அழகியசிங்கர்
சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதைப் பற்றிக் கூடிய சீக்கிரத்தில் என் அறிவுக்கு எட்டியவரை எழுதலாமென்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பெயர் தாவோ தே ஜிங் (தாவோயிசத்தின் அடித்தளம்) லாவோ ட்சு என்பவர் ஆசிரியர். அதைச் சாரமும் விசாரமும் செய்திருப்பவர் சந்தியா நடராஜன். அந்தப் புத்தகத்திற்கு இந்த ஆண்டு ஆத்மாநாம் விருது கொடுத்து கௌரவம் செய்திருக்கிறார்கள். விருது பெறப்போகிறவருக்கும் வாழ்த்துக்கள். விருது கொடுக்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள். அடிக்கடி நானும் நடராஜனும் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோம். யார் கண்ணோ பட்டுவிட்டது. 4 மாதங்களாகப் பார்க்கவில்லை. கொரோனா பிரித்து விட்டது. இது குறித்தும் தாவோ எதாவது எழுதியிருப்பார். கண்டு பிடிக்க வேண்டும்.