அழகியசிங்கர்
நடுமதியத்தில்
தூரன் குணா
நடுமதியத்தில் புகைவண்டி நிலையத்தின் நடைபாதைக்கூரையின் கீழ் முன் நாற்காலியில் கருநிற முதுகு பாதி தெரிய உயரக்கொண்டை இட்டிருந்தவளின் அடர்வண்ண பூச்சணிந்த நீளநகங்கள் பின் நீண்டுதண்டுவடக் குழிவில் ஒட்டியிருந்த என் கண்களைப் பிடுங்கி தண்டவாளங்களுக்கிடையில் எறிந்தன
வெயிலில் நெளியும் தண்டவாளங்கள் அதிரத்தொடங்கிய முதல் நொடியில்கீழொன்றும் மேலொன்றுமாய் பிணைந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளை கண்ட காட்சியை கடைசி முறையாய் நினைவிலிருந்து மீட்டிவிட்டு அணையத்துவங்கின கண்கள்.
நன்றி : கடல் நினைவு – தூரன் குணா – வெளியீடு : தக்கை – 15 திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3 – முதல் பதிப்பு : ஜøலை 2012 – விலை : ரூ.35 – பக்கங்கள் : 80