அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வந்த புத்தகம் துளிகள் – தொகுதி 1.
18.08.201 லிருந்து 02.06.2019 வரை உள்ள 54 கட்டுரைகள் கொண்ட நூல் இது. கட்டுரைகள் அளவு ரொம்ப குறைவாக இருக்கும். அரை பக்கம், கால் பக்கம், முக்கால் பக்கம் ஒரு பக்கம் என்று மிகக் குறைந்த அளவிலான கட்டுரைகள்.
வாழ்க்கையில் நடந்த நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளின் கதம்ப மாலைதான் இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள். ஒருவர் இதை எடுத்து வாசித்தாரென்றால் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் இப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தையும் புரட்டி வைத்து விடலாம். பின் இன்னொரு பக்கத்தை இன்னொரு நாள் எடுத்துப் படிக்கலாம் இது ஒரு வகையான டைரி என்று குறிப்பிடலாம்.
கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
üதுளி : 20 – மறக்க முடியாத பிரபஞ்சன்
பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசலில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம். அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் இருவரும் பேசுவோம். பிரபஞ்சன் சிறுகதைகளின் மீது காதல் கொண்டவர். புதுமைப்பித்தன் கதைகளை எப்படி ரசிப்பது என்பதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் அவர் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். தொடர்ந்து வாசிப்பது எழுதுவதுதான் என்று அவர் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து இருந்திருக்கிறார்.
பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சந்திக்கும் போது அவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு காட்சி அளிப்பார். பின் இருவரும் சேர்ந்து காப்பி குடிப்போம். அவரைப் பார்த்து நான் விருட்சம் இதழ் பிரதியைக் கொடுப்பேன். உடனே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார். இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்காமல் கொடுத்தாலும் அவருடைய நல்ல பழக்கம் சிறு பத்திரிகைகளை மதிப்பது…
(21.12.2018 அன்று எழுதியது)
இதை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதன் விலை ரூ.90 தான்.
108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.90. தள்ளுபடி சலுகையாக ரூ.70க்குக் கிடைக்கும்.