அழகியசிங்கர்
இது 14வது கவிதை வாசிக்கும் கூட்டம். வரும் வெள்ளியன்று – 28.08.2020 நடக்க உள்ளது.
புதுமையாக இந்த முறை 10வரிகள் கொண்ட கவிதைகளாகக் கவிதை வாசிப்பதை ஏற்பாடு செய்துள்ளேன். பெங்களூர் இலக்கிய நண்பர் கிருஷ்ணசாமி நகுலன் குறித்து அறிமுகம் செய்தபின் நகுலனின் சில கவிதைகளையும் வாசிப்பார்.
கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு கவிஞர். சிறுகதை ஆசிரியர். கல்லூரியில் தமிழ் பயில்வுக்கும் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதில் பலரும் கலந்து கொண்டு கவிதை வாசிக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும். நிதானமாக இரண்டு முறை கவிதையைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும். பத்து வரி கவிதைக்குத் தலைப்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.
எந்த விதத்தில் ஒரு கவிதையை பத்து வரிக்குள் கொண்டு வர முடியுமென்பதைப் பார்க்கலாம்.
இதில் யாரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்கலாம். எந்த நிபந்தனையும் இல்லை.
வாசிக்கப்படும் சிறந்த கவிதைகளை நவீன விருட்சம் இதழில் வெளியிட விருப்பம்.
இதோ சூம் குறித்து விபரம் கொடுக்கிறேன்.
Time: Aug 28, 2020 07:00 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87484234690?pwd=dmdQa0xCenlBN3NaSE9nQmlta0tDUT09
Meeting ID: 874 8423 4690Passcode: 065953