அழகியசிங்கர்
ஒரு போதும்
பவித்ரன் தீக்குன்னி
மொழிபெயர்ப்பு : என்.டி.ராஜ்குமார்
அம்மாவும் அக்காவும் குடிசையும்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது
மண்ணெண்ணை மணக்கின்ற
இருட்டிலிருந்து
எழுந்துவந்த குழந்தை
இறைவனிடம் கேட்டது
ஒருபோதும் தேயாத ஒரு பென்சில்
வேண்டுமென்று
இறைவனும் நல்ல ஒரு பென்சிலை
கொடுத்துவிட்டுச்
சொன்னான்
பத்திரமாக வைத்துக்கொள்
ஒருபோதும் எழுதக்கூடாது.
நன்றி : பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் – மொழிபெயர்ப்பு என்.டி.ராஜ்குமார் – வெளியீடு : புது எழுத்து – 3/167 ஸ்ரீராமுலு நகர், காவேரிப்பட்டிணம் 636 112, கிருஷ்ணகிரி மாவட்டம் – பின்கோடு : 9842647101 – பக் : 80 – விலை : 75 – வெளியான ஆண்டு : 2010