30. 18.12.2020
அழகியசிங்கர்
நாளை (வெள்ளிக்கிழமை – 18.12.2020) மாலை 6.30 வழக்கமாக நடைபெறப்போகிற விருட்சம் சூம் மூலமாக நடைபெற உள்ள 30வது கவிதை வாசிப்பு கூட்டம்.
20 நிமிடங்கள் கவிஞர் அ.கார்த்திகேயன் அவர்கள் ஜென் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார். அதன்பின் கவிதை வாசிப்பு கூட்டம் வழக்கம்போல் நடைபெற உள்ளது.
எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும். ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது.
தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். உங்கள் கவிதை மட்டுமல்ல. மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம். ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Meeting ID : 884 5094 1418
Passcode: 167180