அழகியசிங்கர்
ஒவ்வொரு வாரமும் குவிகம் இல்லத்தில் அளவளாவல் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருபவர்கள் கிருபானந்தனும், சுந்தர்ராஜன் என்ற நண்பர்கள். இந்த மாதம் 3 ஆம் தேதி கிருபானந்தன் அமெரிக்கா சென்று விட்டார். போகும்போது வரும் பத்தாம் தேதி ஒரு கூட்டம் நடத்த என்னிடம் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அமெரிக்கா சென்று திரும்பிய சுந்தர்ராஜன் சென்னையில் இந்த வாரம் இல்லை என்பதால் நான் பொறுப்பேற்றுக்கொண்டு கவிஞர்கள் கவிதைகள் வாசிக்கும் கூட்டமொன்றை நடத்திúன்ன.
இக் கூட்டத்தில் எல்லாவித கவிஞர்களையும் கூப்பிட்டுப் பேச முயற்சி செய்தேன். அதில் ýஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது. நான் மரபுக் கவிதைகளிலிருந்தும் ஹைக்கூ கவிதைகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டாலும், அப் பிரிவுகளில் என்ன மாதிரியான கவிதைகள் வாசிக்கப் படுகின்றன என்ற எண்ணமும் என்னிடம் தோன்றாமல் இல்லை.
நான் எதிர்பார்த்தபடியே நான்கந்து போர்கள்தான் கவிதைகள் வாசித்தார்கள். முதலில் ஒவ்வொருவரும் ஒரு கவிதை வாசித்தோம். முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனித்தேன். கவிதை வாசிக்க வந்த பானுமதி அவரகள் கவிதையைப் பாடினார்கள். பொதுவாக தமிழ் கவிதையில் பாடும் வழக்கம் கிடையாது. இது வித்தியாசமாக இருந்தது. புதுக்கவிதை என்பது மதம் சார்பற்ற கவிதை. புராணம் எல்லாம் கவிதையாகக் கொண்டு வர மாட்டார்கள். ஆனால் ஒருவர் புராணக் கதையை எடுத்து கவிதையாக வாசித்தார்கள். எல்லாம் புது அனுபவமாகவும் சிறப்பாகவும் இருந்தது. 4 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஆறு மணிக்கு முடிந்தது. ஆடியோவில் பதிவு செய்த நான் ஒரு புகைப்படம் எடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்து விட்டேன்.