அழகியசிங்கர்
எழுத்து பத்திரிகை ஞானக்கூத்தனின் திறமையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 1970 வெளிவந்த ‘கசடதபற’ என்ற சிற்றேட்டில்தான் அவருடைய படைப்புகள் எல்லாம் வெளிவந்தன.
‘தமிழை எங்கே நிறுத்தலாம்’ என்று அவருடைய முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து கசடதபறவில் அவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.
ஜனவரி 1971ஆம் ஆண்டு ‘கசடதபற’ இதழில் (4வது இதழ்) அவருடைய மொழிபெயர்ப்பு ஒன்று வெளிவந்தது. மொத்தமே 3 வரிகள்தான். ஒரு தாஓ கவிதை என்ற தலைப்பில். இங்கே வாசிக்கத் தருகிறேன்.
ஒரு தாஒ கவிதை
“ சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.