அழகியசிங்கர்
ஒரு முறை காந்தி சிலை அருகில் நண்பர்கள் அனைவரும் கூடியிருந்தோம். நண்பர்கள் யார் யார் என்றால் ஞானக்கூத்தன், ஆனந்த். ஆர் ராஜகோபலன், ரா.ஸ்ரீனிவாஸன், எஸ். வைத்தியநாதன், இவர்களுடன் நான்.
அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவுடன் எங்களைச் சந்திக்க வந்தார். அது ஒரு மாலைப் பொழுது. ஞாயிற்றுக் கிழமை.
ஹேமாவை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன். என் மனைவி என்றார்.
அதுமாதிரியான அறிமுகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பேசாமலிருந்தோம்.
சிறிது மௌனத்திற்குப் பிறகு, வாழ்த்துத் தெரிவித்தோம்.
ஸ்டெல்லா புரூஸ் திருமணமே செய்துகொள்ளாமலிருந்தார். கிட்டத்தட்ட 50வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். அன்று வந்த அவர் அதன்பின் தொடர்ந்து அவர் எங்களைப் பார்க்க வருவதில்லை.
உண்மையில் ஆதம்பாக்கம் போய்விட்டார். முதன் முதலாக நாங்கள் சந்தித்ததெல்லாம் நண்பர்களுடன்தான். மயிலாப்பூரில் இலக்கிய நண்பர் வைத்தியநாதன் வசித்து வந்தார். நான் எப்போதும் அவர் வீட்டில் அவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்பேன்.ஸ்டெல்லா புரூஸ÷ம் அங்கு வருவார். அப்போது அவர் பிரபல வாரப் பத்திரிகையில் எழுதிப் புகழ் பெற்றிருந்தார். நாங்கள் மூவரும் உற்சாகமாகப் பேசுவோம்.
அப்போது ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் உள்ள பூங்கா லாட்ஜில் ஒரு அறையிலிருந்தார். அவருடைய ஊரான விருதுநகரிலிருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கியிருந்தார். நினைக்கும்போது ஊருக்குப் போவார். அம்மா அப்பாவைப் போய்ப் பார்ப்பார்.
அவருடைய இயற்பெயர் ராம் மோஹன். காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய முதல் சிறுகதை ஜெயகாந்தன் ஆசிரியப் பொறுப்பிலிருந்த ஞானரதத்தில் வெளி வந்திருக்கிறது. கதைகள், தொடர்கதைகள் எழுதுவதற்கு அவர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயர் வைத்துக்கொண்டார். ஏன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டார் என்பதற்கு ஒரு சோகமான சம்பவத்தைக்கூறியிருக்கிறார் . அவர் ஆலந்தூரில் குடியிருந்தபோது ஸ்டெல்லா என்ற அவருடைய தோழி சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.. அந்த கொடுமையைத் தாங்க முடியாத அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அவள் நினைவாக ராம் மோஹன் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய பொழுது போக்கே புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, எழுதுவது. அவ்வளவுதான். திருமணத்திற்கு முன் பூங்கா லாட்ஜில் நிரந்தரமாகக் குடியிருந்தார். “
அங்குப் போயிருக்கிறேன். ஒரு சின்ன அறை. அதில் அவர் வசித்து வந்தார். அவரைப் பார்க்க வருகிற நண்பர்களுடன் எப்போதும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பார்.
மிகச் சிக்கனமாக அவர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஞாயற்று கிழமைகளில் அவருடைய நண்பர்களைச் சந்திப்பது அவருடைய வாடிக்கை.
ஸ்டெல்லா புரூஸ் திருமணம் செய்து கொள்ள விரும்பாத போது அவருடைய தந்தை மக்கள் தலைவர் காமராஜ் மூலம் அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். காமராஜ÷ம் அவருடைய தந்தையாரும் நல்ல நண்பர்கள்.” வேடிக்கை என்னவென்றால் மக்கள் தலைவர் காமராஜரே திருமணமே செய்துகொள்ளாதவர். அவர் தொடர்கதை பிரபல வாரப் பத்திரிகையில் வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது ஹேமா அவருடைய வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஹேமா அவருடைய எழுத்துக்குப் பரம ரசிகை.
அவருடைய திருமணத்திற்குப் பிறகு அவருடைய லாட்ஜ் வாழ்க்கைப் போய்விட்டது. ஆதம்பாக்கத்தில் அவர் தனிக் குடித்தனம் வைத்துக்கொண்டார். கூடவே இருதய நோயாளியான ஹேமாவின் தங்கை பிரேமாவும் அவர்களுடன் வசித்து வந்தார்.
மூவரும் ஒத்த கருத்தை உடையவர்கள். புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது. எழுதுவது. ஹேமா அந்தக் காலத்தில் கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஹேமாவின் தங்கை பிரேமாவும் ஒரு தொடர்கதை பிரபல வார இதழில் எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ‘பிரேமா த்யானேஸ்வரி’ என்ற பெயரில் ‘துளித் துளியாய்”\’ என்ற பெயரில் எழுதிய நாவல் புத்தகமாக வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டில். . அவர்கள் மூவரையும் எழுத்தாளர்கள் குடும்பம் என்று சொல்லலாம். எளிமையான வாழ்க்கை.
அதன்பின் கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் காலனி தெருவில் குடி வந்தார்கள். ஹேமாவின் சகோதரர் வீட்டில் குடி வந்தார்கள். சகோதரி குடும்பத்தினரிடமிருந்து வாடகை எதுவும் வாங்கவில்லை அவர்கள் சகோதரர். அந்த இடம் விஸ்தாரமான இடம். “
நான் ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிற்குப் போகும்போது விருந்து உபசாரம் அபிரதமாய் இருக்கும். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.
இருதய நோயாளியான பிரேமா நோய் முற்றி இறந்து விட்டார். ஹேமாவிற்கு இது பெரிய இடி. இதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார் ஹேமா. ஆழ்ந்த துக்கமோ கவலையோ இருந்தால் கிட்னி பாதிக்கப்படும் என்று என் மருத்துவ நண்பர் கூறிவருகிறார். வெளிப்படுத்தாமல் தங்கை இறந்த துக்கத்தைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஹேமா.இது ஒரு காரணம் அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதற்கு.
ஹேமாவும் சரி, ஸ்டெல்லா புரூஸ÷ம் சரி, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.இராமலிங்கசுவாமியை பூசிப்பவர் ஸ்டெல்லாபுரூஸ். ஹேமாவும், ஹேமாவின் தங்கை பிரேமாவும் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னையின் பக்தர்கள்.
‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற பெயரில் ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தேன். முதலில் ’25 வருடக் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். கட்டுரைத் தொகுப்பு கொண்டு வரும்போது அவர் உயிருடன் இல்லை.
அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றி குருட்டுத் தனமாக நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தார். ‘உடம்பு25.10.1988’ என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருந்தார்.
அதில்
வேட்கையும் இச்சையும் பிதுங்கும் மனிதர்களின் ஊடே காற்று நிறைந்த வயிறாய் உடல் தனியே சென்று கொண்டிருந்தது
அவரே வகுத்துக்கொண்ட ஆன்மிகம்.
‘மரணங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரகங்கள் பழுதுபட்ட பிரச்சினையில் இருந்து மீட்டுக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது. அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டாகளே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன என்று குறிப்பிடுகிறார்
இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று அவர் நம்பினார். அது நடக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட செலவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் அவர் பெரிதாக இடிந்து போய் இருந்தார். வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் அவரிடம் ஏற்படவில்லை.
அவர் பிரபலமான எழுத்தாளராக இருந்தாலும், அவர் மனைவிக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க முடியவில்லை. அவருடைய சேமிப்பெல்லாம் கரைந்து போயிற்று. பிரபல பத்திரிகை நன்கொடை திரட்டிக் கொடுத்தது. அந்தத் தருணத்தில் ஒரு தொகையை என் அப்பா அவருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் ஸ்டெல்லா புரூஸ்.
இது ஆன்மிக அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். இதைத் தெளிவாக அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார்.
எதிர்பார்த்தபடியே ஹேமா ஒருநாள் இறந்து விட்டார். ஹேமா மரணம் 2007 ஜ÷லை மாதம் ஏற்பட்டது. ‘எனக்குச் சாவைப் பற்றி பயம் இல்லை. ஆனால் இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.
நான் சென்னைக்கு தற்காலிக மாற்றல் பெற்று (வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்) வந்தேன். நான் சென்னைக்கு மாற்றல் பெற்று வருவேனென்று தன் ஆன்மிக அனுபவத்தால் ஹேமா கூறியதை முதலில் நான் நம்பவில்லை.
ஒரு நாள் ஸ்டெல்லா புரூஸ பார்க்கப் போயிருந்தேன். எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன. நான் அதிக நாள் இருக்க மாட்டேன் என்று ஸ்டெல்லா புரூஸ் சொன்னபோது நான் திகைத்து விட்டேன்.
அப்போது அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும் உடல் நிலை சரியாகவே இருந்தார். பயப்படும்படி எந்த நோயும் இல்லை. ஹேமா இல்லை என்பதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் எல்லோரிடமும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஹேமாவின் நகைகளை ஒரு நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியில் போட்டுவிட்டார்.
மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலையும் செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் ஒரு குறிப்பும் எழுதிவிட்டுச் சென்றார். ‘ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன’. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்றுதான் சொல்ல முடிகிறது. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் மட்டும்தான் இருந்தோம்.வந்தபோது ஹேமாவின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஹேமா அவருடைய எழுத்துக்குப் பரம ரசிகை.
அவருடைய திருமணத்திற்குப் பிறகு அவருடைய லாட்ஜ் வாழ்க்கைப் போய்விட்டது. ஆதம்பாக்கத்தில் அவர் தனிக் குடித்தனம் வைத்துக்கொண்டார். கூடவே இருதய நோயாளியான ஹேமாவின் தங்கை பிரேமாவும் அவர்களுடன் வசித்து வந்தார்.
மூவரும் ஒத்த கருத்தை உடையவர்கள். புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது. எழுதுவது. ஹேமா அந்தக் காலத்தில் கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஹேமாவின் தங்கை பிரேமாவும் ஒரு தொடர்கதை பிரபல வார இதழில் எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ‘பிரேமா த்யானேஸ்வரி’ என்ற பெயரில் ‘துளித் துளியாய்”\’ என்ற பெயரில் எழுதிய நாவல் புத்தகமாக வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டில். . அவர்கள் மூவரையும் எழுத்தாளர்கள் குடும்பம் என்று சொல்லலாம். எளிமையான வாழ்க்கை.
அதன்பின் கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் காலனி தெருவில் குடி வந்தார்கள். ஹேமாவின் சகோதரர் வீட்டில் குடி வந்தார்கள். சகோதரி குடும்பத்தினரிடமிருந்து வாடகை எதுவும் வாங்கவில்லை அவர்கள் சகோதரர். அந்த இடம் விஸ்தாரமான இடம். “
நான் ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிற்குப் போகும்போது விருந்து உபசாரம் அபிரதமாய் இருக்கும். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.
இருதய நோயாளியான பிரேமா நோய் முற்றி இறந்து விட்டார். ஹேமாவிற்கு இது பெரிய இடி. இதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார் ஹேமா. ஆழ்ந்த துக்கமோ கவலையோ இருந்தால் கிட்னி பாதிக்கப்படும் என்று என் மருத்துவ நண்பர் கூறிவருகிறார். வெளிப்படுத்தாமல் தங்கை இறந்த துக்கத்தைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஹேமா.இது ஒரு காரணம் அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதற்கு.
ஹேமாவும் சரி, ஸ்டெல்லா புரூஸ÷ம் சரி, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.இராமலிங்கசுவாமியை பூசிப்பவர் ஸ்டெல்லாபுரூஸ். ஹேமாவும், ஹேமாவின் தங்கை பிரேமாவும் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னையின் பக்தர்கள்.
‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற பெயரில் ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தேன். முதலில் ’25 வருடக் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். கட்டுரைத் தொகுப்பு கொண்டு வரும்போது அவர் உயிருடன் இல்லை.
அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றி குருட்டுத் தனமாக நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தார். ‘உடம்பு25.10.1988’ என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருந்தார்.
அதில்
வேட்கையும் இச்சையும் பிதுங்கும் மனிதர்களின் ஊடே காற்று நிறைந்த வயிறாய் உடல் தனியே சென்று கொண்டிருந்தது
அவரே வகுத்துக்கொண்ட ஆன்மிகம்.
‘மரணங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரகங்கள் பழுதுபட்ட பிரச்சினையில் இருந்து மீட்டுக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது. அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டாகளே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன என்று குறிப்பிடுகிறார்
இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று அவர் நம்பினார். அது நடக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட செலவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் அவர் பெரிதாக இடிந்து போய் இருந்தார். வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் அவரிடம் ஏற்படவில்லை.
அவர் பிரபலமான எழுத்தாளராக இருந்தாலும், அவர் மனைவிக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க முடியவில்லை. அவருடைய சேமிப்பெல்லாம் கரைந்து போயிற்று. பிரபல பத்திரிகை நன்கொடை திரட்டிக் கொடுத்தது. அந்தத் தருணத்தில் ஒரு தொகையை என் அப்பா அவருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் ஸ்டெல்லா புரூஸ்.
இது ஆன்மிக அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். இதைத் தெளிவாக அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார்.
எதிர்பார்த்தபடியே ஹேமா ஒருநாள் இறந்து விட்டார். ஹேமா மரணம் 2007 ஜ÷லை மாதம் ஏற்பட்டது. ‘எனக்குச் சாவைப் பற்றி பயம் இல்லை. ஆனால் இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.
நான் சென்னைக்கு தற்காலிக மாற்றல் பெற்று (வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்) வந்தேன். நான் சென்னைக்கு மாற்றல் பெற்று வருவேனென்று தன் ஆன்மிக அனுபவத்தால் ஹேமா கூறியதை முதலில் நான் நம்பவில்லை.
ஒரு நாள் ஸ்டெல்லா புரூஸ பார்க்கப் போயிருந்தேன். எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன. நான் அதிக நாள் இருக்க மாட்டேன் என்று ஸ்டெல்லா புரூஸ் சொன்னபோது நான் திகைத்து விட்டேன்.
அப்போது அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும் உடல் நிலை சரியாகவே இருந்தார். பயப்படும்படி எந்த நோயும் இல்லை. ஹேமா இல்லை என்பதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் எல்லோரிடமும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஹேமாவின் நகைகளை ஒரு நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியில் போட்டுவிட்டார்.
மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலையும் செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் ஒரு குறிப்பும் எழுதிவிட்டுச் சென்றார். ‘ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன’. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்றுதான் சொல்ல முடிகிறது. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் மட்டும்தான் இருந்தோம்.
(மார்ச் (2021) மாதம் அமுதசுரபி இதழில் பிரசுரமான கட்டுரை)