அழகியசிங்கர்
யானை என்ன யானை
கிருஷ்ணன் நம்பி
யானை என்ன யானை?
யானை கொம்பன் யானை!
யானை மீது யாரோ?
யானை மீது ராஜா!
யானை என்ன ஆச்சு?
யானை செத்துப் போச்சு!
ராஜா என்ன வானார்?
நாட்டு மன்னர் ஆனார்!
நாட்டு மன்னர் எங்கே?
நாட்டு மன்னர் நாமே!
நாமும் அவரும் ஒன்றோ ?
நம்முள் ஒருவர் ராஜா!
நன்றி : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு) – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் – பக்கம் : 480 – விலை ரூ.350 – முதல் பதிப்பு : நவம்பர் 2009