அழகியசிங்கர்
11. இப்போது என்ன புத்தகம் படிக்கிறீர்கள்?
அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கி வந்த இன்னொரு புத்தகம். புத்தகம் பெயர் முராகாமியின் இன்னொரு நாவல் üகில்லிங் காமென்டேடர்.ý முடிக்க இன்னும் 100 பக்கங்கள் இருக்கிறது. படித்து முடித்தவுடன் இங்கே வைத்துவிட்டுப் போய்விடுவேன். கின்டலில் 15 நாட்களுக்கு ஓரம் பாமுக்கின் ரெட் ஹய்ர்டு உமன் நூலகத்திலிருந்து எடுத்துள்ளேன். படித்துக்கொண்டிருக்கிறேன்.
12. நீங்கள் முடிக்க வேண்டிய விருட்சம் பத்திரிகையை முடித்து விட்டீர்களா?
முடித்துவிட்டேன். 109வது இதழ். இங்கே 100 பக்கங்கள் வரை சரி செய்து வைத்திருக்கிறேன். சென்னையில் அச்சடித்து விடுவேன். இந்த மாதத்திற்குள் இதை எப்படியாவது கொண்டு வர வேண்டும்.
13. உங்களைச் சுற்றிலும் பல அநிதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் உங்களைப் பதட்டமடையச் செய்யவில்லையா?
நிச்சயமாக. யாராக இருந்தாலும் பதட்டமடையச் செய்யத்தான் செய்யும். நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆராய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கருத்து சொல்வதைப்போல் அபத்தமும் இதில் இருக்கிறது. இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.
14. அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவில் 2 மாதம்தான் தங்கியிருந்தேன். 2 மாதங்களை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஒரு சுதந்திரமான நாடாக நான் நினைக்கிறேன். இங்கே இரவு 12 மணிக்குமேல் கூட பெண்கள் தனியாக கார் ஓட்டிக்கொண்டு வர முடிகிறது. லாஸ் வேகாஸ் மாதிரியான இடத்தைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
15. இனி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் சொல்லியாகிவிட்டது என்று தோன்றுகிறது.