ஓர் அறிவிப்பு

அழகியசிங்கர்

விருட்சம் வெளியீடாக நீல பத்மநாபனின் சாயங்கால மேகங்கள் என்ற கவிதைத் தொகுதி வந்துள்ளது. 
விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள நான்காவது கவிதைத் தொகுதி இது. 22 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  விலை : ரூ.50 மட்டும்.  இரா முருகன் வாசக உரை எழுதியிருக்கிறார்.   நீல பத்மநாபன் தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைள் என்று எழுதிக்கொண்டு வருபவர்.  சிந்தை முட்கள் என்ற தொகுப்பிற்குப் பிறகு வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு   சாயங்கால மேகங்கள்.  
நம்பிக்கை என்ற கவிதையில் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
புத்தக விழாக்களுக்குச் சென்றால்
வாங்க வருபவர்களை விட
விற்க வருபவர்களே அதிகம்
கதை கவிதை அரங்குகளுக்குச் சென்றால் 
கேட்க வருபவர்களைவிட
கதை கவிதை வாசிப்பவர்களே அதிகம்....

என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.


புத்தகம் வாங்க விரும்புவர்கள். 9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன