இன்று தமிழவன் பிறந்த நாள்

 துளிகள் 149 – 

அழகியசிங்கர்

முபீனுடைய போஸ்டிங்கைப் பார்த்தவுடன்தான் இன்று தமிழவனின் பிறந்தநாள் என்று தெரிந்தது.
ஆரம்பத்தில் பங்களூர் செல்லும்போதெல்லாம் தமிழவன், பாவண்ணன், பா.கிருஷ்ணசாமி, நஞ்சுண்டன், மகாலிங்கம், ராமச்சந்திரன் என்றெல்லாம் ஒரு இடத்தில் கூடிச் சந்தித்துக் கொள்வோம்.
அதன்பின் நான் அங்கெல்லாம் போகும்போது யாரையும் ஒன்றாகச் சந்திக்க முடியவில்லை.  ஒரு இடத்திலிருந்து ஒரு இடம் போவது ரொம்பவும் சிரமமாகப் போய் விட்டது. 
யாரையாவது ஒருத்தரைச் சந்தித்தால் அவரை மட்டும் சந்திப்பதாக மாறிவிட்டது.  சிலசமயம் யாரையும் சந்திக்காமல் ப்ளாசம்ஸில் புத்தகங்கள் வாங்குவதோடு நின்றுவிட்டது.
‘யாருடனும் இல்லை’ என்ற என் முதல் கவிதை கொண்டு வரும்போது எனக்குத் தயக்கம் இருந்தது.  தமிழவன்தான் அணிந்துரை எழுதிக்கொடுத்தார்.  அப்போதுதான் புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர முயன்ற தருணம்.
அந்தப் புத்தகத்திற்கு தமிழவனைக் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார்.  அதன்பின் தமிழவனுடன்  எங்காவது சந்தித்துப் பேசுவதென்றால் எனக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார் நேரம் போவதே தெரியாது.
அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம் நான் போய்ப் பார்த்துவிடுவேன்.  ஆனால் சமீபத்தில் அவரைச் சுற்றி கூட்டம் அதிகமாகி விட்டது.  அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் கூட சென்னைக்கு வந்துவிட்டுப் போகிறாரென்று நினைக்கிறேன்.” ஆரம்பக் காலத்தில் அவருடைய புத்தகங்களுக்கெல்லாம் நான் விமர்சனக் கூட்டங்கள் சென்னையில் நடத்தியிருக்கிறேன். ஞானக்கூத்தன் கூட கலந்துகொண்டு அவர் நாவலைப் பற்றிப் பேசி உள்ளார்.  
2017 நவம்பர் மாதத்தில் அவரை ஒரு பேட்டி கண்டேன்.  பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் கீழ்.  அதை இங்குத் தர விரும்புகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள்.  அவருக்கு என் வாழ்த்துகள்.           

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன