நிவர் புயல்
1.எங்கிருந்தோ பதுங்கி பதுங்கி
எங்களைத் துடிக்க விட்டாய்
2. எப்போதும் போல் தோன்றி
இந்த முறை
ஒன்றும்செய்யாமல் விட்டுவிட்டாய்
உமக்கு நன்றி. கருணை வைத்ததற்கு
3. உன் பாதை எங்கோ கிளம்பி
எங்கோ செல்வதுதானே
இந்த முறை மட்டும்
சரியான பாதையில்
பயணம்
செய்து விட்டாய் ஏன்?
4. உனக்கு யார் இந்தப் பேர் வைத்தது?
நிவர் என்று
என்னால் ஞாபகப்படுத்திக்கொண்டு
ஒவ்வொரு முறையும் சொல்ல முடியவில்லை
5.ஏற்கனவே கொரானா பயத்தில்
வீட்டில் இருக்கிறோம்
இன்னும்
உன் பயத்தால்
இன்னும் இன்னும்
இருக்கிறோம்.
6. நிவர் நீ வந்தாலும் வந்தாய்
நாங்கள் கவிதை எழுதப்
பாடுபொருளாக மாறிவிட்டாய்
6. நல்லது உன்னைப் பற்றிஎழுதப்பட்ட
கவிதைகளைப்
படித்துப் படித்து
நீ ஓட்டம் பிடித்து விட்டாய்.
26.11.2020 (வியாழன்)