அழகியசிங்கர்
இன்று காலையில் தினமணி நாளிதழை பார்த்தவுடன் நான் புதிதாகக் கொண்டு வந்த ‘காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்’ என்ற ஸ்ரீதர்-சாமா புத்தகம் மதிப்புரை நூல் அரங்கம் பகுதியில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் தொலைபேசி எண் 044-24710610. இது நவீன விருட்சம் பெயரில் உள்ள தொலைபேசி எண். நான் அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் புத்தகம் குறித்து விசாரணை இருக்குமென்று நினைத்தேன். எதுவுமில்லை. ஏன்எனில் கடந்த 10 நாட்களாக என் வீட்டிலுள்ள போன் சரியில்லை இதற்குப் புகாரும் கொடுத்திருந்தேன். ஏன் பிஎஸ்என்னில் உள்ள முகநூல் நண்பர் மந்திரமூர்த்தியும் எனக்காக புகார் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு பிரயோஜனுமில்லை. சற்றுமுன் அதாவது மதியம் 2 மணிக்கு மேல் வந்திருந்து போன் மாத்திரம் சரிசெய்துவிட்டு அவசரம் அவசரமாக போய்விட்டார்கள். ஆனால் நெட் சரியில்லை.
பிஎஸ்என்லின் சேவை வருத்தமளிக்கிறது. சீக்கிரமாக எல்லோரும் பிஎஸ்என்லைவிட்டு விருப்ப ஓய்வு போகப் போவதால் இந்தத் தொய்வா என்பது தெரியவில்லை.
ஆனால் தினமணியில் வந்த மதிப்புரைக்குக் குறைந்தது 10பேர்களாவது போன் செய்வார்கள். ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அதாவது கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை.
தினமணியில் வந்த மதிப்புரை.
காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்
” காஞ்சி மகா பெரியவர் ஒரு நடமாடும் தெய் வம். அவர் திருவாக்கிலி ருந்து வெளிவந்த உபதேச மொழிகள் ஏராளம் என்றாலும், அவற்றி லிருந்து முதன்மையான சில உபதேசங்களையும் நிகழ்வுகளையும் முத்துக் குளிப்பதைப் போல குளித் துத் தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீதர் சாமா.
நம் பாரத தேசத்தில் இளம் வயது முதலே நம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறை வணக் கம், ஆத்ம தியானம் என்கிற நல்ல பழக்கம் இல்லா மலிருந்து வருவது குறித்து எடுத்துரைக்கும் மகா பெரியவர், “நெருப்பை வாயாலே ஊதப்படாது என்பதற்குக் கூட சாஸ்திரம் சொல்கிற காரணம், வாயால் ஊதுவதால் எச்சில் காற்று அக்கினி பகவான் மேலே பட்டு அபசாரமாகிவிடும் என்ப தால்தான்” என்கிறார்.
மேலும், ‘சிவ’ என்கிற சொல்லில் (ஆண்பெண் பெயர்களில் உள்ள அக்ஷரங்கள்) உள்ள தத்துவத்தை உணர்த்தும் இடம் அற்புதம்.
“கல்வியின் முதல் பிரயோஜனமான விநயம் ஏற் படவேண்டும். அடக்கம் இல்லாதபடிப்புபடிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும் படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்ட வனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை. முன்பு நம் மாணவர் களிடம் குருபக்தி இருந்தது. தற்போது அடியோடு போய்விட்டது” என்று கூறுவதுடன், “குருகுலக் கல்வியும், குருபக்தியும்தான் இன்றைய மாணவர் களின் கோளாறைத்தீர்க்கின்ற பெரிய அருமருந்து என்கிறார்.
“தரமான வாழ்க்கை வாழ்வது என்பது மன நிறைவோடு இருப்பதுதான். பூரண சந்தோஷம் பழைய தர்மங்களை நாம் பூரணமாக அநுஷ்டிக்குமாறு நம்மைச் செய்து கொள்ளும் போதுதான் உண்டாகும். மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகிற காரியங் களை விட்டுவிட்டு, நிம்மதியோடு நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு மனஸார முயற்சி செய்ய வேண்டும்” – இப்படி நூலில் கோடிட்டு வைத்துப் படிக்க வேண்டிய வைர வரிகள் ஏராளம் உள்ளன. திருமணம் மற்றும் பிறந்த நாளில் பரிசளிக்க வேண்டிய அற்புதமான அருள்மொழி நூல் இது.”