அழகியசிங்கர்
வண்ணதாசன் கதை ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது. குற்றால அருவியில் குளிக்க வருபவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள். நான் அங்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். தலையில் எண்ணெய்யைத் தடவி படபடவென்று அடிப்பார்கள். அது அற்புதமான அனுபவம்.
அதுமாதிரி எண்ணெய்யைத் தலையில் அடித்து ஆயுள் மசாஜ் செய்துகொள்ள வருபவர் கேட்பார். என்றாவது ஒரு நாள் இதுமாதிரி ஆயுள் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளித்ததுண்டா என்று.
உடனே அடுத்த நிமிடம் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கக் கிளம்பி விடுவான். கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தில் இந்தக் கதை இருக்கிறது என்று நினைக்கிறேன். கதை பெயர் ஞாபகமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
மாதம் இரண்டு முறை நடத்தும் கதைஞர்கள் கூட்டத்தில் இந்த முறை வண்ணதாசன் கதைகளைப் பற்றிப் பேசலாமென்று நினைக்கிறேன்.
பிறந்த தினமான அவருக்கு வாழ்த்துகள்.