவில்லை.  

இந்த நாவலில் முக்கியமான பகுதி பாதிரியாரைச் சந்திப்பது.  

பாதிரியார் அவனைப் பார்த்துப் பேசுகிறார் :”இல்லை அன்பரே, நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன்.  ஆனால் உங்களுக்கு அது தெரியவில்லை.  ஏனெனில் உங்கள் இதயம் இருளில் ஆழ்ந்திருக்கிறது.  நான் உங்களுக்காகப் பிரார்த்திப்பேன்,” என்றார். 

ஆனால் பாதிரியாரை திட்டி அனுப்பி விடுகிறான் மெர்சோ. மெர்சோ யார்?  அவன் ஏன் இதுமாதிரி நடந்து கொள்கிறான்?  அவன் காமுவின் மனசாட்சியா?  இது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது.  

மெர்சோவைப் பொறுத்தவரை மரணத்தண்டனையும் ஒன்றுதான் ஆயுள் தண்டனையும் ஒன்றுதான்.  இந்த நாவலைப் படிக்கும்போது ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும்.  அவ்வளவு நுணுக்கம் நிறைந்த நாவல். மெர்சோ எல்லாவற்றையும் வாங்கிக்கொள்பவனாக இருக்கிறான்.  அவனுக்கென்று எந்த அபிப்பிராயமும் இல்லை.  அம்மா இறந்து போய்விட்டாளென்று அறிந்தும் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாதவன், ஆனால் நாவலின் பல இடங்களில் அம்மாவை ஞாபகப்படுத்திக் கொள்கிறான்.  

பின்னுரையாக வெ ஸ்ரீராமன் அவர்கள் எழுதியதை ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டும். 

நான் ஒரு முறை இந்த நாவலை இப்போது படித்திருக்கிறேன்.  இன்னும் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.  அல்லது எதாவது ஒரு பகுதியைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் படிப்பேன்.  

அந்நியன் – ஆல்பெர் காம்யு – பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ ஸ்ரீராம். – வெளியீட்டாளர் : க்ரியா.

துளி : 56 – சிறுகதையை கொண்டாடுவோம்

அழகியசிங்கர்

கடந்த இரண்டாண்டுகளாக தினமணி சிவசங்கரி போட்டி வைத்து பரிசுக்குரியவார்களுக்கு நேரிடையாக பரிசு வழங்குகிறார்கள்.

சிறுகதைப் போட்டி வைக்கும் எந்தப் பத்திரிகையாவது இதுமாதிரி செயல்படுகிறதா?  இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்று இரண்டாவது காட்சி அரங்கமானது.  பரிசுக்குரியவர்கள் எல்லோரையும் அழைத்து கவிக்கோ அரங்கத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்.   இதை வரவேற்க வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றியது.  உண்மையில் சிறுகதைகளை கொண்டாடுகிறார்கள்.  

ஒரே ஒருவரைத் தவிர பரிசுக்குரியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.  கவிக்கோ அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது.  சிறப்புரை மாலன்.  பாராட்டுரை நீதியரசர் ஆர் மகாதேவன்.   போன ஆண்டு விட கதைகள் எண்ணிக்கை அதிகமாக வந்திருந்தாலும்,  குறிப்பிடும்படியான கதைகள் வரவில்லை என்றார் மாலன். ஆனால் உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். 

தினமணிகதிர் ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது பள்ளி வகுப்பிலிருந்து எல்லாம் கதை சொல்லும் முறை வரவேண்டுமென்றார். 

நீதியரசர் ஆர் மகாதேவன் காஃப்கா, காம்யு, நபக்கோ என்றெல்லாம் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் கதையை உதாரணம் காட்டினார். 

போ.ன ஆண்டு பரிசுப்பெற்ற கதைகளைப் புத்தகமாக வானதி பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.  போன ஆண்டு பரிசுப் பெற்ற எழுத்தாளர்களில் பெரும்பாலோர் இந்த ஆண்டு பரிசுப் பெறவில்லை.