தெரியாமல் நடந்த தவறு

அழகியசிங்கர்

100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடித்தக கவிதைகள் தொகுதி 1.   இதே இரண்டாவது தொகுதியையும் ஆரம்பித்தாகிவிட்டது.  

முதல் தொகுதியில் திசிசடை கவிதையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது.  திரிசடை என்ற எழுத்தாளர் நகுலனின் சகோதரி.  அவருடைய கவிதைகள் முழுவதையும் கோபால்சாமி என்பவர் வெண்ணிலா என்ற புனைபெயரில் தேர்ந்தெடுத்துள்ளார்.  அப்படி தேர்ந்தெடுக்கம்போது தவறுதலாக விருட்சம் இதழில் வெளிவ்ந்த பசுவய்யாவின்  நேற்றைய கனவு  என்ற கவிதையை திரிசடை கவிதைகளுடன் சேர்த்து விட்டார்.  இந்தத் தொகுதி தொகுக்கும்போது திரிசடை உயிரோடு இருநதிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது.  திரிசடையின் கணவர் சுவாமிநாதன் மனைவியின் நினைவாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.  

மனதுக்கு பிடித்த கவிதைத் தொகுதி 1 என்ற கவிதைத் தொகுதி மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்படுகின்றன.  அதனால் இந்தத் தவறு நீக்கப்பட்டுள்ளது.  இனிவரும் தொகுதியில் திரசடையின் உண்மையான கவிதை மட்டும் நீடிக்கும்.  இதோ நான் தேர்ந்தெடுத்த திரிசிடை கவிதை.

சிலந்தி

சிலந்தி ஒன்றைக் கண்டேன்
மேலே சுவரிலும் இல்லை
கிழே தரையிலும் இல்லை
சுவாமி அறையில்
வெள்ளித் தாம்பாளத்தில்
வண்ணமிக்க இழைக் கோலமாம்
இருதயக் கமலத்தில் வைத்திருக்கும்
எரியும் வெள்ளி குத்துவிளக்கின் அருகில்
கருகருவென்று
வெள்ளைக் கோலத்தின் மேலே
எட்டுக்கால்களோடு சுற்றிச்சுற்றி வரும் சிலந்தி..
காலை மாலை விளக்கு ஏற்றும் நேரமெல்லாம்..
அடியில் பிரதட்சிணம் செய்யும் இச் சிலந்தி
உன் மாயையையும்
காளஹஸ்திக் கோவிலையும்
நினைத்துக்கொள்வேன்

இன்று விளக்கு வைக்கும் நேரம்
என் சிலந்தி
அசைவற்றுக் கிடந்ததைக் கண்டேன்.
உன் காலடிகளை நம்பி ஒரு சில நாட்கள்
வாழ்ந்த சிலந்திக்கு
நீ முக்தி யளித்ததாகவும் நினைத்தேன்
ஆனால் எனது உள்ளம்
அதன் ஓடி ஆடிய கால்களைத் திரும்பத்
திரும்ப நினைப்பதும் ஏனோ?

சிலந்தியின் கதை முடிந்தாலும்
என்மனம்போடும்
சிலந்தி வலைக்குப் பெயர்தான் என்னவென்று
விளகம் தருவதும்
யாரோ? என்றோ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன