–
அழகியசிங்கர்
அணு முட்டை
மாலதி மைத்ரி
ஒரு குடம் நீரை
ஒரு கூடை மீனை
ஒரு மூட்டை தானியத்தை
ஒரு கட்டு புல்லை
ஒரு சுமை விறகை
சுமப்பது போல்
அவள் கர்வத்துடன்
உலகைச் சுமந்தலைந்தாள்
பெரிய தலையுடன்
ஒளிரும் வால் நட்சத்திரமாய்
வசீகரமாய் இருந்தாள்
தன் குஞ்சுக்கு
இரையூட்டும் பறவையென
உலகை ஊட்டிக் காத்தாள்
ராட்சஸப் பறவையாய் வளர்ந்த அது
அவள் தலைமேல்
அணுவுலையை
முட்டையிட்டு அடைக்காக்கிறது.
நன்றி : முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை – மாலதி மைத்ரி – பக்கங்கள் : 92 – விலை : ரூ.90 – அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3 முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110 – பேசி : 998454175, 9599329181