என் ஞாபகத்திலிருந்து பெ.சு மணி..

27.04.2021
துளி – 191



அழகியசிங்கர்


நாங்களிருந்த எதிர் தெருவில்தான் பெ.சு.மணியின் வீடு.  பெரும்பாலும் தெருவில்தான் அவரைச் சந்திப்பேன். 


இன்று மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது.  முகநூலில் 
அவர் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய சென்னை வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது.  அவர் மனைவி இறந்தவுடன் அவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது.  அவருடைய மூத்தப் பெண் தில்லியிலும், இரண்டாவது பெண் பெங்களூரில் வசிக்கிறார்கள் .

இவர் தனியாக இருக்கிறேன் என்று சென்னையில் இருந்தார்.  அவர்களுக்கு இவரைத் தனியாக இங்கு விட விருப்பமில்லை.


பல மாதங்கள் இவர் சென்னையிலும், மற்ற இடங்களிலும் வசித்து வந்தார்.
சென்னையில் இருக்கும்போது அவருக்கு மனைவியின் நினைவுதான்.  அவருடைய ஆசை எப்படியாவது 100 புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது.

நான் அவருக்காக அவருடைய மூதாதையர் கொண்டு வந்த சம்ஸ்கிரதப் புத்தகம் கொண்டு வந்தேன்.  அது சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார்.  அந்தப் புத்தகம் அச்சானதும் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை.
நானும் பெ.சு மணியும் லா.சு.ரங்கராஜனைப் பார்க்கப் போயிருந்தோம்.  இது மறக்க முடியாத நிகழ்ச்சி.


பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பலரை நான் பேட்டி எடுத்தேன்.  பெ.சு மணியையும் பேட்டி எடுத்தேன்.


அவர் மறைந்த இந்த நாளில் திரும்பவும் இங்கு வெளியிடுகிறேன்.     

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன