இன்று ஒரு விசித்திரமான கூட்டம்..

01.03.2021

துளி – 175

அழகியசிங்கர்

நான் புத்தகக் காட்சியில் ஸ்டால் போடவில்லை என்றாலும், எனக்கான புத்தகங்கள் விற்காமல் இல்லை.  மிகக் குறைவாக அச்சிடுவதால் மிகக் குறைவாக விற்கின்றன.
அதைப்போல் என்னிடம் புத்தகம் வந்து சேராமலில்லை . எனக்கு வந்து சேர்ந்த புத்தகங்களைப் பற்றி நான் எழுதாமலில்லை.  அது ஒரு தொடர்கதை மாதிரி. 
பலவிதமாகப் புத்தகங்களைப் பற்றித் தெரிவித்து விடுவேன். மேலும் புத்தகங்கள் பற்றி எழுதும் கட்டுரைகளை என் புத்தகத்தில் சேர்த்து விடுவேன். சமீபத்தில் நான் தீவிரமாக இதில் ஈடுபடவில்லை.  ஆனால் ஓரளவுக்குப்’ படித்து எழுதி விடுகிறேன்

.
இன்று ஜீ.பி சத்யா என்ற என் நண்பர் வித்தியாசமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்தினார்.
அவர் ‘தீபாவளிப் பெண்’ என்ற கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார்.  முகங்கள் 2 என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.

புத்தக அறிமுகம் என்ற பெயரில் மேடை என்றில்லாமல் நண்பர்கள் சந்தித்து பரஸ்பரம் உரையாடி புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வை இன்றைக்கு உண்டாக்கினார். 
மாம்பலத்தில், ஏரிக்கரைத் தெருவில் உள்ள தி சான்ட்விச் ஷாப் 2.0 கடையில். மிகக் குறைவான நபர்களே வந்திருந்தோம்.

முதலில் வந்திருந்தவர்களுக்கெல்லாம் தன்னுடைய புதியப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தார்.  பின் சான்ட்விச்சும், ஒரு ஸ்காட்ச் டீயும் வாங்கிக்கொடுத்தார்.  போட்டோ எடுத்துக்கொண்டார். பின் புத்தகத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.  ஒரு நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஹிந்திப்பாட்டும், சில எம்ஜிஆர் பாடல்களும் பாடினார். 

எல்லோரையும் சத்தியா அறிமுகப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பு வினோதமாக இருந்தது.  நான் வீட்டிற்கு வந்தவுடன் தீபாவளிப் பெண் என்ற இத் தொகுப்பில் ஒரு கட்டுரையை எடுத்துப் படித்துப்பார்த்தேன்.
அவருடைய வித்தியாசமான நிகழ்வுகள்தான் இந்தப் புத்தகம்.  இதில் உள்ள எல்லாவற்றையும் சத்தியா ஒரு சிறுகதையாக மாற்றி இருக்கலாம்.  ஏனோ அவர் அவ்வாறு செய்யவில்லை.  சத்யா நகுலனுடைய கதைகளைப் படிக்க வேண்டும்.  இத் தொகுப்பில் உள்ள எல்லாவற்றையும் கதைகளாக எழுதியிருப்பார் நகுலன்.

நோக்கியா 6030 என்ற கட்டுரையைப் படித்தேன்.  வாங்கி வந்த நோக்கியா 6030 எங்காவது தொலைந்து விடப் போகிறது என்று பதைப்புடன் படித்தேன்.  நல்லகாலம் தொலையவில்லை.
தன் அனுபவத்தை துல்லியமாக வர்ணித்துக் கொண்டு போகிறார்.  சறுக்கி விழாத நடை. இன்னும் பல கட்டுரைகளைப் படிக்க வேண்டும்..

அவருடைய கதை ஒன்று நவீன விருட்சம் இதழ் (115-116)ல் வர உள்ளது.  இவர் நடையில் ஒரு விசித்திரம் இருக்கிறது.  ஏதோ நடப்பதுபோல் ஒரு அவசரம் இருந்தாலும் ஒன்றுமே நடக்காததுபோல் முடிந்து விடுகிறது. 

தொடர்ந்து எழுத அவரை வாழ்த்துகிறேன்.          

அகல் மின்னிதழ் வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.140. முகவரியும் தொலைப்பேசி எண்ணும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை

ஸ்டெல்லா புரூஸ÷ம் சில நினைவுகளும்

அழகியசிங்கர்

ஒரு முறை காந்தி சிலை அருகில் நண்பர்கள் அனைவரும் கூடியிருந்தோம். நண்பர்கள் யார் யார் என்றால் ஞானக்கூத்தன், ஆனந்த். ஆர் ராஜகோபலன், ரா.ஸ்ரீனிவாஸன், எஸ். வைத்தியநாதன், இவர்களுடன் நான்.
அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவுடன் எங்களைச் சந்திக்க வந்தார். அது ஒரு மாலைப் பொழுது. ஞாயிற்றுக் கிழமை.
ஹேமாவை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன். என் மனைவி என்றார்.
அதுமாதிரியான அறிமுகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பேசாமலிருந்தோம்.
சிறிது மௌனத்திற்குப் பிறகு, வாழ்த்துத் தெரிவித்தோம்.
ஸ்டெல்லா புரூஸ் திருமணமே செய்துகொள்ளாமலிருந்தார். கிட்டத்தட்ட 50வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். அன்று வந்த அவர் அதன்பின் தொடர்ந்து அவர் எங்களைப் பார்க்க வருவதில்லை.
உண்மையில் ஆதம்பாக்கம் போய்விட்டார். முதன் முதலாக நாங்கள் சந்தித்ததெல்லாம் நண்பர்களுடன்தான். மயிலாப்பூரில் இலக்கிய நண்பர் வைத்தியநாதன் வசித்து வந்தார். நான் எப்போதும் அவர் வீட்டில் அவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்பேன்.ஸ்டெல்லா புரூஸ÷ம் அங்கு வருவார். அப்போது அவர் பிரபல வாரப் பத்திரிகையில் எழுதிப் புகழ் பெற்றிருந்தார். நாங்கள் மூவரும் உற்சாகமாகப் பேசுவோம்.
அப்போது ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் உள்ள பூங்கா லாட்ஜில் ஒரு அறையிலிருந்தார். அவருடைய ஊரான விருதுநகரிலிருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கியிருந்தார். நினைக்கும்போது ஊருக்குப் போவார். அம்மா அப்பாவைப் போய்ப் பார்ப்பார்.
அவருடைய இயற்பெயர் ராம் மோஹன். காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய முதல் சிறுகதை ஜெயகாந்தன் ஆசிரியப் பொறுப்பிலிருந்த ஞானரதத்தில் வெளி வந்திருக்கிறது. கதைகள், தொடர்கதைகள் எழுதுவதற்கு அவர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயர் வைத்துக்கொண்டார். ஏன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டார் என்பதற்கு ஒரு சோகமான சம்பவத்தைக்கூறியிருக்கிறார் . அவர் ஆலந்தூரில் குடியிருந்தபோது ஸ்டெல்லா என்ற அவருடைய தோழி சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.. அந்த கொடுமையைத் தாங்க முடியாத அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அவள் நினைவாக ராம் மோஹன் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய பொழுது போக்கே புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, எழுதுவது. அவ்வளவுதான். திருமணத்திற்கு முன் பூங்கா லாட்ஜில் நிரந்தரமாகக் குடியிருந்தார். “
அங்குப் போயிருக்கிறேன். ஒரு சின்ன அறை. அதில் அவர் வசித்து வந்தார். அவரைப் பார்க்க வருகிற நண்பர்களுடன் எப்போதும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பார்.
மிகச் சிக்கனமாக அவர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஞாயற்று கிழமைகளில் அவருடைய நண்பர்களைச் சந்திப்பது அவருடைய வாடிக்கை.
ஸ்டெல்லா புரூஸ் திருமணம் செய்து கொள்ள விரும்பாத போது அவருடைய தந்தை மக்கள் தலைவர் காமராஜ் மூலம் அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். காமராஜ÷ம் அவருடைய தந்தையாரும் நல்ல நண்பர்கள்.” வேடிக்கை என்னவென்றால் மக்கள் தலைவர் காமராஜரே திருமணமே செய்துகொள்ளாதவர். அவர் தொடர்கதை பிரபல வாரப் பத்திரிகையில் வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது ஹேமா அவருடைய வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஹேமா அவருடைய எழுத்துக்குப் பரம ரசிகை.
அவருடைய திருமணத்திற்குப் பிறகு அவருடைய லாட்ஜ் வாழ்க்கைப் போய்விட்டது. ஆதம்பாக்கத்தில் அவர் தனிக் குடித்தனம் வைத்துக்கொண்டார். கூடவே இருதய நோயாளியான ஹேமாவின் தங்கை பிரேமாவும் அவர்களுடன் வசித்து வந்தார்.
மூவரும் ஒத்த கருத்தை உடையவர்கள். புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது. எழுதுவது. ஹேமா அந்தக் காலத்தில் கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஹேமாவின் தங்கை பிரேமாவும் ஒரு தொடர்கதை பிரபல வார இதழில் எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ‘பிரேமா த்யானேஸ்வரி’ என்ற பெயரில் ‘துளித் துளியாய்”\’ என்ற பெயரில் எழுதிய நாவல் புத்தகமாக வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டில். . அவர்கள் மூவரையும் எழுத்தாளர்கள் குடும்பம் என்று சொல்லலாம். எளிமையான வாழ்க்கை.
அதன்பின் கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் காலனி தெருவில் குடி வந்தார்கள். ஹேமாவின் சகோதரர் வீட்டில் குடி வந்தார்கள். சகோதரி குடும்பத்தினரிடமிருந்து வாடகை எதுவும் வாங்கவில்லை அவர்கள் சகோதரர். அந்த இடம் விஸ்தாரமான இடம். “
நான் ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிற்குப் போகும்போது விருந்து உபசாரம் அபிரதமாய் இருக்கும். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.
இருதய நோயாளியான பிரேமா நோய் முற்றி இறந்து விட்டார். ஹேமாவிற்கு இது பெரிய இடி. இதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார் ஹேமா. ஆழ்ந்த துக்கமோ கவலையோ இருந்தால் கிட்னி பாதிக்கப்படும் என்று என் மருத்துவ நண்பர் கூறிவருகிறார். வெளிப்படுத்தாமல் தங்கை இறந்த துக்கத்தைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஹேமா.இது ஒரு காரணம் அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதற்கு.
ஹேமாவும் சரி, ஸ்டெல்லா புரூஸ÷ம் சரி, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.இராமலிங்கசுவாமியை பூசிப்பவர் ஸ்டெல்லாபுரூஸ். ஹேமாவும், ஹேமாவின் தங்கை பிரேமாவும் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னையின் பக்தர்கள்.
‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற பெயரில் ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தேன். முதலில் ’25 வருடக் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். கட்டுரைத் தொகுப்பு கொண்டு வரும்போது அவர் உயிருடன் இல்லை.
அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றி குருட்டுத் தனமாக நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தார். ‘உடம்பு25.10.1988’ என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருந்தார்.
அதில்
வேட்கையும் இச்சையும் பிதுங்கும் மனிதர்களின் ஊடே காற்று நிறைந்த வயிறாய் உடல் தனியே சென்று கொண்டிருந்தது
அவரே வகுத்துக்கொண்ட ஆன்மிகம்.
‘மரணங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரகங்கள் பழுதுபட்ட பிரச்சினையில் இருந்து மீட்டுக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது. அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டாகளே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன என்று குறிப்பிடுகிறார்
இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று அவர் நம்பினார். அது நடக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட செலவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் அவர் பெரிதாக இடிந்து போய் இருந்தார். வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் அவரிடம் ஏற்படவில்லை.
அவர் பிரபலமான எழுத்தாளராக இருந்தாலும், அவர் மனைவிக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க முடியவில்லை. அவருடைய சேமிப்பெல்லாம் கரைந்து போயிற்று. பிரபல பத்திரிகை நன்கொடை திரட்டிக் கொடுத்தது. அந்தத் தருணத்தில் ஒரு தொகையை என் அப்பா அவருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் ஸ்டெல்லா புரூஸ்.
இது ஆன்மிக அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். இதைத் தெளிவாக அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார்.
எதிர்பார்த்தபடியே ஹேமா ஒருநாள் இறந்து விட்டார். ஹேமா மரணம் 2007 ஜ÷லை மாதம் ஏற்பட்டது. ‘எனக்குச் சாவைப் பற்றி பயம் இல்லை. ஆனால் இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.
நான் சென்னைக்கு தற்காலிக மாற்றல் பெற்று (வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்) வந்தேன். நான் சென்னைக்கு மாற்றல் பெற்று வருவேனென்று தன் ஆன்மிக அனுபவத்தால் ஹேமா கூறியதை முதலில் நான் நம்பவில்லை.
ஒரு நாள் ஸ்டெல்லா புரூஸ பார்க்கப் போயிருந்தேன். எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன. நான் அதிக நாள் இருக்க மாட்டேன் என்று ஸ்டெல்லா புரூஸ் சொன்னபோது நான் திகைத்து விட்டேன்.
அப்போது அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும் உடல் நிலை சரியாகவே இருந்தார். பயப்படும்படி எந்த நோயும் இல்லை. ஹேமா இல்லை என்பதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் எல்லோரிடமும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஹேமாவின் நகைகளை ஒரு நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியில் போட்டுவிட்டார்.
மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலையும் செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் ஒரு குறிப்பும் எழுதிவிட்டுச் சென்றார். ‘ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன’. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்றுதான் சொல்ல முடிகிறது. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் மட்டும்தான் இருந்தோம்.வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஹேமா அவருடைய எழுத்துக்குப் பரம ரசிகை.
அவருடைய திருமணத்திற்குப் பிறகு அவருடைய லாட்ஜ் வாழ்க்கைப் போய்விட்டது. ஆதம்பாக்கத்தில் அவர் தனிக் குடித்தனம் வைத்துக்கொண்டார். கூடவே இருதய நோயாளியான ஹேமாவின் தங்கை பிரேமாவும் அவர்களுடன் வசித்து வந்தார்.
மூவரும் ஒத்த கருத்தை உடையவர்கள். புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது. எழுதுவது. ஹேமா அந்தக் காலத்தில் கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஹேமாவின் தங்கை பிரேமாவும் ஒரு தொடர்கதை பிரபல வார இதழில் எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ‘பிரேமா த்யானேஸ்வரி’ என்ற பெயரில் ‘துளித் துளியாய்”\’ என்ற பெயரில் எழுதிய நாவல் புத்தகமாக வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டில். . அவர்கள் மூவரையும் எழுத்தாளர்கள் குடும்பம் என்று சொல்லலாம். எளிமையான வாழ்க்கை.
அதன்பின் கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் காலனி தெருவில் குடி வந்தார்கள். ஹேமாவின் சகோதரர் வீட்டில் குடி வந்தார்கள். சகோதரி குடும்பத்தினரிடமிருந்து வாடகை எதுவும் வாங்கவில்லை அவர்கள் சகோதரர். அந்த இடம் விஸ்தாரமான இடம். “
நான் ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிற்குப் போகும்போது விருந்து உபசாரம் அபிரதமாய் இருக்கும். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.
இருதய நோயாளியான பிரேமா நோய் முற்றி இறந்து விட்டார். ஹேமாவிற்கு இது பெரிய இடி. இதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார் ஹேமா. ஆழ்ந்த துக்கமோ கவலையோ இருந்தால் கிட்னி பாதிக்கப்படும் என்று என் மருத்துவ நண்பர் கூறிவருகிறார். வெளிப்படுத்தாமல் தங்கை இறந்த துக்கத்தைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஹேமா.இது ஒரு காரணம் அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதற்கு.
ஹேமாவும் சரி, ஸ்டெல்லா புரூஸ÷ம் சரி, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.இராமலிங்கசுவாமியை பூசிப்பவர் ஸ்டெல்லாபுரூஸ். ஹேமாவும், ஹேமாவின் தங்கை பிரேமாவும் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னையின் பக்தர்கள்.
‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற பெயரில் ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தேன். முதலில் ’25 வருடக் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். கட்டுரைத் தொகுப்பு கொண்டு வரும்போது அவர் உயிருடன் இல்லை.
அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றி குருட்டுத் தனமாக நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தார். ‘உடம்பு25.10.1988’ என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருந்தார்.
அதில்
வேட்கையும் இச்சையும் பிதுங்கும் மனிதர்களின் ஊடே காற்று நிறைந்த வயிறாய் உடல் தனியே சென்று கொண்டிருந்தது
அவரே வகுத்துக்கொண்ட ஆன்மிகம்.
‘மரணங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரகங்கள் பழுதுபட்ட பிரச்சினையில் இருந்து மீட்டுக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது. அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டாகளே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன என்று குறிப்பிடுகிறார்
இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று அவர் நம்பினார். அது நடக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட செலவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் அவர் பெரிதாக இடிந்து போய் இருந்தார். வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் அவரிடம் ஏற்படவில்லை.
அவர் பிரபலமான எழுத்தாளராக இருந்தாலும், அவர் மனைவிக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க முடியவில்லை. அவருடைய சேமிப்பெல்லாம் கரைந்து போயிற்று. பிரபல பத்திரிகை நன்கொடை திரட்டிக் கொடுத்தது. அந்தத் தருணத்தில் ஒரு தொகையை என் அப்பா அவருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் ஸ்டெல்லா புரூஸ்.
இது ஆன்மிக அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். இதைத் தெளிவாக அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார்.
எதிர்பார்த்தபடியே ஹேமா ஒருநாள் இறந்து விட்டார். ஹேமா மரணம் 2007 ஜ÷லை மாதம் ஏற்பட்டது. ‘எனக்குச் சாவைப் பற்றி பயம் இல்லை. ஆனால் இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.
நான் சென்னைக்கு தற்காலிக மாற்றல் பெற்று (வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்) வந்தேன். நான் சென்னைக்கு மாற்றல் பெற்று வருவேனென்று தன் ஆன்மிக அனுபவத்தால் ஹேமா கூறியதை முதலில் நான் நம்பவில்லை.
ஒரு நாள் ஸ்டெல்லா புரூஸ பார்க்கப் போயிருந்தேன். எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன. நான் அதிக நாள் இருக்க மாட்டேன் என்று ஸ்டெல்லா புரூஸ் சொன்னபோது நான் திகைத்து விட்டேன்.
அப்போது அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும் உடல் நிலை சரியாகவே இருந்தார். பயப்படும்படி எந்த நோயும் இல்லை. ஹேமா இல்லை என்பதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் எல்லோரிடமும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஹேமாவின் நகைகளை ஒரு நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியில் போட்டுவிட்டார்.
மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலையும் செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் ஒரு குறிப்பும் எழுதிவிட்டுச் சென்றார். ‘ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன’. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்றுதான் சொல்ல முடிகிறது. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் மட்டும்தான் இருந்தோம்.
(மார்ச் (2021) மாதம் அமுதசுரபி இதழில் பிரசுரமான கட்டுரை)

என் கதைப்புத்தகமும் சுஜாதாவும்

27.02.2021

துளி – 173

அழகியசிங்கர்

சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார்.
‘406 சதுர அடிகள்’ என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். அந்த மாதம் கணையாழியில் அந்தப் புத்தகத்தைப்பற்றி எழுதியிருந்தார்.
ஒரு வரி கூட எழுதிவிட்டார். அழகியசிஙகரே கேட்டாரே என்று நான் என் கருத்துகளைச் சொன்னேன் என்று.
என்னடா இது இப்படி எழுதிவிட்டாரே என்று தோன்றியது. சுஜாதாவிடம் கொடுத்தால் நிச்சயம் படித்துவிட்டு எழுதுவார். அதன் மூலம் விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணித்தான் கொடுத்தேன்.
406 சதுர அடிகள் புத்தகத்தில் 406 சதுர அடிகள் என்ற குறுநாவலைச் சிலாகித்து எழுதவில்லை. ஆனால் லாம்பி என்ற சிறுகதையைச் சிலாகித்து எழுதினார். பிப்ரவரி 1998ல் கடைசிப் பக்கத்தில் வந்திருந்தது.
அப்போது அசோகமித்திரன் சுஜாதா எழுதியதைப் படித்து விட்டு ஒரு வார்த்தை சொன்னார். ஏன் நீங்கள் அவரைப் பார்த்துக் கொடுத்தீர்கள் என்று.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 153

அழகியசிங்கர்

வீட்டுக்குள் வீடுகள்

ஆர்.புருஷோத்தமன்

மூலை முடுக்குகளெங்கும்

நூலாம்படை அமைத்து

மௌனமாய் அமர்ந்திருந்தன

சிலந்திகள்

வாசல் சரிவின்

ஓடுகளின் பொந்துகளில்

கிரீச்சிட்டு நுழைந்தன சிட்டுக்குருவிகள்

உள்மண்ணை வெளித்தள்ளி

அங்குமிங்குமாய் எறும்புகள் சில

இன்று புதிதாய்

இருக்கும் இடத்திற்குச்

சொந்தக்காரன் யாரென்று

குழம்பியிருந்த போது
வீட்டுக்கு வரியென்றும்

விளக்குகள் கட்டணமென்றும்

ஒலிபெருக்கியில் சொல்லியபோதுதான்

அறிந்து கொண்டேன்

இருக்கும் வீடு எனதென்று

நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் – ஆர். புருஷோத்தமன் – விடியல் வெளியீடு, 6 கைலாசபுரம், முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045 – பக்: 80 – விலை: ரூ.25 – பதிப்பாண்டு: 2002

40வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 40வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி – 27.02.2021 – சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முறை கவிதையின் பொது தலைப்பாக ம்..ம்.. என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கொடுக்கப்பட்ட தலைப்பில் வாசிக்க முடியாவிட்டால் உங்களுக்கு விருப்பமான தலைப்பில் வாசிக்கலாம்.

வழக்கம்போல் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வாசிக்கலாம். ஒவ்வொரு கவிதையும் 20 வரிகளுக்கு மேல் போகக் கூடாது. ஒருவார் ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும். முதல் சுற்றில். கவிதைவாசித்தப்பிறகு அடுத்ததாக வாசிக்க உள்ள ஒருவர் உங்கள் கவிதையைக் குறித்து அபிப்பிராயம் கூறுவார். (குறைந்த நிமிடங்களில்). இது புதுமையான முயற்சி. எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 40வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: Feb 27, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85019130324?

pwd=ZU9OWmJmeDByOS9zS1BsVTRjKzZvQT09

Meeting ID: 850 1913 0324

Passcode: 067610

ஒரு கதை ஒரு கருத்து

மா. அரங்கநாதனின் பூசலார்

அழகியசிங்கர்

இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.
நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது.
பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும். ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும்.
முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.
23 வயது இளைஞன் முத்துக்கறுப்பன்.
கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டு அவன் ஊருக்கு வருகிறான்.
தாயார் எதுவும் தெரிவிக்கவில்லை. கடைத்தெருவில் மாமனைப் பார்க்கிறான். மாமா வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். மாமன் மீது மரியாதை அதிகம். உறவு முறையாக அவன் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று தோன்றும்.அவன் ஊருக்கு வந்ததே அவர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகத்தான்.
ஆனால் கடைத்தெருவில் மாமாவைப் பார்த்தபோது அவர் பெண் வடிவை வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிக்கப் போகிறேன் என்று குறிப்பிடுகிறார். “இப்ப உனக்கு வேற இடம் பார்க்கணூம்..வடிவுக்கும் வேற இடம் அமைஞ்சிருக்கு..” என்று சாதாரணமாகப் பேசிவிடுகிறார்.
“உனக்கு வேற இடம் பார்க்க வேண்டும்,” என்று கூறும்போது முத்துக்கறுப்பன் அவனுடைய தகப்பனாரை நினைத்துக்கொள்கிறான்.
ஒருமாதம் லீவு முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், அலுவலக நண்பர்களிடம் மன்னிப்பு கோரினான். யாருக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று.
இங்கு முத்துக்கறுப்பன் பொய் சொல்கிறான். தனக்குத் திருமணம் நடந்து விட்டதாக. மனைவியை 3 மாதம் கழித்து அழைத்து வரப்போவதாகவும் கூறுகிறான். இந்தப் பொய் ஏன் கூறுகிறான் என்பது இந்தக் கதையில் ஆச்சரியமாகிறது. உண்மையில் அவன் நாடகமாடுகிறான். மனைவியை அழைத்து வரப்போவதால் தனி வீடு பார்க்க வேண்டுமென்று கூறி தனி வீடு பார்க்கிறான். அங்கு குடிபோகிறான். வீட்டுக்காரர்களிடமும் மனைவியை 3 மாதம் கழித்து அழைத்து வரப்போவதாகக் கூறுகிறான்.
இதைப் பொய்யாக முத்துக்கறுப்பன் நினைக்கவில்லை. இதனால் எந்தக் கவலையோ, பயமோ இல்லாதிருந்தான். அதை அமைதி என்பதைத் தவிர வேறு எப்படிச் சொல்ல முடியும் – அமைதியான ஒருவன் சொல்வது எப்படிப் பொய்யாகிவிட முடியும் என்றெல்லாம் முத்துக்கறுப்பன் குறித்து கதையாசிரியர் குறிப்பிடுகிறார்.
அவன் திருமணம் ஆகி மனைவியை அழைத்துக்கொண்டு வரப்போவதாகப் பொய்க் கூறியவன், அந்த வீட்டில் குடி வந்ததை, நிச்சிந்தையாக – எவர் துணையின்றியும் – மனக் கசப்பற்றும் அவன் தனது இல்லத்தைப் பரிபாலித்துக்கொண்டிருந்தான் என்று கதாசிரியர் வர்ணிக்கிறர்.
சில சமயங்களில் கைலாச நாதர் கோவில் பக்கமாக நடந்து செல்கையில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் உணர்வு முன்பு பஸ் பிரயாணத்தில் ஏற்பட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது என்றும் கூறுகிறார்.
இவையெல்லாம் அமைதியை இழக்காத சூழ்நிலையில் அவனை ஆழ்ந்திருக்கக் கூடும்.
இடையில் அவன் தயார் மறைவுக்காக ஊருக்குச் சென்றான். ஆறுதல் சொன்ன மனிதர்கள் பெரிய மனிதர்களாகத் தோன்றினார்கள். ஊர்ப்பெண்டுகள் தயாரின் கடைசி நாட்களை விவரித்து, மாமன் அவன் தயாரிடம் ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
ஊரிலிருந்து திரும்பி வரும்போது மாமாவைப் பார்க்கிறான். தன் தோளில் போட்டு வளர்த்த தங்கையைப் பற்றி வானத்தைப் பார்த்தபடியே கூறுகிறார். மாமாவைப் பார்க்கும்போது கல்யாணம் நிச்சயமான வடிவையும் பார்க்கிறான். மாமாவிடம் ஐயாயிரம் கேட்கவில்லை.
ஊருக்குத் திரும்பியவுடன் வீட்டுக்கார அம்மா அவனிடம் துக்கம் விசாரிக்கிறாள். அவளிடம் வீடு ஒழுகுவது பற்றிக் கூறுகிறான். சீக்கிரமாகப் பழுதுபார்க்கும்படி கேட்டுக்கொண்டான்.
திடுக்கிட்டு எழுந்தான் முத்துக்கறுப்பன். இரவுகள் எப்போதும் சாதாரணமாக இருந்து விடப் போவதில்லை என்கிறார் கதாசிரியர் இங்கு.
அவன் வடிவு என்று முனகியிருக்கக் கூடும். இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்று குறிப்பிடுகிறார். தவம் கலைந்து விட்டாற்போல் மலைத்தான். தவம் செய்வதின் காரணம் அது கலையும்போதுதான் தெரியும் போலிருக்கிறது என்கிறார்.
“என்ன சார் இன்னும் வீட்டிலிருந்து வரவில்லையா?” என்று கேட்கிறார்கள் அலுவலகத்திலிருப்பவர்கள்.
“அழைத்து வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறதுüü என்கிறான் பதட்டப்படாமல். இங்குத் திரும்பவும் தவம் கலைந்து விடவில்லை என்று குறிப்பிடுகிறார் கதாசிரியர்.
நாள் குறிக்கப்பட்டதுபோல் முத்துக்கறுப்பன் நடமாடினான். அடைமழை பெய்த நாளில் சென்னைக்குப் போய்விட்டு இரவு நேரத்திலேயே திரும்பி வந்து விட்டான்.
வழக்கம்போல் எண்ணெய் குளியல் வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது. தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கும் போகிறான்.
மாசக் கடைசியில் சென்னைக்கு முத்துக்கறுப்பனுக்கு மாற்றல் கிடைக்கிறது. அலுவலக நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தலைகீழாக நின்றாலும் கிடைக்காத மாற்றல் அவனுக்குக் கிடைத்ததைக் கேள்விப்பட்டதும் சிலருக்கு எரிச்சலாக இருந்தது.
அலுவலகத்தில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டான். வீட்டிற்குத் திரும்பியவுடன் அவனைப் பார்க்க மாமா வந்திருந்தார். மாமாவிற்குப் பேச்சுத் தடுமாறியது. அவரிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவன் அமைதியாக இருந்தான். அவர் வராமலிருந்தாலும் அப்படியே இருந்திருப்பான்.
கடைசியில் இந்தக் கதையை முடித்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. வேள்விகள்தான் சிலசமயம் கூடங்களையே அழித்துவிடும். இது அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. இங்குதான் கதாசிரியர் ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஆனால் ஊருக்குப் போவதோ – சென்னைக்குப் போவதோ – மாமாவை ரயிலேற்றி அனுப்புவதோ வீட்டைக்காலி பண்ணுவதோ ஆகிய எல்லாமே சுதந்திரமானவைதான். அற்புதமான சிவம்தான் என்று எண்ணியபோது தவம் கலைந்து விட்டது என்று முடிக்கிறார்.
இந்தக் கதையே மொத்தமே 5 பக்கங்கள்தான். 1986 கணையாழியில் இந்தக் கதை பிரசுரமாகியிருக்கிறது. இந்தக் கதையைப் படிக்கப் படிக்க முத்துக்கறுப்பனின் செயலே வேடிக்கையாக இருக்கிறது.
மாமா மீது அவன் அன்பு கடைசி வரை இருக்கிறது. அம்மாவை ஏமாற்றி ரூ.5000த்தை வாங்கிய மாமாவிடம் அவன் கடைசி வரை கேட்கவில்லை. அவருடைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத்தான் அவன் ஊருக்கு வந்தான். வேறு யாருக்கோ அவர் நிச்சயம் செய்து விட்டார். அதைப் பற்றியும் அவன் வருந்தவில்லை. அலுவலகத்தில் தனக்குத் திருமணம் நடந்ததுபோலவே சொல்கிறான். தனிவீடு பார்த்துத் தங்குகிறான் எதைப்பற்றியும் அவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.
தவ வாழ்க்கையில் உள்ள ஒருவர்தான் இப்படி வாழ முடியும் என்று பூசலார் கதை குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கிறான். திருமணம் நடக்காததைத் திருமணம் ஆனதாகச் சொல்வதையும் அதனால் பதட்டமடையாமல் இருப்பதையும் இந்தக் கதை விவரிக்கிறது. மா. அரங்கநாதனின் சிறப்பாகக் கூறப்பட வேண்டிய கதை இது. இந்தக் கதை எல்லாவற்றையும் அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற இருத்தலியல் தத்துவத்தைக் கூறுகிற கதையா?
(திண்ணை இணைய இதழ் 21.02.2021 அன்று வந்துள்ளது)

39வது விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 39வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 20.02.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   20க்கும் மேற்பட்ட கவிஞர்கள் சிறப்பாக கவிதை வாசித்தார்கள்.
கவிதையை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து கவிஞர் தமிழ்மணவாளன் வாசித்துக் காட்டினார். 
அதன் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

உஷாதீபனின் ‘உறங்காக் கடல்’

21.02.2021

துளி – 172

அழகியசிங்கர்

இன்று மதியம்தான் வந்தோம்.  பெண்வீட்டிலிருந்து கிளம்பி.  பெண் வீடு மடிப்பாக்கத்திலிருக்கிறது.  மடிப்பாக்கத்தில் சில நண்பர்கள்/உறவினர்கள் இருக்கிறார்கள்.  உஷாதீபன் பக்கத்திலிருக்கிறார்.  இன்று அங்கிருந்து  கிளம்பியபோது உஷாதீபன் வீட்டிற்குச் சென்று விடைபெற்றுக் கொண்டேன்.  மாம்பலம் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு பெரிய பெருமூச்சு என்னை விட்டு இன்னும் அகலவில்லை.  என்றுடைய இரண்டு புதியப் புத்தகங்களை அவருக்குக் கொடுத்தேன்.  அவர் தன்னுடைய  ‘உறங்காக் கடல்’  என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.  
எனக்குத் தெரிந்து முகநூலில்  சிலர் புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.  அதில் உஷாதீபனும் ஒருவர். அவர் கொடுத்த ‘உறங்காக் கடல்’  புத்தகமும் அப்படித்தான்.
15 எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார்.
ஒவ்வொரு கட்டுரையும் இரண்டரை அல்லது மூன்று பக்கங்களில் முடித்து விடுகிறது.  
இனிமேல்தான் படிக்க வேண்டும்.  புரட்டிப் பார்த்தேனே தவிர இன்னும் படிக்கவில்லை.
நான் அவருக்குக் கொடுத்த ஒரு கதை ஒரு கருத்து என்ற என் புத்தகத்தில் நானும் கதைகளைக் குறிப்பிட்டு கருத்துக்கள் வழங்கியிருக்கிறேன். இன்னொரு புத்தகம் துளிகள் 2
நிறையா சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று  எழுதிக்கொண்டிருக்கும் உஷாதீபன் தன்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துகள்.       

38 வது கவியரங்கம் – காதலர் தினத்தை முன்னிட்டு

அழகியசிங்கர்.

காதல் கவிதைகள்
விருட்சம் கவிதைகள் வாசிக்கும் கூட்டம் சூம் வழியாக   13.02.2021அன்று 6.30 மணிக்கு நடந்துள்ளது. அதன் ஒளிபரப்பு.-

ReplyForward
https://www.youtube.com/watch?v=l93ONuwaC-s

சூம் மூலமாக விருட்சம்

பெருமையுடன் வழங்கும் 37வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 06.02.2021 – சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஈற்றடியை வைத்து கவிதை புனைய உள்ளார்கள். மரபுக் கவிதை எழுதுபவர்களும் புதுக்கவிதை எழுதுபவர்களும். நீங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/85195193964…Meeting ID: 851 9519 3964Passcode: 880833