அழகியசிங்கர்
எல்லோருக்கும் வணக்கம். இது 13வது கவிதை வாசிக்கும் கூட்டம். போன வெள்ளிக்கிழமை 12வது கூட்டம் பூனைகளைப் பற்றி வாசிக்கும் கூட்டமாக இருந்தது. 25பேர்களுக்கு மேல் கவிதைகள் வாசித்தார்கள். கூட்டம் நிறைவாக இருந்தது.
இதுவரை 60 கவிஞர்கள் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் வாசித்திருக்கிறார்கள். 21.08.2020 அன்றும் 6 கவிஞர்கள் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். 6 பேர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். இந்த மாதம் 15ஆம் தேதிதான் ந. பிச்சமூர்த்தி பிறந்தார். புதுக்கவிதையின் பிதாமகர் அவர். அவரை ஞாபகப்படுத்தும் விதமாக இந்தக் கவியரங்கத்தின் பெயரை ந.பிச்சமூர்த்தி கவியரங்கக் கூட்டம் என்று பெயர் சூட்டலாமென்று நினைக்கிறேன்.
வரும் வெள்ளியன்று கவிதை வாசிப்பவர்கள் பட்டியலை இங்குத் தருகிறேன்.
1. கே.ஜெயந்தி 2. எம்.ராமச்சந்திரன் 3. விஜய கல்யாணி 4. எஸ்.வி. வேணுகோபாலன் 5. கவி செல்வா 6. கலக்கல் கந்தசாமி.
கருத்துரை வழங்குபவர்கள்
1. மன்னை ஜீவிதா அரசி 2. ராய செல்லப்பா 3. அன்புச் செல்வி 4. ஆர்.கே 5. நாகேந்திர பாரதி 6. கபிலன்
இந்தக் கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் வ.வே.சு.
கூட்டம் சரியாக ஒன்றரை மணி நேரம் நடக்கும். ந.பிச்சமூர்த்தியைப் பற்றி குறிப்புகள் வழங்குபவர் அழகியசிங்கர். பிச்சமூர்த்தி கவிதைகளை வாசிப்பவர் அழகியசிங்கர், மையம் ராஜகோபாலன்.
Time: Aug 21, 2020 07:00 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87629115758
Meeting ID: 876 2911 5758No Password