மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 153


அழகியசிங்கர்


வீட்டுக்குள் வீடுகள்

ஆர்.புருஷோத்தமன்


மூலை முடுக்குகளெங்கும்

நூலாம்படை அமைத்து

மௌனமாய் அமர்ந்திருந்தன

சிலந்திகள்


வாசல் சரிவின்

ஓடுகளின் பொந்துகளில்

கிரீச்சிட்டு நுழைந்தன சிட்டுக்குருவிகள்


உள்மண்ணை வெளித்தள்ளி

அங்குமிங்குமாய் எறும்புகள் சில

இன்று புதிதாய்


இருக்கும் இடத்திற்குச்

சொந்தக்காரன் யாரென்று

குழம்பியிருந்த போது
வீட்டுக்கு வரியென்றும்

விளக்குகள் கட்டணமென்றும்

ஒலிபெருக்கியில் சொல்லியபோதுதான்

அறிந்து கொண்டேன்


இருக்கும் வீடு எனதென்று


நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் – ஆர். புருஷோத்தமன் – விடியல் வெளியீடு, 6 கைலாசபுரம், முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045 – பக்: 80 – விலை: ரூ.25 – பதிப்பாண்டு: 2002

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன