அழகியசிங்கர்
நாளை காலையில் டபுள் டக்கரில் பங்களூர் செல்கிறேன். மூன்றாம் தேதி திரும்பி வந்துவிடுவேன். ஒன்றாம் தேதி என் பிறந்தநாள். பங்களூரில் இருப்பேன். ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குப் போகிறேன். அது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
பிளாசம்ஸ் என்ற புத்தகக் கடைக்குப் போகிறேன். புத்தகம் எதாவது வாங்குவேன். பங்களூரில் சில நண்பர்களைத்தான் சந்திக்க முடியுமென்று நினைக்கிறேன். அதுவும் திங்கட் கிழமை ஒருநாள்தான் பார்க்க முடியும்.
போன முறை பங்களூர் போய் வாங்கிவந்த புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை. இந்த முறை பங்களூரிலிருந்து திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டு வரும் புத்தகங்களை சிறிதளவாவது படிக்க வேண்டும். பராசக்தி அருள் புரியவேண்டும்.