அழகியசிங்கர்
04.12.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 28வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்.
கவிதைகள் வாசித்துச் சிறப்புச் செய்யும்படி.
எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம். 2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம். இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை.
மாலை 6.30 லிருந்து 7.45 வரை கவிதை வாசிப்பு தொடரும். முனைவர் வ.வே.சு கவிதை அரங்கின் முடிவில் தன் கருத்துக்களை வெளிப்படுத்துவார்.
ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.
ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது.
தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். உங்கள் கவிதை மட்டுமல்ல. மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம். கூட்டத்தில்
கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Meeting ID: 837 9597 6618
Passcode: 413683