அழகியசிங்கர்

எப்போதும் புத்தகக் காட்சியில் இரட்டை அரங்கை வாடகைக்கு எடுக்கத் தைரியம் வருவதில்லை. கூடுதலாக அரங்கை எடுத்தால் கூடுதலாக வருமானம் வரவேண்டும். அப்படியெல்லாம் பணம் கொட்டி விடாது என்று தோன்றும்.
புத்தகம் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
இன்று அரங்கு குலுக்கல். எந்த எண் எனக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். கடைசியில் கூப்பிட்டார்கள். 430வது அரங்கு எண். கூட்டு எண்ணிக்கை 7. ஏழாவது வரிசை. நான் முடித்துக்கொண்டு வீடு வரும்போது 7 மணி. இது 43வது சென்னை புத்தகக் காட்சி. அதன் கூட்டுத் தொகை 7.
பிரமிளுடன் நட்பாகப் பழகியதால் அவருடைய எண் கணித சாஸ்திரத்தை அரைகுறையாய் தெரிந்து வைத்திருக்கிறேன். ஏழு நல்ல எண். தத்துவவாதி எண். எதற்கும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கக் கூடிய எண்.
எனக்கு புத்தகக் காட்சி என்றால் ஜாலியாகப் பொழுது போக்கிற இடம்.