மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 154

அழகியசிங்கர்  

154)  மெய்ஞானம்

அசித்தின்


 
என் குரலை நீ கேட்டதை

உன் பதிவிலிருந்து  அறிகிறேன்


உன் பதிவிலிருந்து  அறிகிறேன்

நீ கேட்டது என் குரலையே என்று


நீ அறிவாயா

காதால் கேட்கும்

ஒலிகள்  ஒருபோதும்

எதையும் உரைப்பதில்லை

ஒற்றிய அலைக்கற்றையே

அதன் பொருள் உணர்த்தும்

காணும் கண்களுக்கும்

காட்சிகள் வெறும் ஒளிக்கதிர்களே
சுவைப்பதும் சுவாசிப்பதும் ஸ்பரிசிப்பதும்…..
ஐம்புலன்களின்

ஆதார புலன் மனமென்றறியும் வரை

விஞ்ஞானம் அஞ்ஞானமே

 நன்றி : நிறமற்றவனின் நிறம் – ஏ.ஏஸ் நடராஜன் – கட்டுரையும், கவிதைகளும் – ஞானக்கேணி, சாய் கிருபா, 93/337 லட்சுமணசாமி சாலை, கே.கே.நகர், சென்னை600 078

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன