நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது?

துளி – 215

அழகியசிங்கர்

கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம்  117வது இதழ் கொண்டு வந்து விட்டேன்.


ஏன் என்னால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை என்ற கேள்வியை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இதழ் கொண்டு வந்த பிறகு.
கேட்டுக்கொண்டே இதழையும் கொண்டு வந்து விடுகிறேன்.  இன்று வயது முதிந்தவர் நாள். நேற்று அச்சடித்து வீட்டிற்கு வந்தவுடன், நான் வீட்டில் இல்லை.  பெண் வீட்டிலிருந்தேன்.  பக்கத்து வீட்டில் உள்ள நண்பர் வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்.


அடுத்தநாள் மாலை நேரத்தில்தான் நான் பன்டிலைப் பிரித்து நவீன விருட்சம் இதழைப் பார்த்தேன். ஆச்சரியம் கொண்டேன். 


இதைக் கொண்டு வருவதற்கா இப்படி பாடாய் என்னையே படுத்திக்கொண்டிருந்தேன் என்ற கேள்வி என்னுள் கேட்டு அடங்கியது.


ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது ஒரு பர்சனாலிட்டியைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.


இந்த இதழில் கட்டுரைகளை அதிகம் தரவேண்டுமென்று விரும்பினேன்.  அப்படியே செய்து முடிக்க முடிந்தது. 


இந்த இதழில் வெளிவந்தவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


1.கேள்விகள் – பதில்கள் 

2.ஷம்பாலா நாவலில் என்ன அரசியல் இருக்கிறது-தமிழவன்

3.தர்மேஸ்வரி தேவி பருனய் மொ.பெ. அழகியசிங்கர்  

4.க.நா.சு என்கிற ஓர் இலக்கிய சகாப்தம்        -இந்திரா பார்த்தசாரதி   

5.லாவண்யா சத்தியநாதன் கவிதை 

6.கவிதையும் ரசனையும் – கட்டுரை – அழகியசிங்கர்

7.கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் – கட்டுரை – ப,சகதேவன்

8.நம்பிக்கை – சிறுகதை – கௌரிஷங்கர்

9.மொழிபெயர்ப்பு கவிதை – மரு.ஜெயலக்ஷ்மி     

10. தனது – சிறுகதை – இந்திர நீலன் சுரேஷ்

11.நானில்லாத வீடு – கவிதை – அதங்கோடு அனிஷ்குமார்

12.பேயோன் கவிதைகள் 

13.மீட்சி – சிறுகதை – பிரபு மயிலாடுதுறை                   

 14.பொம்மைப் பெண் – குறுங்கதை – முபீன் சாதிகா  

15.ஒரு நொடிக்கதைகள் 

16.நான் அவரில்லை – மைக்ரோ கதை – பெருந்தேவி 

17.கோ பூஜை – சிறுகதை – மீ.விஸ்வநாதன்

18.ஹைக்கூ/குறும்  கவிதைகள் – ந.பானுமதி 

19.நிம்மாண்டு நாயக்கரும் பொய்யாளி நாயக்கரும் – கட்டுரை

20.பூ – கவிதை – பி.ஆர் கிரிஜா

21.பதினாறு சக்கரம் – கவிதை – ப.சகதேவன்

21.எட்டிப்பார்க்கக் கூடாது – அ.க.- அழகியசிங்கர்

22.உரையாடல்

23.தெரு நண்பர் – கவிதை – அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன