துளி : 21 – அரை மணி நேரத்தில் படித்து விடலாம்

அழகியசிங்கர்

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு என்னுடைய புத்தகங்களே நான்கு கொண்டு வருகிறேன். போன ஆண்டு மொத்த சிறுகதைகளையும் சேகரித்துக் கொண்டு வந்ததுபோல் இந்த ஆண்டு என் மொத்த கவிதைகளையும் சேகரித்துள்ளேன். 300க்கு மேற்பட்ட கவிதைகள். 500 பக்கங்கள் . முதன் முறையாக நான் எழுதிய தன்புனைவு நாவல் (200 பக்கங்கள்) ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் ஏற்கனவே வந்து விட்டது. இதற்கு அடுத்தாற்போல் எதையாவது சொல்லட்டுமா என்ற கட்டுரைத் தொகுப்பு ஒன்று வருகிறது. அமிருதா என்ற பத்திரிகையில் ஐந்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரைத் தொகுப்பு இது. அதேபோல் இன்னொரு கட்டுரைத் தொகுப்பு விசிறி சாமியாரும் பிரமிளும்.
விசிறி சாமியாரிடம் என்னை அழைத்துக்கொண்டு அறிமுகப் படுத்தியவர் பிரமிள். ஆனால் ஒருமுறைதான் நெருக்கமாக நான் விசிறி சாமியாரைப் பார்த்தேன். அந்த அனுபவத்தை நான் எழுதினாலும் பிரமிள் பற்றித்தான் அதிகமாக எழுதி உள்ளேன். இந்த நான்கும்தான் என்னுடைய புத்தகங்கள். இந்தப் புத்தகங்களுடன் ஏற்கனவே 3 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து விட்டேன்.
ஒரு புத்தகம் வேணு வேட்டராயன் என்பவரின் üஅலகில் அலகுý என்ற புத்தகம். üஅப்பாவின் நாற்காலிý என்ற வளவ.துரையன் கவிதைத் தொகுதி. பின் இன்னொரு முக்கியமான கவிதைத் தொகுதி üமனதுக்குப் பிடித்த கவிதைகள் தொகுதி 1 என்ற 100 கவிஞர்களின் 100 கவிதைகள் புத்தகம். தெலுங்கு சிறுகதைகள் தொகுதி 1, 2. சில க நா சு புத்தகங்கள் என்று மும்முரமாகப் புத்தகம் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்கள் தயாரிக்கும் தறுவாயில்தான் விருட்சம் 107வது இதழ் கொண்டு வந்துவிட்டேன்.
வழக்கம்போல் 80 பக்கங்கள். விருட்சம் இதழை ஒருவர் படிக்கவேண்டுமென்று நினைத்தால் அரை மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம். ஆனால் படித்து முடித்தபின் இந்தப் பத்திரிகையைத் தூக்கி எறியவேண்டுமென்ற நினைப்பு யாருக்கும் வராது. அவ்வளவு சுலபமான பத்திரிகை நவீன விருட்சம்.
இந்த இதழில் நான் புதிய முயற்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். வரும் இதழ்களில் இந்த முயற்சி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
வழக்கம்போல் எழுதியவர்களின் லிஸ்ட் தர விரும்புகிறேன்.

1. புதுக்கவிதையின் எல்லைகள் – க.நா.சு
2. ஒரு கிழவன் – சிறுகதை – நகுலன்
3. நினைவாக – கட்டுரை – தேவகோட்டை வ மூர்த்தி
4. இருத்தல் – கவிதை – பானுமதி ந 5. ஜான்சி கவிதை
6. தொடர்ந்து தோற்கும் புவிக்கடவுள் -பிரேமா பிரபா
7. தமிழ் வளர்த்த சான்றோர் – ஓர் அறிவிப்பு
8. சின்ன தாத்தா – சிறுகதை – தி.பாலாஜி
9. கடிதம்
10. எது நிஜம் – கவிதை – மஹேந்திரவாடி உமா சங்கரன்
11. மரகதம் – சிறுகதை – ஸிந்துஜா
12. புத்தக விமர்சனம்
13. ஒப்பனை நகரம் – கவிதை – பிரபு மயிலாடுதுறை
14. அதிகாரத்தின் எல்லை – கவிதை – இதய சகி
15. புத்தக விமர்சனம்
16. புத்தக விமர்சனம்
17. அம்மாவின் முடிவு – சிறுகதை – என் செல்வராஜ்
18. வெறும் பேச்சு – கவிதை – அழகியசிங்கர்
19. உரையாடல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன