அழகியசிங்கர்

சமீபத்தில் நடந்த 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். ‘நினைவுக்கு வராத காரணங்கள்’ என்ற ‘நவீன்’ புத்தகம்தான் அது.
உயிர்மை பதிப்பகத்தால் அச்சடிக்கப்பட்ட இப் புத்தகம் மிக அருமையாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கையடக்கமாக உள்ளது இந்தப் புத்தகம். 54 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.40 தான். மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன்.
‘மறைக்க முடியாத பொய்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
இதைத்தான் 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். இதிலிருந்து ஒரு கவிதையை அளிக்கிறேன்.
டிக்கெட்
வரவேண்டாம் என
என்னை நீ பணித்த
சில நிமிடங்களுக்கு முன் தான்
டிக்கெட் உயிர்பெற்றது
தனதுடலில்அச்சிடப்பட்டிருந்த
திகதியையும் நேரத்தையும்
ஒரு முறை உரக்கச் சொன்னது
தனது பயணம் பற்றிய
அவசியம் குறித்தும்
புலன்களின் வேட்கை பற்றியும்
அது ஓயாமல் பிதற்றத் தொடங்கியது
நமது இடைவெளியை
தனது மெலிந்த மேனியால்
இணைக்க முடியும் எனவும்
உன்னுள் உடைந்த சில பகுதிகளை
ஒட்ட முடியும் எனவும்
தீர்க்கமாகச் சொன்னது
நான் அதனிடம்
உன் ஊரில் நடக்கும்
மூன்று அதிசயம் பற்றி கூறினேன் :
1. வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி
2. மலர்கள் மீண்டும் மொட்டுகளாவது பற்றி
3. ஓர் அன்பு சிதைவது பற்றி
டிக்கெட் சிரித்தபடி
தான் உயிர்பெற்றதைவிட
1Chandramouli Azhagiyasingar