புயலே புயலே

  



Add cap
அழகியசிங்கர் tion


நாளை நீ திரும்பவும் 

கோரத்தாண்டவம் ஆடப் போவதாய்

சிலர் சொல்கிறார்கள்

உண்மையா..
2015 ஆம் ஆண்டு 

நீ வந்து ஆடிய ஆட்டத்தை

யாரும் மறந்திருக்க மாட்டார்கள்


தெரு முட்ட முட்டச் சாக்கடை கலந்த 

வெள்ள நீர்..

கீழே உள்ள சின்ன அறையில்

பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்களைப்

பதம் பார்த்துவிட்டாய்
நான் வைத்திருந்த விற்க வேண்டிய

புத்தகங்கள் ஏன் உன் கண்ணில் பட்டது.


சேர்த்து வைத்திருந்த முக்கிய புத்தகங்களையும்

அழித்தாய்.  படிக்கலாம் என்றும் எடுத்துப் பார்க்கலாம்

என்றும் நான் காத்திருந்தேன். 


நியாயமா புயலே

உனக்கு ஏதேதோ பெயர்கள் சூட்டுகிறார்கள்


உனக்குத் தெரியுமா?

நாளை என் பிறந்தநாள் என்று..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன