அழகியசிங்கர்
2015 வெள்ளம் வந்தபோது எங்கள் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. என்னால் நம்ப முடியாத வெள்ளம். எங்கள் தெருவிற்கு அப்படியொரு வெள்ளம் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லை . இப்போது அடிக்கப் போகும் புயல் அந்த அளவிற்குப் பாதிப்பை நிச்சயமாகக் கொடுக்காது என்றுதான் நினைக்கிறேன்.
அந்த வெள்ளத்தைக் கொஞ்சம் திரும்பவும் பார்க்கலாம் என்றுதான் இந்த ஒளிப்பதிவைப் பதிவிடுகிறேன்.
2015ல் எங்கள் தெருவில் வெள்ளம் வந்தபோது எங்கள் வீட்டிற்கு எதிரில் எல்லோரும் நீந்திச் செல்கிறார்கள். நான் என் வீட்டிலிருந்து காமெரா மூலமாகப்படம் பிடித்தேன்.