மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 124

அழகியசிங்கர்

வியாகுலன் கவிதை

அழகை
காதலை
சிறகில்
சுமந்து 
திரியும்
வண்ணத்துப் பூச்சி

சிறகுகளில் துடித்திருந்தன
இருதயங்கள்

பூவிலொன்று
அந்தரத்திலொன்று
ஒன்றின்மேல் மற்றொன்றென
பொழுதுகளின் அற்புதங்களோடு

சொற்ப நாள் வாழ்வெனினும்
அழகு காண்பித்து மறையும்.

நிறமிழந்த
சிறகுகளை
எறும்புகளிழுத்துச்
செல்லும்

குழந்தைகளின்
விளையாட்டுகளுக்கானது
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்க்கை

நன்றி : கல்மடந்தை – வியாகுலன் – அசரம், மனை எண் : 1 நிரம்லா நகர், தஞ்சாவூர் 613 007 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2002 – விலை : ரூ.35.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன