05.11.2019
துளி – 71 இந்த விலையில் நிச்சயமாகக் கிடைக்கவே கிடைக்காது
அழகியசிங்கர்
நானும் நண்பரும் ஏ கே கோபாலன் பப்ளிஷர் குடும்பத்தாரைப் போய்ப் பார்த்தோம். இப்போது ஏ கே கோபாலன் இல்லை. அவர் புதல்வர் ஜி கிருஷ்ணமூர்த்தியும் இல்லை. அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் இருக்கின்றன. நாங்கள் தற்செயலாக மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் புத்தகத்திற்காகப் போனோம். அங்கு இன்னும் சில புத்தகங்கள் வருடக் கணக்கில் யார் கண்ணிலும் வெளிச்சம் படாமல் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாரதியார் புத்தகம்.
849 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாமே இருக்கின்றன. இப்படி ஒரு புத்தகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இரண்டாயிரத்து ஒன்றில் வந்த புத்தகத்தைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. எல்லாம் பொடி எழுத்தில் எப்படி அச்சடித்தார்கள் என்பதே தெரியவில்லை. கைக்கு அடக்கமாக இருக்கிறது. பாரதி முழுவதும் கைக்கு வந்துவிட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிறேன்.
இதன் விலை ரூ.125தான். இந்த விலையில் நிச்சயமாக இந்தப் புத்தகம் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகக் குறைவான பிரதிகள் உள்ளன. பாரதியாரின் முழு கவிதைகள், முழு கட்டுரைகள், முழு கதைகள் எல்லாம் இருக்கின்றன. பாரதி மொழி பெயர்த்த பகவத்கீதையும் இருக்கிறது. வேண்டுவோர் கீழ்க்கண்ட கணக்கில் பணத்தைச் செலுத்தவும். கூடவே ரிஜிஸ்டர்டு தபாலில் அனுப்பி ரூ.50 சேரத்து அனுப்பவும். மொத்தம் ரூ.175 அனுப்புங்கள் பணத்தை அனுப்பிவிட்டு தொலைப்பேசியல் தகவல் தரவும்.
NAVINA VIRUTCHAM ACCOUNT INDIAN BANK, ASHOKNAGAR BRANCH ACCOUNT No. 462584636 IDIB Number. IDIB000A031 CONTACT : AZHAGIYASINGAR – 9444113205