சுமை கால் பணம்…சுமை கூலி முக்கால் பணம்


துளி – 180

அழகியசிங்கர்

என் விஷயத்தில் இப்படித்தான் நடந்து விட்டது.  நவீன விருட்சம் 115-116 இதழ் 106 பக்கங்கள்.  அதன் எடை 136 கிராம்.


வந்தது வம்பு.  ஒரு இதழை ஒருவருக்கு அனுப்ப ரூ.9 ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.

நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அதுவும் 100 கிராமிற்குள் இருந்ததால். சனிக்கிழமை  தபால் அலுவலகத்தில் உள்ள அதிகாரி போனில் கூப்பிட்டுப் பேசினார்.                 “உங்கள் பத்திரிகை அனுப்புவதற்கு ரூ.9க்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டு”மென்றார்.  பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். 

இந்தப் புத்தகத்தின் எடை100 கிராமிற்குள் இருந்திருந்தால் ரூ.4 தபால் தலை ஒட்டியிருக்கலாம்.  இன்னும் சில பக்கங்களைக் குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் தயாரிப்பு விலையையும் குறைத்திருக்கலாம்.


விளம்பரமில்லாமல் ஒரு பத்திரிகையைக் கொண்டு வரும்போது கட்டாயம் 100 கிராமிற்குள் பக்கங்கள் குறைவாகத்தான் திட்டமிட வேண்டும்.


116 பக்கங்கள் உள்ள புத்தகமாகக் கொண்டு வந்தால் கட்டாயம் 125 ரூபாய்க்குப் புத்தகம் விலை வைத்திருக்க வேண்டும்.  நான் இதன் விலையை ரூ.50க்கு மேல் உயர்த்தவில்லை. 
அதனால்தான் சுமை கால் பணம் என்றால்…சுமை கூலி முக்கால் பணம் ஆகிவிட்டது.   ஒரு காலத்தில் அட்டையில்லாமல் விருட்சம் அம்மணப் பத்திரிகையாக வந்து கொண்டிருந்தது.  திரும்பவும் அந்த நிலைக்கே போக வேண்டும்  போலிருக்கிறது. தெளிவாக இன்னும் முடிவு எடுக்க முடியவில்லை. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன