அழகியசிங்கர்
இன்று குமுதம் பத்திரிகையில் என் நாவல் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý குறித்துபு(து)த்தகம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள். குமுதம் ஆசிரியருக்கு நன்றி.
இந்த ஆண்டு என் இரண்டாவது நாவலைக் கொண்டு வருவதென்று பெரிய முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன். இந்த ஆண்டு நாவல் யுகம்போல் தோன்றுகிறது. புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட நாவல்களை வாங்கியிருக்கிறேன்.
குமுதம் கீழ்க்கண்ட குறிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
‘தனி இதழ் நன்கொடை ரூ.20’ என்ற நாவலைப் பற்றி 5.2.2020 குமுதம் இதழில் குமுதம் நூலகத்தில் பு(து)த்தகம் என்ற பகுதியில் வெளிவந்த குறிப்பு.
‘சிற்றிதழ்கள் பெருகியிருந்த காலம் மறைந்து அருகிவிட்ட இக்காலத்தில், சிற்றிதழ் ஒன்றினை நடத்தும் ஆசிரியர் முதல் அதில் எழுதுவோர், வாசகர் என அத்தனை பேரின் அத்தனை கணங்களையும் கண் முன் நிறுத்தும் நாவல்/நடையிலும் நயத்திலும் நவீனத்துக்கு ஏற்ற நளினமான மாற்றங்களுடன் புதிய உத்தியோடு சுவாரஸ்யமான கதையாக நகர்கிறது. படிக்கப் படிக்க, நிஜமா? கற்பனையா? என்ற கேள்வி நிறைய முறை மனசுக்குள் எழுவது நிஜம்!’