மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 143

அழகியசிங்கர்  

முதியோர் உள்ளம்…!

ஆர்.கே.இராமநாதன்

வேளைக்குக் கொஞ்சம்போல்

உணவு.

உறங்க ஒரு கட்டில்

நடக்கக் கொஞ்சம் பாதை

வழிபட அருகே ஒரு தெய்வம்

இருவேளைக் காப்பி

ஏதோ ஒரு நாளிதழ்

மூட்டுவலித்தைலம்

சிறு உபாதை தீர மாத்திரை

காலை மாலையில் இல்லத்தாரின் அன்பு விசாரிப்பு…!

எல்லாமும் கிடைக்கும்

முதியோர் இல்லமே நம்வீடு எனும் முடிவை நோக்கி

நகரத் தொடங்கிவிட்டனர்

இன்றைய சீனியர் சிட்டிசன்கள்…!

நன்றி : தென்றல் புழங்கிடும் தெரு – ஆர்.கே.இராமநாதன் – குவிகம் பதிப்பகம் – விலை : ரூ.100 -தொடர்புக்கு: 9600015880 பக்: 122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன