அழகியசிங்கர்
சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமலிருந்த ஜெயகாந்தன் நண்பரான கே எஸ் என்று அழைக்கப்படுகிற டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வயது 83.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஜெயகாந்தனை அறியச் செய்தவர். பல கவிதை நூல்களை ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை அவருக்குண்டு.
சமீபத்தில் பலருடைய கவிதைகளைக் கொரானா குறித்து எழுதப்பட்டதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘லாக்டௌன் லரிக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
அவருடைய மரணம் இயற்கையானது
. கொரானாவால் இறக்கவில்லை. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்று காலை 11.30 மணிக்கு பெஸன்ட் நகர் மின் தகன மேடையில் இறுதிச் சடங்கு நடக்க உள்ளது.